நான்காம் முத்திரை THE FOURTH SEAL 63-03-21 பிரான்ஹாம் கூடாரம்,ஜெபர்ஸன்வில், இந்தியானா 1. மாலை வணக்கம். ஜெபத்திற்காக நாம் சற்று தலைவணங்கலாமா? 2. கிருபை பொருந்திய எங்கள் பரம தந்தையே, மற்றுமொரு நாளுக்காக உமக்கு நன்றி செலுத்த நாங்கள் மறுபடியும் இன்றிரவு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடம் வருகிறோம். இப்பொழுது இன்றிரவு நடக்கவிருக்கும் ஆராதனையில் உம் ஆசீர்வாதங்களைக் கோருகிறோம். நாங்கள் ஊக்கத்துடன் ஆராய்ந்து கொண்டிருக்கும் இவ்விஷயங்களின் அர்த்தத்தைப் பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களுக்கு வெளிப்படுத்துவாராக. ஓ, தேவனே, வார்த்தையின் பேரில் ஐக்கியங்கொள்வதை நாங்களெல்லாரும் விலையுயர்ந்த ஒன்றாகக் கருதி, முடிவில் இவ்விடத்தை விட்டுச் செல்லும்போது, ''வழியிலே அவர் நம்முடனே பேசினபோது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?” என்று நாங்கள் சொல்வதற்குக் கிருபை அளியும். நீர் செய்த யாவற்றிற்கும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் பிரயாணத்தில் எங்களுடனே தங்குவீர் என்று நம்புகிறோம். இவை யாவையும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 3. இன்றிரவு மறுபடியுமாக ஆராதனைக்கென்று கர்த்தருடைய வீட்டில் வருவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன். நாம் அனைவரும் சந்தோஷப்படுகிறோம். நான் மிகவும் மகிழ்ச்சியுடையவனாய்... 4. இன்று பேச வேண்டுவதற்கு வெளிப்பாடு கிடைக்காதென்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் முடிவில் அதன் அர்த்தம் வெளிப் பட்டது. இந்த மங்கின நிறமுள்ள குதிரையைக் குறித்து இரகசியம் வெளிப்பட்டதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். சவாரி செய்யப்படும் நான்கு குதிரைகளில் இது கடைசி குதிரையாயிருக்கிறது. இக்காலத்தில் சபைக்கு அளிக்க அவசியமுள்ள முக்கியமான செய்திகளில் இது ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 5. அடுத்த முத்திரையின் இரகசியம் என்னவென்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும் அவர் ஒவ்வொன்றாக வெளிப்படுத்துகிறார். அவர் எவ்வாறு வெளிப்படுத்துகிறாரோ, அவ்வாறே அதை நான் சபைக்கு அளிக்கிறேன். 6. தேவன் அளித்துள்ள ஆசீர்வாதங்களினிமித்தம் நீங்கள் மகிழச்சி யுறுகிறீர்களா? (சபையார் "ஆமென்'' என்கின்றனர் - ஆசி) முத்திரை களின் இரகசியம் சபையின் காலங்களுடன் எவ்வளவு அழகாகப் பொருந்துகின்றது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவையிரண்டும் முற்றிலுமாக இணைகின்றன, சபையின் காலங்களுக்கு விளக்கவுரையை அளித்த அதே பரிசுத்த ஆவியானவர்தான் முத்திரைகளின் இரகசியங்களையும் வெளிப்படுத்துகிறார் என்பதனை அது காண்பிக்கின்றது- தேவன் வித்தியாசமான வழிகளில் தம்மை வெளிப்படுத்தும் ஒரு மகத்தான கிரியையாக இது அமைந்துள்ளது. 7. அவர் தரிசனத்தில் தம்மை தானியேலுக்கு வெளிப்படுத்தின போது, அநேக அடையாளங்களின் மூலம்- வெள்ளாடு, மரம், சொரூபம் போன்றவைகளின் மூலம் அவைகளைக் காண்பித்தார். அவையெல்லாம் ஒரே சம்பவத்தையே எடுத்துக் காண்பிக்கின்றன என்பதை அறிந்து கொள்ளத் தவறவேண்டாம். 8. இப்பொழுது, சற்று முன்பு எண்பத்தைந்து வயது சென்ற அம்மாளுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அந்த அம்மாள் கூறியது என்னை சிலிர்க்க வைத்தது. அவர்கள்... 9. நான் மேற்கு திசைக்குச் செல்லும் முன்பு, ஒரு சிறு பெண் ஓஹையோ (Ohio) பட்டிணத்தில் இரத்தப் புற்றுநோயால் (Leukemia) பீடிக்கப்பட்டுச் சாகும் தருவாயில் இருந்தாள். ஓ, அவள் பிழைப்பாள் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இரத்தக் குழாய்களின் மூலம் அவளுக்கு ஆகாரம் செலுத்தப்பட்டது. அவள் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆகவே அவர்கள்.. 10. சகோதரன் கிட் (Bro. kidd) என்பவரும் அவருடைய மனைவியும் கர்த்தர் எவ்விதம் ஜெபத்திற்குப் பதிலுரைக்கிறார் என்று அவர்களிடம் எடுத்துக் கூறினபோது அவர்கள் ஒரு வாடகை மோட்டார் வண்டியில் அந்தப் பெண்ணை இங்கு அழைத்து வந்தனர். அவள் ஏறக்குறைய ஆறு அல்லது ஏழு வயது சென்ற மிகவும் அழகுள்ள பெண்ணாக இருந் தாள். (ஒரு சகோதரி 'ஒன்பது வயது' என்கிறார் - ஆசி) ஒன்பது வயது. அவளை அறைக்குள் கொண்டு சென்றனர். 11. ஆகவே, நாங்கள் கர்த்தருடைய சமூகத்தில் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் நல்வாக்கு அருளினார். அவர் கூறியவாறே அவளுக்கு சாதாரண முறையில் வாய் வழியாக ஆகாரம் கொடுக்கப்பட்டது. முடிவில் அவள் அந்த இடத்தை விட்டுச் செல்லும் முன்பு ஹாம்பர்கர் (Ham burger) (ஒருவகை மேற்கத்திய உணவு) வேண்டுமென்று அழுதாள். அவளுக்கு இயற்கையான முறையில் வாய் வழியாக ஹாம்பர்கர் கொடுத்தார்கள். 12. சில நாட்கள் சென்ற பிறகு டாக்டரிடம் அந்த பெண்ணைக் கொண்டு சென்றனர். என்ன நேர்ந்ததென்று அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த பெண்தான் அவள் என்று கண்டு கொள்ளக் கூடாத அளவிற்கு அவள் வித்தியாசமான தோற்றம் கொண்டவளாயிருந்தாள். இரத்தப் புற்றுநோயின் அடையாளம் அவளில் சிறிதேனும் காணப்படவில்லை என்பதாக டாக்டர் கூறினார். புற்று நோயினால் மரிக்கும் தருவாயி லிருந்து, எல்லாவித நம்பிக்கையும் அற்றுப்போய், இரத்தக் குழாய்களின் வழியாக ஆகாரம் செலுத்தப்பட்டு மஞ்சள் நிறமாய்க் காணப்பட்ட அதே பெண் இன்று மற்ற பிள்ளைகளுடன் பள்ளிக்கூடத்தில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறாள். 13. இதைப் போன்று வேறொரு சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. நான் அப்பொழுதுதான் வீடு திரும்பியிருந்தேன். அங்கே... அப்பொழுது கான்ஸாஸ் (Kansas) பட்டிணத்திலிருந்து இரத்த புற்று நோயால் பீடிக் கப்பட்ட ஒரு பெண்ணைக் கொண்டு வந்தனர். அவர்கள் எபிஸ்கோ பால் ஸ்தாபனத்தார் அல்லது பிரஸ்பிடேரியன்கள் என்று நினைக்கிறேன். டாக்டர்கள் அவளைக் கைவிட்டனர். 'இன்னும் நான்கு நாட்கள் மாத்திரமே அவள் பிழைத்திருப்பாள்' என்று அவர்கள் கூறியிருந்தனர். அவள் மிகவும் மோசமடைந்தாள். அந்த நான்கு நாட்கள் செல்வதற்கு முன், பனியை எவ்வாறாயினும் கடந்து இங்கு அடைந்து விடலாம் என்று எண்ணங்கொண்டு அவர்கள் புறப்பட்டனர். அவள் பாட்டனார் தலை நரைத்து வயது சென்ற கம்பீரமான தோற்றத்தையுடைய ஒருவர். 14. அவர்கள் இங்கு வந்து ஒரு விடுதியில் தங்கி ஏற்கனவே இரண்டு நாட்களாகிவிட்டன. அந்த விடுதி இப்பொழுது அங்கு இல்லை. அன்று விடியற்காலை ஜெபம் செய்வதற்கென நான் அங்கு சென்றிருந்தேன். முந்தின இரவுதான் நான் வீடு திரும்பியிருந்தேன், அங்கு சென்றபோது, அவள் பாட்டனார் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அந்த தாயார் அந்தப் பெண்ணை கவனித்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தாள். 15. ஆகவே, ஜெபம் செய்ய நான் முழங்கால்படியிட்டபோது, அவள் பெற்றோர் புரிந்த ஒரு இரகசிய செயலைப் பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார். நான் அவர்களை ஒருபுறம் அழைத்து அது உண்மையாவென்று வினவினேன். அவர்கள் அழுது கொண்டே அது உண்மைதானென்று பதிலுரைத்தனர். 16. பின்பு அந்தப் பெண் கயிறு வைத்து குதித்து விளையாடிக்கொண்டிருப்பதை நான் தரிசனத்தில் கண்டேன். ஆகவே, இப்பொழுது அந்தப் பெண். மூன்று வாரத்திற்குள் அந்த பெண் இரத்தப் புற்று நோயில்லாமல் பரிபூரண சுகமடைந்து, பள்ளிக்கூடத்தில் கயிறு வைத்து அவள் குதித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை அவர்கள் அனுப்பியிருந்தனர். 17. இப்பொழுது, இப்பொழுது, இந்த சாட்சிகள் அனைத்தும் முற்றிலும் உண்மையாகும். பாருங்கள் ஆகவே, நம் தேவன் உண்மை யுள்ளவராயிருக்கிறார். நீங்கள் பாருங்கள், நாம் அவரைச் சேவித்து அவரில் விசுவாசம் கொள்ளுவோம். ஆகவே அவர் உண்மையுள்ளவர் என்பதை நானறிவேன். 18. இப்பொழுது, நான் என்னால் சிறந்ததை செய்ய முயன்றுக்கொண்டிருக்கையில், நம்மத்தியில், உள்ளான ஏதோ ஒன்று தன்னுடைய வழியின் மூலம் கிரியை செய்துக்கொண்டிருக்கின்றது. இன்றிரவு தேவ கிருபையைக் கொண்டு, நான்காம் முத்திரை என்னவென்பதைப் பற்றியும், பரிசுத்த ஆவியானவர் அதைக் குறித்து என்ன சொல்லப் போகிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள முயல்வோம். 19. இப்பொழுது, வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரத்தில் 7-ம் 8-ம் வசனங்களை நான் படிக்கப் போகிறேன். ஒவ்வொரு முத்திரைக்கும் இரண்டு வசனங்கள் உண்டு. முதல் வசனம் அதன் வருகையை அறிவிக்கிறது. யோவான் என்ன கண்டான் என்பது இரண்டாம் வசனத்தில் அடங்கியுள்ளது. அவர் நாலாம் முத்திரையை உடைத்தப்போது, நாலாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ மங்கின் நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன். அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன் பின்சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. 20. இப்பொழுது, இதனை அறிந்துகொள்ள கர்த்தர் உதவி செய்வாராக. இது ஒரு இரகசியம். 21. இப்பொழுது, சபையின் காலங்களை ஆராயும்போது நாம் செய்தவாறு, இப்பொழுது, இதற்கு முன்பு முத்திரைகளைக் குறித்தும், குதிரை சவாரி செய்பவர்களைக் குறித்தும் நாம் சிந்தித்ததை மறுபடியும் கூறுவோம். இப்பொழுது, நான்காம் முத்திரையைப் பற்றி பேசுவதற்கு ஏற்ற தருணம் வந்து விட்டது எனும் சிந்தை நமக்குள் எழும்வரை இவைகளை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். 22. இபபொழுது, மீட்பின் புஸ்தகம் முத்திரிக்கப்பட்டிருந்தது என்று நாம் இப்பொழுது பார்த்தோம். பண்டைய காலத்தின்படி அது ஒரு சுருள் வடிவில் சுற்றப்பட்டிருந்தது. 23. (சுருளானது எவ்வாறு சுருட்டப்பட்டு முத்திரிக்கப்படுகின்றது என்று காதிதங்களைக்கொண்டு சகோ. பிரான்ஹாம் விளக்குகிறார் -ஆசி). இக்காலத்திலுள்ள இந்த புத்தகங்களின் வடிவில் அது அமைந்திருக்கவில்லை. இத்தகைய புத்தகங்கள் சுமார் நூற்றைம்பது அல்லது இரு நூறு வருடங்களுக்கு முன்புதான் தோன்றின. பழங்காலத்தில் எழுதியவைகளை சுருள் வடிவில் சுருட்டி முனையைச் சுருட்டாமல் விட்டு விடுவார்கள். அது எவ்விதம் சுருட்டப்படும் என்பதனை நான் உங்களுக்கு முன்னமே எடுத்துரைத்துள்ளேன். இதைக் குறித்து எரேமியா தீர்க்கதரிசனப் புத்தகத்தில் காணலாம் என்றும் நான் கூறியுள்ளேன். இவ்விதம் சுருள் வடிவில் சுருட்டப்பட்டு, முனைவிடப்பட்டு அது முத்திரிக்கப்படும். 24. ஒவ்வொன்றும் ஒரு முத்திரையாகும். அது ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புஸ்தகம், அது ஒரு... யாராலும்... அவர்கள் அப் பொழுது... இவ்வாறு மீட்பின் புஸ்தகம் ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்தது. என்னை மன்னிக்கவும். 25. வானத்திலாவது பூமியிலாவது ஒருவரும் அல்லது பூமியின் கீழாவது அதைத் திறக்கவும் அல்லது அதைப் பார்க்கவும்கூட பாத்திர வானாய்க் காணப்படவில்லை. எனவே யோவான் அழத்தொடங்கினான். ஒரு மனிதனையும் காணமுடியாததால்... ஆதாமும் ஏவாளும் பாவத்தின் காரணத்தால் தேவனுடைய வார்த்தையில் கொண்டிருந்த உரிமைகளை, வாக்குத்தத்தங்களை, அவர்களுடைய சுயாதீனத்தை இழந்து அதைப் பறிகொடுத்தபோது, அது அதன் உரிமையாளரின் கரத்தையடைந்தது. அப்புஸ்தகம் அவர் கையிலிருந்து வாங்கப்படாமற் போயிருந்தால்..... 26. ஞாபகங்கொள்ளுங்கள், ஆதாமும் ஏவாளும் பூமியின்மேல் ஆதிக்கம் செலுத்தினர். அவன் தேவனுடைய குமாரனாயிருந்தபடியால், அவன் ஒரு தேவனாக பூமி யின் மேல் ஆளுகை செய்தான். தேவனுடைய குமாரன் ஒரு குட்டி தேவனாயிருக்கிறான். இப்பொழுது, அது வேதவாக்கியத்திற்கு முரணானதொன்றல்ல. அது உங்களுக்கு வினோதமாகத் தென்படக்கூடும். 27. ஆனால், இயேசு “தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று சொல்லியிருக்க....' என்றார். யாரிடத்தில் தேவ வசனம் வரும்? (சபையார் ''தீர்க்கதரிசிகள்'' என்கின்றனர்-ஆசி) தீர்க்கதரிசிகளினிடத்தில். 'தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணம் சொன்னாய் என்று நீங்கள் சொல் லாமா?' என்று இயேசு கூறினார். ஆகவே, பாருங்கள்? அவர்கள் தேவர்களாயிருந்தனர். 28. மனிதனே, ஒரு குடும்பத்தில் நீ பிறந்திருப்பதால், அந்த குடும் பத்தின் பெயரை நீ ஏற்றுக் கொள்கிறாய், குமாரன் என்னும் ஸ்தானத்தில் உன் தகப்பானாரின் ஒரு பாகமாக நீ இருக்கிறாய். 29. பாவம் பிரவேசித்தபோது, மனிதன் பிளவின் மற்ற எல்லையை அடைந்தான் என்று நாம் பார்த்தோம். காளை, வெள்ளாட்டுக்கடா, இவை களின் இரத்தம் பாவ நிவர்த்திக்கென்று செலுத்தப்பட்டது. ஆனால் அவை பாவத்தை மூடினதேயன்றி அதைப் போக்கவில்லை. உண்மை யான வெண்மையாக்கும் திரவம் வரும்வரை, இது கைக்கொள்ளப்பட வேண்டும். வெண்மையாக்கும் திரவம் பாவத்தின் கறையை அகற்றி அதை மூலப்பொருட்களாக மாற்றி, வார்த்தையைப் புரட்டிய சாத்தா னிடம் அதைக் கொண்டு சேர்க்கும். 30. சாத்தானை அது அடைந்த பிறகு, அவன் நித்திய அழிவு வரும் வரை காத்திருக்கிறான். இப்பொழுது, நாம் விசுவாசிப்பது என்ன என்று அது காட்டுகின்றது. அவன் முற்றிலுமாக அழிக்கப்படுவான் என்னும் நம்பிக்கை நமக்குண்டு. 31. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை ஆதாரமாகக் கொண்டு பாவம் அறிக்கையிடப்படும்போது அது மறைந்து போகிறது என்று நான் நம்புகிறேன். ஒரு துளி மையை வெண்மையாக்கும் திரவத்தில் ஊற்றும் போது அது மூல இரசாயனப் பொருட்களாக மாறி முன்பிருந்த நிலைமையை அடைவதற்கு இது ஒப்பாயிருக்கிறது. பாருங்கள்? இயேசு கிறிஸ்துவின் இரத்தமும் அதையே செய்கிறது. 32. மனிதன் மறுபடியுமாக பிளவைக் கடந்து தேவனுடைய குமார னாகும்படி அது செய்கிறது. பாருங்கள்? ஆகவே அப்பொழுது அவன்அப்பொழுது அவன் ஒரு... ஆகின்றான்... என்ன அவனும்... தேவனு டைய சிருஷ்டிக்கும் வல்லமையும் கூட அவனுக்குள் இருக்கின்றது. தேவன் அவன் மூலம் அதைக் கட்டளையிடும்பொழுதெல்லாம், அது நிறைவேறும். நாம் பழைய நிலைக்குச் செல்கிறோம். அப்பொழுது.... 33. காளை, வெள்ளாட்டுக்கடா இரத்தத்தின் கீழிருந்த மோசே... பற்றி யெரியும் மூட்செடியில் அக்கினி ஸ்தம்பத்தை அவன் சந்தித்தான். ஆகவே அவன், தேவன் அவனுக்குக் கொடுத்த கட்டளையுடன் அங்கே நின்றான். அவன் ஒரு தீர்க்கதரிசி. கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் வந்தபோது, அவன் பேசினான். அப்பொழுது வார்த்தை சிருஷ் டித்தது. பாருங்கள்? 34. இப்பொழுது, காளையின் இரத்தத்தின் கீழிருந்த மோசே அதைச் செய்தால், இயேசுவின் இரத்தத்தின் கீழுள்ளவர்கள் அதைச் செய்ய முடியுமல்லவா? ஏனெனில் இயேசுவின் இரத்தம் பாவத்தை மூடாமல் அதை அறவே அகற்றுகிறது. அப்பொழுது நீங்கள் தேவ சமூகத்தில் மீட்கப் பட்ட புத்திரர்களாக நிற்கிறீர்கள். இப்பொழுது சபையானது தற்போ துள்ள நிலையைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாயிருக்கிறது. பாருங்கள், நாம் தைரியமாக வெளி வந்து பிரச்சனையை சந்திப்பதற்குப் பதிலாக அநேக சமயங்களில் நாம் செய்யலாமா வேண்டாமாவென்று ஆலோசனை செய்பவர்களாகக் காணப்படுகிறோம் என்று நான் நினைக்கி றேன். ஒரு காரியத்தை உங்களிடம் கூற வேண்டும். தக்க சமயம் வரும் போது அதைக் கூறுவேன். 35. ஆகவே இப்பொழுது, சபைகளில் எங்கோ தவறு காணப்படு கின்றது. ஸ்தாபனங்கள் தவறான போதகங்களினாலும் ஜனங்களின் மனதைக் குழப்பமுறச் செய்வதால் எது சரியென்று அறியாத நிலையை அவர்கள் அடைந்துள்ளனர். அது சரி. 36. ஆனால் இக்காலத்தில் உண்மையான சத்தியம் வெளிப்படு மென்ற வாக்குறுதி நமக்குண்டு. இந்தப் புஸ்தகமானது ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டுள்ளது. ஏழு முத்திரைகள் கொண்ட இப்புஸ்தகம்... 37. ஏழு முத்திரைகள் முடிவு பெற்றவுடன், ஏழு இடிமுழக்க இரகசி யங்களை நாம் வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். யோவான் அவன் கண்டவைகளையும், கேட்டவைகளையும் எழுத வேண்டுமென்ற கட்டளை பெற்றிருந்தான், ஆனால் இடிமுழக்கங்கள் சொன்னவைகளை எழுதக் கூடாதென்று அவனிடம் கூறப்பட்டது. அந்த இடிகள் முழங்கும்போது, கிறிஸ்து (அதாவது பலமுள்ள தூதன்) வானவில்லுடன் இறங்கி வந்து, தமது பாதத்தை பூமியின் மீதும், சமுத்திரத்தின் மீதும் வைத்து, இனிகாலம் செல்லாதென்றும், சமயம் கடந்து விட்டதென்றும் ஆணையிடுகிறார் என்று நாம் பார்த்தோம். 38. மேலும், ஆட்டுக்குட்டியானவர் பரிந்து பேசும் ஊழியத்தை விட்டு விட்டு, தம் மரணத்தினால் அவர் மீட்டுக்கொண்ட அனைவரையும் சொந்தமாக்கிக் கொள்ளப்புறப்பட்டு வருகிறாரென்று முத்திரைகளின் இரகசியங்களைத் தியானிக்கும்போது நாம் பார்த்தோம். 39. ஆகவே, அந்த புஸ்தகத்தை யாராலுமே திறக்க முடியவில்லை. அதை யாரும் புரிந்து கொள்ளவும் இயலவில்லை. அது மீட்பின் புஸ்தகமாகும். கிறிஸ்து மத்தியஸ்த ஊழியத்தை செய்துக்கொண்டிருந்ததால், ஆவியாகிய பிதா அந்தப் புஸ்தகத்தை தம் கரத்தில் வைத்திருந்தார். அவர் ஒருவரே மத்தியஸ்தர். எனவே, பரிசுத்தவான்கள் என்று அழைக்கப் படுவரும், மரியாளும், யோசேப்பும், வேறெவரும் மத்தியஸ்தராக அந்த பலிபீடத்தில் இருக்க முடியாது. அதற்கு இரத்தம் சிந்துதல் அவசியம். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே பாவநிவிர்த்தி செய்ய முடியும். ஆகவே வேறு யாரும் அந்த மத்தியஸ்த ஊழியத்தை வகிக்க முடியாது. அது சரி. வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது. 40. ஆகவே, அரசியல் சம்பந்தமான காரியங்களுக்காக பரி. யூதா (Jude) வேண்டிக் கொள்வாரென்றும், வேறு சில காரியங்களுக்காக பரி. சிசிலியா (Cecilia) வேண்டிக் கொள்வாரென்று கருதுவதும் அர்த்தமற்றவையாகும். அது அல்ல. அவ்விதம் நினைக்கும் ஜனங்கள் உத்தம மானவர்கள் அல்ல என்று நான் கூறவில்லை. அவர்கள் அதை உத்தம இருதயத்தோடு செய்தாலும் அது தவறு என்பதைக் கூறவே முற்படுகிறேன். 41. 'ஒரு தேவதூதன் பரி. போனபெர் (St. Bonifer) என்பவருக்குப் பிரத்தியட்சமாகி அநேக காரியங்களைக் கூறியுள்ளானே!' என்று நீங்கள் கேட்கலாம். மற்றவர் கண்ட தரிசனங்களை நான் சிறிதேனும் சந் தேகிக்கவில்லை. ஜோசப் ஸ்மித் (Joseph Smith) கண்ட தரிசனத்தையும் நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர்கள் கூறுவது தேவனுடைய வார்த்தையுடன் பொருந்தாமல் இருப்பதால் அது தவறு என்று எனக்குத் தென்படுகிறது. பாருங்கள்? அவை யாவும் தேவனுடைய வார்த்தை யுடன் இணங்கவேண்டும். 42. அவ்வாறே சபையின் காலங்களைக் குறித்த வெளிப்பாடும், முத்திரையின் இரகசியங்களின் வெளிப்பாடும், மற்றயாவும் வேதத்துடன் பொருந்த வேண்டும். ஏழு இடி முழக்கங்களின் இரகசியங்களை வைத்திருப்பதாக ஒருவன் கூறி, அவன் கூறுபவை தேவனுடைய வார்த்தையுடன் இணங்காமற் போனால், எங்கோ தவறுள்ளது. பாருங்கள்? 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்று அது வரவேண்டும். இது இயேசு கிறிஸ்துவினுடைய வெளிப்பாட்டை பூரணமாகக் கொண்ட புஸ்தகமாகும். ஏனெனில் இதுதான் அந்த புஸ்தகம். இப்பொழுது, அப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் முன்னே வந்தார் என்று நான் நம்புகிறேன். 43. அவர்கள் அதை அறியார்கள். யோவான் அழுது கொண்டிருந்தான். அந்த புஸ்தகத்தைத் திறப்பதற்கு வானத்திலாவது பூமியிலாவது ஒருவனையும் பாத்திரவனாக யோவான் காணவில்லை. ஏனெனில் எல்லோருமே பாவம் செய்து பிளவின் மற்ற எல்லையை அடைந்திருந்தனர். பாருங்கள்? ஒரு மனிதனும் பாத்திரவான் அல்ல... ஒருக்கால் தேவதூதன் ஒருவன் அதற்குப் பாத்திரவனாக இருந்திருக்கலாம். ஆனால் அது ஒரு மீட்பின் இனத்தானான (Kinsman)மனிதனாக இருக்கவேண்டும். அவ்விதம் எவரும் இல்லை. ஏனெனில், மனிதன் இனச்சேர்க்கையினால் உண்டானவன். 44. இனச்சேர்க்கையின்றி பிறந்த ஒருவர்தான் அதற்குப் பாத்திரவானாயிருக்க முடியும். எனவே, தேவனே கன்னியின் வயிற்றில் பிறந்து இம்மானுவேல் ஆனார். அவருடைய இரத்தம்தான் தகுதியுள்ளதாயிருந்தது. அவரே இந்தப் பிளவைக் கடந்து கிரயத்தைச் செலுத்தி, ஏனையோருக்கு வழியை உண்டு பண்ணினார். பின்பு அவர் மத்தியஸ்த ஸ்தானத்தை வகித்து இப்பொழுதும் அவ்வூழியத்தைச் செய்து கொண்டிருக் கிறார். 45. அந்த புஸ்தகம் உண்மையாகவே இதுவரை மூடப்பட்டிருந்தது. அது அடையாளங்களைக் கொண்டுள்ளது. அவர்கள் அதைக் கண்டார்கள். யோவானும்கூட அதை அடையாள ரூபத்தில் கண்டான். முதலாம் முத்திரை உடைக்கப்பட்ட சம்பவம் யோவானுக்கு அறிவிக்கப் பட்டது. அவன் "ஒரு வெள்ளைக்குதிரை புறப்பட்டுச் சென்றது. அதன் மேல் ஒருவன் ஏறியிருந்தான். அவன் கையில் ஒரு வில் இருந்தது'' என்று சொல்லுகிறான். அவை அடையாளங்களாம். அதன் இரகசியம் அப்பொழுது வெளிப்படவில்லை. இல்லை. அது ஒரு அடையாளமாக மாத்திரம் இருந்தது. பூமியிலுள்ள எந்த ஒரு மனிதனும் அந்த அடையாளத்தை அறிந்தானேயன்றி அதன் உண்மையான இரகசியத்தை அறிந்திருக்கவில்லை. அது சரி. அதன் இரகசியத்தை அறிவதற்கென மனிதன் தட்டுத் தடுமாறி, அதன் அர்த்தம் இதுவாயிருக்கும் அல்லது அதுவாயிருக்கும் என்று ஊகித்துக் கொண்டே வந்தான். 46. ஆனால், "ஏழாம் தூதனின் செய்தியில், தேவரகசியம் அனைத்தும், அந்த நாட்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும்'' என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் நாம் காண்கிறோம். இப்பொழுது, அவர் அந்த நாளில் அதைச் செய்கையில், வெளி. 10:1-7 அந்த நேரத்தின்படியே வெளிப் படுத்தப்படும். 47. பின்னர், ஏழு இடி முழக்கங்களும் தங்கள் விசித்திரமான சத்தங்களை முழங்கின. அவை என்ன கூறினவென்பதை யோவான் அறிந்தி ருந்தான். அவன் அதை எழுதத் தொடங்கினபோது, எழுதவேண்டாமென்று தடைசெய்யப்பட்டான். அது பரமரகசியமாய் அமைந்துள்ளது. அவை அடையாளங்களின் மூலமாகவும்கூட வர்ணிக்கப்படவில்லை. அந்த இடிகள் முழங்கின என்று மாத்திரம் நாம் அறிவோம். அவ்வளவு தான். 48. ஆகவே இப்பொழுது நாம் இதைப் படிக்கின்ற வேளையில், ஞாயிறு காலையன்று நடக்கவிருந்த சுகமளிக்கும் ஆராதனையை நாங்கள் ரத்து செய்து விட்டோம். அதற்குப்பதிலாக முத்திரைகளின் பேரில் ஜனங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலுரைப்போம் என்பதை நீங்கள் மறக்கவேண்டாம். இப்பொழுது, உங்கள் கேள்விகள் யாவும் ஏழு முத்திரைகளின் பேரில் -அது உங்களுக்கு புரியாமல் இருந்தால், இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆகவே, கேள்விகள் முத்திரைகளின் பேரிலே இருக்கட்டும். நான் பதிலுரைப்பதற்குப் போது மான கேள்விகள் இருக்கின்றனவா என்று நான் சனியிரவு கூறிவிடுவேன். "நான் இதைச் செய்யலாமா?'' அல்லது நான் ஒரு சொப்பனம் கண்டேன்' என்பவைகள் மதிப்பார்ந்தவைகள்தான் என்பதை ஞாபகங் கொள்ளுங்கள். அவைகள் போற்றத்தக்கவைகள்தான். ஆனால் சரியாக நாம் ஏழு முத்திரைகளுடன் தங்குவோம். அதைத்தான் நாம் செய்கிறோம். இந்தக் கூட்டமும் அதற்கென்றே நியமிக்கப்பட்டுள்ளது. நாம் அதனுடன் சரியாக தங்கியிருக்கட்டும். கூடுமானவரை, கேட்கப்படும் கேள்விகள் ஏழு முத்திரைகளையொட்டி அமைந்திருக்கட்டும். 49. நான் வீடு திரும்பவேண்டும். மேற்குப்பகுதியில் சில கூட்டங்களை நான் நடத்தவேண்டும். ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கழித்து நான் திரும்பவும் வருவேன். அப்பொழுது சுகமளிக்கும் ஆராதனையை நடத்த கர்த்தர் ஒருவேளை அனுமதிப்பார். 50. ஏழு எக்காளங்களைக் குறித்தும், ஏழு கலசங்களைக் குறித்தும் நாம் ஆராயவேண்டிய அவசியமுண்டு. நீங்கள் பாருங்கள்? அவையெல் லாம் ஒன்றுக்கொன்று பொருந்துகின்றன. ஆனால் இதுவரை அவை இரகசியங்களாகவே அமைந்துள்ளன. 51. இப்பொழுது, கடந்த இரவு... முதலாம் முத்திரையானது திறக்கப் பட்டது, சவாரி செய்தவன். கர்த்தாவே... எனக்கு உதவும், நான் அதற்கு முன்பாக அதை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. ஒவ்வொரு முத்திரையின் இரகசியம் எனக்கு வெளிப்படும் முன்னர், அதன் உண்மையான அர்த்தத்தை நான் அறியாமல் இருந்தேன். அது சரி. நான் அதைச் சற்றும் அறியாதிருந்தேன். 52. நான் வேதத்தை எடுத்துக்கொண்டு, அது வெளிப்படும்வரை உட்கார்ந்தவண்ணம் இருப்பேன். அது வெளிப்படும்போது, நான் என் எழுதுகோலை எடுத்துக்கொண்டு அது முடியும்வரை அநேக மணி நேர மாக எழுதிக்கொண்டே இருப்பேன். 53. அதன் பின்னர், அவர் இதை எங்கே கூறியிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பேன். "நல்லது, நான் இதை எங்கேயோ கண்டிருப்பதைப் போல் தோன்றுகிறதே'' என்று நான் நினைத்து, என் ஒத்துவாக்கிய சங்கிரகத்தை (Concordance) எடுத்து "அதைப்போல ஏதாவதொன்று அங்கே உள்ளதா? இங்கே இது சரியாக இருக்கின்றது. அதன்பின், அங்கேயும் அது மறுபடியுமாக அவ்விதமாக இருக்கின்றது. இங்கேயும், இங்கும், அங்கும் அது உள்ளது'' என்று அதைத் திரும்பப் பார்ப்பேன். அதன்பின் நான் அதைச் சரியாக இணைப்பேன். வேத வாக்கியங்கள் ஒன்றொடொன்று பொருந்துவதனால் இந்த வெளிப்பாடு தேவனால் அளிக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்வேன். கட்டிடம் கட்டும்போது ஒரு கல் மற்றொரு கல்லுடன் இணைவதுபோல் வேதவாக்கியங்களும் ஒன்றோடொன்று இணையவேண்டும். அவ்விதம் இணைகிறதா என்று நீங்களும் ஒத்துப் பார்க்கவேண்டும். 54. இப்பொழுது, நேற்று இரவு மூன்றாம் முத்திரை நமக்குத் திறக்கப் பட்டது. முதலாவதாக ஒரு வெள்ளைக் குதிரை, அடுத்தது சிவப்புக் குதிரை. அதற்குப்பின்பு கறுப்புக் குதிரை. ஒரே ஆள்தான் எல்லாக் குதிரைகளின் மேலும் சவாரி செய்கிறான் என்பதை நாம் காண்கிறோம். அவன் தான் அந்திக்கிறிஸ்து, தொடக்கத்தில் அவனுக்குக் கிரீடம் இல்லை. சற்று கழிந்த பின்னர் அவன் கிரீடத்தைப் பெறுகிறான். பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போட அவனுக்கு ஒரு பட்டயம் பின்பு அளிக்கப்படுகின்றது. சமாதானத்தை அவன் எடுத்துப்போட்டதாக நாம் கண்டோம். அதன்பின்பு அவன் தன் கோட்பாடுகளை நுழைத்து சபைக்குக் காசை சேமிக்கிறான். ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமையும் ஒரு பணத்துக்கு மூன்று படி வாற்கோதுமையும் விற்கப்படுகிறது. ஆனால் சிறிது விடப்பட்டிருந்த எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப் படுத்தாதபடி அவன் தடைசெய்யப்படுகிறான். 55. ஆகவே, எண்ணெயும் திராட்சரசமும் எவைகளுக்கு உதாரணமாயிருக்கின்றன என்றும், அதனால் உண்டாகும் பலன் என்னவென் பதையும் நாம் சென்ற இரவு பார்த்தோம். அது சற்று கொடூரமாகக் காணப்பட்டிருக்கும், ஆனால் நான் கூறியது முற்றிலும் உண்மையாகும். பாருங்கள்? இப்பொழுது, நாம் முடித்தோம். நாம் மறுபடியும் அதைக் குறித்து சிறிது நேரம் ஆராய்வோமாக. திராட்சரசத்தின் வல்லமை என்னவென்று விவரித்து, நாம் சென்ற இரவு கூட்டத்தை முடித்தோம். எண்ணெய் என்பது பரிசுத்த ஆவிக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. இப்பொழுது, நீங்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டீர்கள் என்று நான் யூகிக்கிறேன். அவ்விதம் இல்லையெனில், அதற்கான வேத வசனங்களை எங்கே காணலாம் என்பதை நீங்கள் ஒலிநாடாவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். புத்தியில்லாத கன்னிகைகளிடம் எண்ணெய் இல்லை. புத்தியுள்ள கன்னிகைகளிடம் எண்ணெய் இருந்தது. பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளும் அதைப் பெற்றிருந்தனர் என்று கண் டோம். ஆகவே இப்பொழுது நான்... 56. இதைக்குறித்து எல்லா வேதவாக்கியங்களையும் நாம் பார்க்க வேண்டுமானால் நேரம் அதிகமாகும். அவைகளைக் குறித்துப் பேசவும் கூடாதபடிக்கு அநேகக் காரியங்கள் அங்குள்ளன. ஜனங்கள் அறிந்து கொள்ளவேண்டிய அளவிற்குப் போதுமான வேதவாக்கியங்களை மாத்திரம் எடுத்துக்கூற நான் முனைகிறேன். முத்திரைகளைப்பற்றி நாம் சரி வர ஆராயவேண்டுமானால், ஒவ்வொரு முத்திரையைக் குறித்து ஒரு மாதம் தினந்தோறும் பிரசங்கம் நிகழ்த்தினாலும் அதின் ஒரு பாகத்தைக் கூட நாம் முடிக்க முடியாது. பிரசங்கிக்க வேண்டிய சங்கதிகள் அவ்வ ளவு அதிகம் உண்டு. இவைகள் யாவும் எதைப் பற்றியது என்று நீங்கள் காணும்படியாக அவற்றின் மேலான தனியிடக் கூற்றை மாத்திரம் (high Spot) சரியாக உங்களுக்குக் கொடுக்கிறோம். 57. இப்பொழுது எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு அடையாளமாயிருக்கிறது. எண்ணெயும் திராட்சரசமும் எப்பொழுதும் ஆராதனையுடன் சம்பந்தப்பட்டது என்று நாம் கண்டோம். 58. எனக்கு அளிக்கப்பட்டதின்படி, திராட்சரசம் வெளிப்பாடு அளிக்கும் ஊக்க உணர்ச்சிக்கு அடையாளமாயுள்ளது என்று நான் கூறினேன். பாருங்கள்? ஏதாவதொன்று வெளிப்படும்போது, அது விசுவாசிக்கு உற்சாகத்தை அளிக்கிறது. ஏனெனில் அது வெளிப்பாட்டினால் அவனுக்கு வழங்கப்படுகின்றது. பாருங்கள்? அது தேவனால் வெளி யாக்கப்படும் மறைபொருளாயிருக்கிறது. நாமாகவே அதை புரிந்து கொள்ள முடியாது. ஆனால் சற்று பின்னர் தேவன் அதை வெளிப்படுத்தி அது உண்மையென்று அடையாளங்களினால் உறுதிப்படுத்து கிறார். பாருங்கள்? 59. சத்தியம் ஒன்று வெளிப்படும்போது, அது அடையாளங்களி னால் உறுதிப்படுகிறது என்று நினைவில் கொள்ளுங்கள். ஒரு மனிதன் எவ்வளவு கூர்மையான அறிவுத்திறம் வாய்ந்தவனாயிருந்தாலும் அல்லது எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், அவன் கூறுவதை தேவன் தொடர்ந்து ஆமோதிக்காவிடில் எங்கோ தவறுண்டு. பாருங்கள்? சரி. தேவனுடைய வார்த்தை அப்படித்தான் கூறுகிறது. 60. இப்பொழுது, மோசே தேவனுடைய ஏவுதலினால், வண்டுகள் உண்டாகக்கடவது' என்று கட்டளையிட்டபோது வண்டுகள் தோன்றின. அவன், ''தவளைகள் உண்டாகக்கடவது,'' என்று கட்டளையிட்ட போது தவளைகள் தோன்றின. 61. பாருங்கள், அவன் அவ்விதம் ''வண்டுகள் உண்டாகக்கடவது,'' என்று கூறினபோது வண்டுகள் உண்டாகாவிடில், பாருங்கள் கர்த்தருடைய வார்த்தையை அவன் பேசவில்லையென்றும், அவன் தன் சொந்த வார்த்தையே பேசினான் என்று அர்த்தம். அங்கு வண்டுகள் உண்டாகவேண்டுமென்று அவன் எண்ணியிருப்பான். ஆனால் தேவன் அவ்விதம் உரைக்காததால் வண்டுகள் அங்கு உண்டாகவில்லை என் பது அதன் அர்த்த ம். 62. ஆகவே தேவன் உங்களிடம், 'நீ இதைச் செய். அது என் வார்த்தையாய் இருப்பதால், நான் உன்னுடனே இருப்பேன்' என்று அவர் கூறி, அது வேதத்தில் உள்ளது என்று காண்பிக்கும்பொழுது, அவர் அதை நிறைவேற்றுவார் என்பது திண்ணம். அவர் கூறியது வேத புத்தகத்தில் எழுதப்படாவிடினும் அது தேவனுடைய வார்த்தையாயிருப்ப தால், அவர் அதை ஆதரிக்கவேண்டும். பாருங்கள்? 63. ஆகவே அது அதன் வெளிப்புறம் இருப்பின், அது தீர்க்கதரிசி களுக்கு வெளிப்படும். ஏனெனில் தேவரகசியம் யாவும் தீர்க்கதரிசி களுக்கு மாத்திரம் வெளிப்பட வேண்டும் (ஆமோஸ் 3:7). என்று நாம் அறிந்து கொள்கிறோம். பாருங்கள்? 64. இப்பொழுது, இப்பொழுது, வெளிப்பாட்டின் வல்லமை விசு வாசிக்கு ஊக்கத்தைக் கொண்டு வருகிறது. ஏனெனில் இயற்கையான திராட்சரசம் எவ்விதம் அதைப் பருகுகிறவனுக்கு உற்சாகத்தை அளிக்கிறதோ, பாருங்கள், அவ்வாறே வெளிப்படுதலின் வல்லமையும் சோர்ந்து போயிருக்கும் விசுவாசிக்கு ஊக்கத்தையளிக்கிறது. பாருங்கள்? பாருங்கள்? ஆகவே, தேவ வார்த்தையின் வெளிப்பாட்டின் வல்லமை விசுவாசிக்கு உற்சாகத்தையும் திருப்தியையும் அளிக்கிறது. அது அடையாளங்களினால் உறுதிப்பட்டு நிரூபிக்கப்படுகின்றது. 65. புதிய ஏற்பாட்டில் அது "புது திராட்சரசம்'' என்று அழைக்கப் படுகிறது. ''அவர்கள் புது திராட்சரசத்தினால் நிறைந்திருக்கின்றனர்'' என்று ஆவிக்குரிய வெளிப்பாட்டைப் பெற்றவர்களைக் குறித்து நாம் கூறுவதுண்டு. பாருங்கள்? சரி. அதை "ஆவிக்குரிய திராட்சரசம்'' என்று அழைத்தால் நலமாயிருக்கும். திராட்சரசம் அதைப் பருகுகிறவனுக்கு எவ்விதம் உற்சாகமூட்டுகிறதோ, அவ்விதமாகவே ஆவியாகிய தேவனுடைய வார்த்தை வெளிப்படும்போது, அந்தப் புதிய திராட்சரசம் விசுவாசிக்கு உற்சாக மூட்டுகிறது. ஓ, இப்பொழுது அங்கே... அது ஒரு... பாருங்கள்? வார்த்தைதான் ஆவி. அதை நீங்கள் நம்புகிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர்-ஆசி) 66. நாம் அதை வாசிக்கட்டும். நாம் அதை வாசிக்கட்டும். பரி.யோவான் ஆறாம் அதிகாரத்தை வாசிப்போம். நாம் அதை மாத்திரம்... ஆம், அதன்பின், நீங்கள் - அதன் பின் நீங்கள் - "நல்லது, இப்பொழுது, வேறு யாரோ ஒருவர் அதைச் சொன்னார்,'' என்று உங்களால் கூறமுடியாது. அவ்விதம் கூறியது யாரென்று நாம் பார்க்கலாம். அப்பொழுது அது உண்மையா தவறா என்று நமக்கு விளங்கும். யோவான் 6-ம் அதிகாரம் 63-ம் வசனம் என்று நினைக்கிறேன். சரி. ஆம், அதுதான். ஆவியே உயிர்ப்பிக்கிறது. மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. 67. தேவனுடைய வார்த்தையே ஆவியாயிருக்கிறது. ஆவியானது வார்த்தையின் உருவில் அமைந்துள்ளது. ஆகவே அது உயிர்ப்பிக்கப் படும்போது, அல்லது ஜீவனுக்குக் கொண்டு வரப்படும்போது வார்த்தையாகிய ஆவி கிரியை செய்கிறது. பாருங்கள்? ஏனெனில் அந்த... 68. இப்பொழுது, இங்கு கவனியுங்கள். ஒரு வார்த்தை பேசப்படுமுன் அது சிந்தனையாயிருக்கிறது. அது பேசப்படும்போது வார்த்தையாக அமைகிறது. இப்பொழுது, இதுதான் தேவன் வார்த்தையில் வைத்துள்ள அவருடைய சிந்தையாகும். அதன்பின் நாம் அவரிடமிருந்து அதை ஏற்றுக் கொள்ளும்போது, அது வார்த்தையாகிறது. 69. மோசே என்ன செய்யவேண்டுமென்று தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினார். மோசே பேசினபோது, அது அப்படியே நிகழ்ந்தது. பாருங்கள்? தேவனிடத்திலிருந்து ஒன்று வரும்போது, அது நிகழ வேண்டும். 70. இப்பொழுது அது தேவனுடைய வார்த்தையாயிருப்பதால், அது உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது என்று இப்பொழுது நாம் காண்கிறோம். புது திராட்சரசமானது... புதிய திராட்சரசம் வார்த்தையை வெளிப்படுத்தும்போது, உற்சாகமூட்டுகிறது. சில சமயங்களில் அதனால் கிடைக்கப்பெறும் சந்தோஷம் வரம்பு கடந்து விடுகிறது. நிரம்பி வழியும் அளவிற்கு அது மகிழ்ச்சியூட்டுகிறது என்று நாம் அதைக் குறித்துப் பேசினோம். 71. இப்பொழுது, ஆனால் சிலர் அதிதீவிர மதப்பற்று கொண்டவர் களாய் இவைகளைச் செய்கின்றனர் என்று நான் அறிவேன். சில சமயங்களில் அவர்கள் இசை இசைக்கப்படும்போது மாத்திரம் குதித்து ஆடுகின்றனர் என்றும் நான் அறிவேன். அது (குதித்து ஆடுதல்) அதனுடன் செல்கின்றது என்று நான் அறிந்துள்ளேன். நானும் அதை நம்புகிறேன். ஆனால் இசை நின்ற மாத்திரத்தில் அவர்கள் குதித்தாடு வதும் நின்று விடுகிறது. பாருங்கள்? நான் நம்புகிறேன்... என்னை பொருத்தமட்டில் ஜனங்கள் சரியான ஜீவியமுடையவராய் இருக்கும் வரையில் அது இன்னும் சரியானதுதான். நீங்கள் பாருங்கள். 72. ஆனால், இப்பொழுது, என்ன, நாம் வார்த்தையைக் கொண்டு வருகையில்! இப்பொழுது, உண்மையில் வார்த்தைதான் ஜீவனைக் கொடுக்கிறது. அதுதான் புதிய திராட்சரசத்தின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. பாருங்கள்? ஆம். பெந்தெகொஸ்தே நாளன்று தேவனுடைய வார்த்தை அடையாளங்களினால் உறுதிப்பட்டபோது, அதுதான் சம்பவித்தது. 73. இப்பொழுது கவனியுங்கள், இப்பொழுது இயேசு சீஷர்களிடம், 'என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் எருசலேம் நகருக்குச்சென்று பரிசுத்த ஆவி வரும் வரைக்கும் அங்கு தங்கியிருங்கள்' என்று லூக்கா 24:49-ல் கூறி யுள்ளார். பிதாவின் வாக்குத்தத்தம் என்ன? யோவேல் 2:28-ல் சொல்லி யுள்ளபடி அவர் "ஆவியை ஊற்றப்போகிறார்.'' ஏசாயா 28:11-ல் கூறிய வண்ணம் ஆவியைப் பெற்றவர்கள் பரியாச உதடுகளினாலும் அன் னிய பாஷைகளினாலும் பேசுவார்கள். 74. இயேசுவின் சீஷர்களும் எருசலேமில் மேலறையில் தங்கி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர். அங்கு கூடியிருந்தவர்களில் யாரா வது ஒருவர், "நாம் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்துவிட்டோம். ஆகவே, விசுவாசத்தில் அதை ஏற்றுக்கொள்வோம்'' என்று சொன்னார் என்று வைத்துக்கொள்வோம். அது ஒரு நல்ல பாப்டிஸ்ட் (Baptist) உபதேசமாக இருக்கலாம். ஆனால் மேலறையில் கூடியிருந்தவர்களுக்கு அது சரியானதாகத் தோன்றவில்லை. 75. ஆகவே, அது உண்மையாக சம்பவிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். தேவனுடைய வார்த்தை அடையாளங்களினால் உறுதிப்படுவதற்கென அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். நீங்களும் பரிசுத்த ஆவியைப் பெற விரும்பினால் அதையே செய்ய வேண்டும். 76. ஆம், அதை நீங்கள் விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ள முடியும். கிறிஸ்துவை நீங்கள் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது முற்றிலும் சரி. பரிசுத்த ஆவியை நீங்கள் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளும்போது, உங்கள் விசுவாசத்தை அங்கீகரித்ததன் சாட்சியாக அவர் உங்களை ஆவியினால் அபிஷேகித்து விருத்தசேதனம் செய்ய வேண்டும். நீங்கள் பாருங்கள். அப்பொழுது, பாருங்கள், "ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.'' ஆனால் அவனுடைய விசுவாசத்தை அங்கீகரித்ததன் அடையாளமாக தேவன் அவனுக்கு விருத்தசேதனம் என்னும் அடையாளத்தைக் கொடுத்தார். 77. ஆகவே நாமும் அதே காரியத்தைத்தான் செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம்மில் ஒன்றைச் செய்யும் வரை நாம் அவருக்காக காத்திருத்தல் அவசியம். அன்னியபாஷை பேசுவதனால் அல்லது நடனமாடுவதால் அல்லது உணர்ச்சிவசப்படுவதால் அல்லது சத்தமிடுவதால் அதை நாம் பெற்றுக்கொள்ளவில்லை. நாம் முற்றிலும் மாறும் வரை நமக்குள் ஒரு மாறுதல் ஏற்படும்போதுதான் நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளோம் என்பதாகும். அது எந்த உருவில் வந்தாலும் எனக்குக் கவலையில்லை. நமக்குள் மாறுதல் ஏற்படுவது தான் முக்கியம். பாருங்கள்? 78. ஆகவே அன்னியபாஷை பேசுவதும், மற்ற எல்லா காரியங்களும் சரியே என்று நான் நம்புகிறேன். ஆனால் அது மாத்திரம் போதாது. அது அவ்விதம் கிரியை செய்வதில்லை என்று நீங்களும் அறிவீர்கள். ஆகவே அது அவ்விதம் செய்வதில்லை. 79. மந்திரவாதிகள், சூனியக்காரர் அன்னியபாஷை பேசி, ஆவியில் நடனமாடுவதை நான் கண்டிருக்கிறேன். நிச்சயமாக. அவர்கள் ஒரு பென்சிலைத் தரையில் வைக்க, அது அன்னியபாஷையில் ஏதோ ஒன்றை எழுதும். அது சரி. அது உண்மையைக் கூறும். அது சரி. வேறொருவர் அதற்கு விளக்கம் கூறுவார். முன்பு நிகழ்ந்த சமயங்களை அது அப்படியே எழுதும். அவர்கள் புழுதியைத் தலையின் மேல் வாரியிட்டு, கத்திகளினால் தங்களை காயப்படுத்திக் கொண்டு, காட்டு மிருகத்தின் இரத்தத்தை மேலே பூசி, பிசாசை நோக்கிக் கூப்பிடுவார்கள். ஆகவே, நீங்கள் பாருங்கள், அது அல்ல.... 80. எனவே அன்னிய பாஷை பேசுதல் என்பது மாத்திரம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அடையாளமன்று. ''நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் அன்பு எனக்கிரா விட்டால் நான் ஒன்றுமில்லை.'' பாருங்கள், நான் அதைச் செய்ய முடிந்தாலும்! பாருங்கள்? ஆகையால் அன்னிய பாஷை பேசுவதனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டோம் என்பதல்ல. 81. ஆனால், அவர், அந்த நபர்- நித்திய ஆவியாகிய கிறிஸ்து உங்கள் சொந்த இரட்சகராக ஆகி, உங்களை முற்றிலும் மாற்றி உங்கள் கருத்துக்களைக் கல்வாரியில் அவருடைய இந்த வார்த்தைக்கேற்ப அமைத்தால், உங்களில் ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது என்பது உறுதியாகும். ஆம், ஐயா. உங்களில் ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது. அவ்விதம் உங்களில் ஒன்று சம்பவித்தால் அதை யாரும் உங்களுக்கு எடுத்துக் கூற அவசியமில்லை. அது நிகழும்போது அதை நீங்களே அறிந்துகொள்வீர்கள். 82.புதிய திராட்சரசம் வெளிப்பாட்டை அளிக்கும். அப்பொழுது, அது வெளிப்படுத்தப்படுகிறது. 83. பெந்தெகொஸ்தே நாளில் அதுதான் சம்பவித்தது. அவர்கள்மேல் ஆவி ஊற்றப்படவேண்டுமென்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அது நிறைவேறும்வரை அவர்கள் காத்திருந்தனர். அந்த வெளிப்பாடு அடையாளங்களினால் உறுதிப்பட்டபோது, ஆவியைப் பெற்ற அனைவரும் உற்சாகம் கொண்டனர். அவர்கள் நிச்சயமாக அதைச் செய்தனர். அவர்கள் அனல்கொண்டு தெருக்களில் சென்று பிரசங்கித்தனர். அதற்கு முன்பு அவர்கள் பயந்து போய் அறையின் கதவுகளையெல்லாம் அடைத்துக் கொண்டனர். ஆனால் ஆவியைப் பெற்ற பிறகு யாரைப் பார்த்து பயந்தார்களோ அவர்களிடமே அவர்கள் சுவிசேஷத்தைத் தைரியமாகப் போதித்தனர். அது சரி. பாருங்கள்? அவர்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்தது. ஏனெனில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த உண்மையான வார்த்தை அப்பொழுது நிரூபிக்கப்பட்டது. 84. இப்பொழுது, நாம் ஒரு நிமிடம் இங்கு நிறுத்துவோம். பரிசுத்த ஆவியைப் பெற்றதன் பயனாக, என்ன நேர்ந்தபோதிலும் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதை இழந்து போகாமல், தங்கள் சாட் சிகளை தங்களின் சொந்த இரத்தத்தினால் முத்திரித்து மரித்தனர். ஏனெனில் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்த தேவனுடைய உண்மையான வார்த்தை அடையாளங்களினால் உறுதிப்படுத்தப்பட்டது. வெளிப்பாடு உறுதிப்படுத்துதலாயிற்று. அவர்கள் தங்கள் சொந்த இரத்தத்தினால் தங்கள் சாட்சியை முத்திரித்து மரித்தனர். 85. இப்பொழுது கடைசி காலத்திற்கென அளிக்கப்பட்டிருக்கும் வாக்குத்தத்தத்தை சற்று கவனியுங்கள். அது நம் முன்னிலையில் அடையாளங்களினால் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்நிகழ்வேளையில், பரிசுத்த ஆவியானவர் வருகையும் (the present coming of the Holy Spirit) அவர் என்ன செய்யப் போகிறார் என்று சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் செய்து காண்பிக்கிறதையும் நாம் உண்மையாக நம்மிடையே காண்கிறோம், பாருங்கள்? ஓ! நாம் செய்ய... ஓ என்னே! நாம் எவ்விதம் கேட்கக்கூடும்? நான் ஒன்று சொல்லுகிறேன் நண்பனே, நமக்கும் ஏதோ ஒன்று சம்பவிக்கிறது. தேவனால் முன்குறிக்கப்பட்ட உண்மையும் உத் தமுமான விசுவாசி என்னும் வித்தின் மீது வெளிச்சம் படும்போது, புதிய ஜீவனுக்கென்று ஏதோ ஒன்று உடைந்து வெளிப்படுகின்றது (bursts) கிணற்றடியிலிருந்த அந்தப் பெண்.... 86. அக்காலத்து கல்வியறிவு படைத்த ஆசாரியர்கள் இயேசுவைப் பிசாசு என்றும், குறி சொல்லுகிறவன் என்றும் அழைத்தனர். அவன் "அந்த ஜனங்களுக்கு குறிசொல்லுகிறவன். அவன் - ஒரு பிசாசு'' என்றனர். 87. ஆனால் முன் குறிக்கப்பட்ட வித்தாகிய அந்தப் பெண் வார்த்தையினால் உயிர்ப்பிக்கப்பட்டாள். முன் குறிக்கப்படுதல் என்னும் போதகம் தவறென்று எண்ணுகின்றீர்களா? ஆனால், இயேசு, ''என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் என்னிடத்தில் வரான். என் பிதா எனக்களித்த யாவும் என்னிடத்தில் வரும்'' என்று சொன்னார். அவர்... 88. கடைசி காலத்தில் அந்திக்கிறிஸ்து செய்யக்கூடியது. ஸ்தாபனங்களில் காணப்படும் அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப்பற்றி இப்பொழுது நாம் படித்துக் கொண்டுவருகிறோம். ஸ்தாபன முறைகள் அனைத்தும் அந்திக்கிறிஸ்துவினால் உண்டானவை என்று நாம் நிரூபித்தும் இருக்கிறோம். ஸ்தாபன முறைமைகள் அந்திக்கிறிஸ்துவினால் உண்டானதல்லவென்று ஆட்சேபித்து இங்கிருந்து யாராவது ஒருவர் வெளிநடப்பாரானால், அவர்களில் ஏதோ தவறுண்டு என்று அர்த்தம். சபையின் சரித்திரத்தின் மூலமாகவும், வேதவாக்கியங்களின் மூலமாகவும், ஸ்தாபனங்கள் அந்திக்கிறிஸ்துவினால் உண்டானவை என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. ரோமாபுரிதான் அதற்கு தலையாயுள்ளது. குமாரத்தி சபைகள் அவளைப் பின்பற்றி, இருவரும் பாதாளத்தில் தள்ளப்படுகின்றனர். நான் கூறுவது முற்றிலும் உண்மையாகும். அந்தக் கிறிஸ்துவின் ஆவியைக் குறித்து நாம் இப்பொழுது பார்த்தோம். 89. நாம் வாழும் இந்நாட்கள் “சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷத்தை நமக்களிக்க வேண்டும். அது (வெளிச்சம்-தமிழாக்கியோன்) அந்தப் பெண்ணை (கிணற்றடியிலிருந்தவள் - தமிழாக்கியோன்) தாக்கியபோது, அந்த வித்து உடைந்து வெளிப்பட்டது. 90. இப்பொழுது, கடைசி நாட்களில் அந்திக்கிறிஸ்து முழு உலகையும் ஏமாற்றிவிடுவான்” என்பதாக வேதம் உரைக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். 91. உலகத் தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டவர் வெகு சிலர் மாத்திரமே இருப்பர். தேவனுடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாடு அவர்களின் இருதயங்களைத் தொடும்போது, கன்மலை பிளந்து தண்ணீர் புரண்டு வந்தது போன்று, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் இருதயத்தைப்பிளப்பதனால், புதிய ஜீவன் அவர்களிலிருந்து புரண்டோடி வரும். அதை யாருமே நிறுத்த முடியாது. ஏனெனில் புதிய ஜீவன் அங்கே கிரியை செய்தது. 92. சில நாட்களுக்கு முன்பு நான் ஒருவருடன் பேசிக்கொண்டிருந் தேன். அவர் என்னிடம் தர்க்கம் செய்து, “தேவன் வானத்தையும் பூமியையும் மூன்று நாட்களில்... அல்லது ஆறு நாட்களில் சிருஷ்டித்தார் என்று சொல்ல உமக்கு வெட்கமில்லையா?'' என்று கேட்டார். வேதாகமம் அப்படித்தான் கூறுகிறது' என்று நான் பதிலுரைத்தேன். 93. அவர், 'இவ்வுலகம் லட்சக்கணக்கான வருடங்களாய் இருக்கின்றது என்பதற்கு சான்றுகள் எங்களிடம் உண்டு' என்றார். 94. அதற்கு நான், 'அதைக் குறித்து கவலையில்லை என்றேன். ஆதி யாகமம் 1:1ல் 'ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.' என்று கூறுகின்றது. காலப் பகுதி! (Period) அவ்வளவே, பாருங்கள்? 'இப்பொழுது பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையு மாய் இருந்தது என்று எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வித்தும் வேறொரு நாகரீகத்திலிருந்து அல்லது ஏதோ ஒன்றிலிருந்து அநேக வருடங்களாக அங்கு புதைக்கப்பட்டிருந்தது என்று நான் நம்புகிறேன். தண்ணீர் விலக்கப்பட்டு, வெளிச்சம் அதன்மேல் பட்டவுடன், அவை வளர்ந்து மரங்களாயின' என்றேன். 95. மனிதனின் வாழ்க்கையில் சம்பவிக்கும் ஒரு செயலுக்கு அது ஒரு உதாரணமாய் அமைந்துள்ளது. மனிதனுக்குள்ளிருக்கும் வித்தை மறைக்கும் யாவும் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தினால் நீக்கப்பட்டு, வார்த்தையின் உண்மையான உறுதிப்பாட்டினால், சுவிசேஷமென்னும் வெளிச்சம் அதன்மேல் பட்டவுடன், அதனுள் ஜீவன் இருப்பதால் அது ஜீவிக்கத் தொடங்குகிறது. அது அதனை நம்புகிறது. அதன் சூழலுக்குப் புறம்பாக அதனால் ஜீவிக்க முடியாது. ஏனெனில் அதனில் (சூழலுக்குப் புறம்பானதில் - தமிழாக்கியோன்) ஜீவன் இல்லை. 96. அவர்களுடைய பெயர்கள் உலகத் தோற்றத்துக்கு முன்னால் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆகவே நிச்சயமாக அவர்களுக்குள் ஜீவன் உண்டு; அவர்கள் வெளிப்படுவார்கள். ஆகையால்தான் கடைசி வித்து உட்பிரவேசிக்கும் வரை இயேசு தமது மத்தியஸ்த ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறார். வெளிச் சம் எப்பொழுது வித்தின் மேல் படவேண்டுமென்பதை அவர் அறிவார். 97. டாக்டர் லீ வேயில்... அவர் இக்கூட்டத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அநேக நாட்களாக நான் அவரைக் காணவில்லை. நான் அவரைக் கண்டதாக, நான் நம்பவில்லை (ஒரு சகோதரன், 'இதோ அவர் இங்கே இருக்கிறார் என்கிறார்' - ஆசி) அவர் இங்கிருக்கிறார். நல்லது. அன்றொரு நாள் அவர் ஐரினேயஸ் (Irenaeus) கூறியவைகளை ஒரு காகிதத் துண்டில் எழுதி எனக்கு அனுப்பினார். நல்லது. அநேக நாட்களுக்கு முன்பாக ஐரினேயஸை அக்காலத்து சபையின் தூதனாக நான் தேர்ந் தெடுத்தேன். "கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினனாயிருக்கும் அந்தக் கடைசி நபர் உட்பிரவேசித்தல் கடைசி நாட்களில், இந்தக் காலத்தில், நிகழ வேண்டும்... அந்த நேரத்திலே அந்த காரியமானது வெளிப்படுத் தப்படும்.'' அது இங்குள்ளது. அது முற்றிலும் சரியாகும். பாருங்கள்? நாம் அந்த கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சரி. 98. பிறகு பெந்தெகொஸ்தே காலத்தவர் அகமகிழந்திருந்தனர். அவர்கள் உண்மையாக ஊக்குவிக்கப்பட்டனர். அது ஒவ்வொரு வரையும் அவ்விதமே செய்யும் என்று நான் நினைக்கிறேன். 99. தாவீதை நாம் எடுத்துக்கொள்வோம். அவன் உற்சாகமூண்டவனாய், ''என் பாத்திரம் நிரம்பி வழிகிறது'' என்கிறான். அவனுடைய வாழ்க்கையில் மகத்தான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது என்று நான் நம்புகிறேன். அவனை அவ்விதம் செய்யத் தூண்டியது என்ன? அவன் ஆவியில் நிறைந்தபோது அவன் ஒரு தீர்க்கதரிசியென்பதை நாமறிவோம். வேதம் அவனைத் தீர்க்கதரிசியென அழைக்கிறது. இப்பொழுது, தீர்க்கதரிசியாகிய தாவீது, அவன் ஆவியில் நிறைந்தபோது, உயிர்த் தெழுதலை அவன் கண்டான். நீங்கள் படிக்க விரும்பினால் சங்கீதம் 16:8-11யைப் படியுங்கள். அவன், "என் இருதயம் பூரித்தது. என் மகிமை களிகூர்ந்தது. என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்' என்றான். அவன் பாத்திரம் அப்பொழுது நிரம்பி வழிந்தது. ஏனெனில் அவன் உயிர்த்தெழுதல் நிகழ்வதைக் கண்டான். அது என்னவாயிருந்தாலும் சரி, அவன் உயிர்த்தெழுதல் நிகழ்வதைக் கண்டான். ஆம், உண்மையாகவே... அவன் பாத்திரம் நிரம்பி வழிந்தது. 100. வேறொரு முறை தாவீதின் பாத்திரம் நிரம்பி வழிந்தது. வேண்டுமானால் 2 சாமுவேல், 6:14ஐக் குறித்துக் கொள்ளுங்கள். அங்கே வறட்சியான ஒரு நிலையிருந்தது. 101. பெலிஸ்தியர் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் சென்றனர். அவர்கள் உள்ளே வந்து அந்த உடன்படிக்கை பெட்டியைக் கைப்பற்றி அவர்கள் தெய்வமாகிய தாகோன் முன் அதை வைத்தனர். தாகோன் சிலை முகங்குப்புற விழுந்தது. வேறொரு இடத்திற்கு அதைக்கொண்டு சென்றபோது, அங்குள்ள ஜனங்கள் வாதையால் பீடிக்கப்பட்டனர். அது... அங்கே அவர்கள் தங்கள் கரங்களில் ஒருபோதும் பெற்றிராத பயங்கரமானதாக அது அவர்களுக்கிருந்தது. அது இடம் மாறி இருந்ததால், அதனின்று அவர்களால் தப்பிக்க இயலவில்லை. 102. இப்பொழுது, அவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் அதை காளை வண்டியில் ஏற்றி அனுப்பினார்கள். உடன்படிக்கை பெட்டியை தாவீது கண்டவுடன் அவன் என்ன செய்தான் தெரியுமா? அவன் உற்சாகம் கொண்டு அவனுடைய பாத்திரம் நிரம்பி வழிந்தது. தூண்டுதல், வார்த்தையானது மறுபடியும் இஸ்ரவேலருக்கு வெளிப்படுவதை அவன் கண்டு, ஆவியில் நிறைந்து, சுற்றி சுற்றி சுற்றி சுற்றி சுற்றி நடனமாடி வந்தான். ஆம், அவன் பாத்திரம் நிரம்பி வழிந்தது. ஏன்? வார்த்தை திரும்ப வருவதை அவன் கண்டதால். 103. அநேக வருடங்களுக்குப் பிறகு, உண்மையான வார்த்தையானது, இங்கே இருக்கும் என்ற வாக்குத்தத்தத்தால் கொண்டு வரப் பட்டு நிரூபிக்கப்படுவதைக் காணும் எவரும் ஊக்க உணர்ச்சி பெறுவர் என்று நான் நினைக்கிறேன். என்னே ஒரு தருணம்! என்னே ஒரு தருணம்! 104. இப்பொழுது நாம் முத்திரையைக் குறித்து பார்ப்போம். இப்படி பேசிக்கொண்டே சென்றால் நம் பொருளுக்கு நாம் வரமாட்டோம். நான் உங்களை பத்தரை மணிவரையில் வைத்திருக்க வேண்டியதாயிருக்கும். நேற்று இரவு நான் உங்களை சீக்கிரம் அனுப்பிவிட்டதால், இன்று இரவு அதிக நேரம் வைத்திருக்கத்தான் வேண்டும். (சபையார் "ஆமென்” என்கின்றனர் - ஆசி) ஆம். ஆம். இல்லை. நான் உங்களை சற்று நையாண்டி செய்தேன்! (teasing) பாருங்கள்? நான்... இப்பொழுது கர்த்தர் நம்மை வழி நடத்துகின்றபடியே... நாம் விரும்புகிறோம். அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்து பார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். 105. இப்பொழுது ''ஆட்டுக்குட்டியானவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது...'' இங்கு சற்று நிறுத்துவோம். நான்காம் முத்திரை, இப்பொழுது, யார் அதை உடைத்தது? ஆட்டுக்குட்டியானவர். அதைத் திறக்க வேறு யாராவது பாத்திரவானாகக் காணப்பட்டார்களா? வேறு யாரும் அதைத் திறக்கக்கூடாதிருந்தது. இல்லை. ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தார். 106. கழுகைப்போன்று காணப்பட்ட நான்காம் ஜீவன் யோவானிடம், 'இப்புஸ்தகத்தில் மறைக்கப்பட்டிருக்கின்ற, மீட்பின் திட்டத்தின் நான் காவது இரகசியத்தை வந்து பார்,'' என்றது. ஏனெனில், ஆட்டுக்குட்டியானவர் அதைத் திறந்து கொண்டிருந்தார். நாம் வேறு விதத்தில் அதைக் கூறினால், அவர் யோவானிடம், 'இது நான்காம் இரகசியம். நான் இதை அடையாளங்களாகக் காண்பித்தேன். அதைப் புரிந்து கொண்டாயோ என்னவோ?' என்றார். என்றாலும், அவன் கண்ட விதமாக அதை எழுதினான். அதன் அர்த்தம் இரகசியமாகவே இதுவரை இருந்து வந்தது. ஆகவே, அவன் என்ன கண்டானோ அதை எழுதி வைத்தான். 107. ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளை உடைத்துக் கொண்டிருந்தார். ஆனால் தேவனோ அதை இன்னும் வெளிப்படுத்தாதிருந்தார். அது கடைசி நாட்களுக்கென்று விடப்பட்டிருந்தது. பாருங்கள்? அது அடையாளங்களாய் இருந்தது. அதை நாம் ஆராய்ந்தோம். சில சமயங்களில் மிக நன்றாகவே ஆராய்ந்தோம். ஆனால் அதுவோ தொடர்ந்து முன் சென்றது என்று நாம் அறிவோம். ஆனால் இப்பொழுது, இந்தக் கடைசி நாட்களில், அது என்னவாயிருந்தது என்பதை நாம் திரும்பிப் பார்க்க முடிகின்றது. எடுக்கப்படுதலுக்கு முன்னர் கடைசி கால சபையின் முடிவில் அது வெளிப்படும். 108. சபையானது உபத்திரவ காலத்தில் பிரவேசிக்கும் என்று எங்ஙனம் யாராகிலும் கூறமுடியுமென்று எனக்குப்புரியவேயில்லை. அது எதற் காக உபத்திரவ காலத்திற்குள் பிரவேசிக்கவேண்டும்? அதற்குத்தான் பாவமென்பதே கிடையாதே! நான் சபையைக் குறிப்பிடவில்லை. சபை யானது உபத்திரவ காலத்தில் பிரவேசிக்கும். நான் இங்கு குறிப் பிடுவது மணவாட்டியாகும். மணவாட்டியினிடம் பாவமென்பது கிடையாது. அது முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டது. அதன் வாசனை என்பதும் இல்லை. அதில் சிறிதேனும் விடப்படவில்லை. அவர்கள் தேவனுடைய சமூகத்தில் பரிபூரணமுள்ளவராய் இருக்கின்றனர். அவர்களைச் சுத்தி கரிக்க உபத்திரவம் அவசியமில்லை. ஆனால் மற்றவர்க்கு அது அவசியம். சபையானது உபத்திரவ காலத்திற்குள் செல்லவேண்டும். ஆனால் மண வாட்டிக்கு அது அவசியமில்லை. 109. இப்பொழுது, இதற்கு முன்னடையாளங்களாக இருப்பவைகளை நாம் எடுத்துக் காண்பித்தோம். நோவா உபத்திரவ காலத்திற்குள் சென்று வெளிவந்து, பாவத்தில் விழுந்தான். நோவா உபத்திரவ காலத்திற்குள் கடந்து சென்று வெளி வருவதற்கு அடையாளமாயிருந்தான். பாருங்கள்? இப்பொழுது, அவர்கள் உபத்திரவத்திற்குள்ளாகச் சென்ற னர். ஆனால் ஏனோக்கு அதற்கு முன்னால் எடுக்கப்பட்டான். உபத்திரவ காலத்திற்கு முன்பு பரிசுத்தவான்கள் எடுக்கப்படுவார்கள் என்பதற்கு ஏனோக்கு ஒரு உதாரணமாயிருக்கிறான். ஆட்டுக்குட்டியானவர் முத்திரையை உடைத்தார் என்று நாம் இப்பொழுது காண்கிறோம். 110. இப்பொழுது முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பானதாய் இருந்தது என்பதை நாம் காண்கிறோம். அதை நாம் சபையின் காலங்களைப் பற்றி சிந்திக்கும் போது பார்த்தோம். இரண்டாம் ஜீவன் காளைக் கொப் பாகவும், மூன்றாம் ஜீவன் மனித முகம் கொண்டதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன. அவைகள் எவ்வாறு தொடர்ச்சியாக மாறி மாறி வந்தன (Rotation) என்று நாம் சரியாகப் பார்த்தோம். அது இந்தப் புஸ்தகத்திலும் சரியாக அவ்விதமே அமைக்கப் பட்டுள்ளது. 111. ஒருமுறை ஒரு சிறந்த போதகர் ஃப்ளாரிடாவில் (Florida) "அப்போஸ்தல நடபடிகள் புஸ்தகம் சபைக்கு சாரமாக (Scaffold work) அமைந்திருக்கிறது. சபையானது நான்கு சுவிசேஷங்களில் காணப்படு கின்றது,'' என்றார். 112. இந்த நான்கு சுவிசேஷ புத்தகங்களும், அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தைக் காவல் புரிகின்றன என்று நாம் காண்கிறோம். இந்த நான்கு சுவிசேஷங்களிலிருந்துதான் அப்போஸ்தல நடபடிகள் எழுதப் பட்டன. அப்போஸ்தல நடபடிகள், பரிசுத்த ஆவியானவர், அப்போஸ் தலருக்குள் செய்த கிரியைகள் ஆகும். அவை (ஜீவன்கள் - தமிழாக்கியோன்) முறையே கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளிலும் உட்கார்ந்து கொண்டு அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தைக் காவல் காக்கின்றன என்றும் நாம் பார்த்தோம். நாம் அதை எவ்விதமாக வரைந்து காண்பித்தோம் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். எவ்வளவு அழகாக பரிபூரணமாக இவை பொருந்துகின்றன! 113. இப்பொழுது, நீங்கள் ஒன்றை கவனிக்க விரும்புகிறேன். அந்த ஜீவன் “வந்து, பார்” என்றது. யோவான்... அந்திக் கிறிஸ்துவின் கிரியைகள் வெளிப்படுவதால் குதிரை சவாரி செய்பவர்களில் இவன்தான் கடைசியானவன் என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். நாளை இரவு பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களைக் குறித்து நாம் தியானிப்போம். அதற்கு அடுத்த நாளிரவு - நியாயத்தீர்ப்பு. 114. அதற்கும் அடுத்த இரவு, யுகம் முடிவடைதல், எல்லாம் முடிந்து போகும் சமயம். அப்பொழுது மணவாட்டி எடுக்கப்பட்டிருப்பாள். ஏழாம் முத்திரையின்போது, கலசங்கள் ஊற்றப்படுகின்றன. எல்லாமே அப் பொழுது ஊற்றப்படுகின்றது. அவை என்னவென்பதை நான் இதுவரை அறியேன். 115. கவனியுங்கள். ஆனால் இப்பொழுது, நாம் காண்கின்ற இந்த நபர் கழுகாக இருக்கிறான். இந்த மனிதன்... அல்லது இப்பொழுது ஊற்றப் பட்டிருக்கின்ற இந்த ஜீவன் பறக்கும் கழுகுக்கு ஒப்பாக இருந்தது. வேறுவகையில் கூறுவோமானால், நான்கு வித்தியாசமான காலங்கள் உண்டாயிருந்தன. சிங்கத்தின் காலம் ஒன்று உண்டாயிருந்தது. இப் பொழுதுள்ளது நான்காம் காலம்.... 116. ஆகவே அந்த ஜீவன் யோவானிடம், ''மீட்பின் புஸ்தகத்தில் மறைந்துள்ள நான்காம் இரகசியம் என்னவென்று வந்து பார்” என்று சொன்னது. யோவான் மங்கின நிறமுள்ள ஒரு குதிரையையும் மற்ற குதிரைகளின் மேல் சவாரி செய்த அதே ஆள் அதின்மேல் ஏறியிருப்ப தையும் கண்டான். 117. அவனுக்கு 'மரணம்' என்னும் பெயரிடப்பட்டிருந்தது. இப் பொழுது கவனியுங்கள். இவன் மற்றைய குதிரைகளின் மேல் சவாரி செய்தபோது, இவன் சவாரி செய்த எந்த காலத்திலும், அவனுக்குப் பெயர் சூட்டப்படவில்லை என்பதைக் கவனிக்கவும். ஆனால் இப்பொது அவன் "மரணம்'' என்று அழைக்கப்படுகிறான். அது அப்பொழுது கூறப்படவில்லை. பாருங்கள்? அதாவது அவன் யாரென்பது இப்பொழுது வெளிப்படுகிறது- மரணம் 118. நல்லது, அதைக் குறித்து நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானா லும் பிரசங்கம் செய்து, அதை உண்மையாகவே தெளிவுபடுத்தலாம். உண்மையான ஒன்றுக்கு விரோதமாயிருப்பது, மரணமாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் ஜீவன், மரணம் என்ற இரண்டு மட்டுமே உண்டு. பரிசுத்த ஆவியானவர் இக்காலத்தில் அளிக்கும் வெளிப்பாடு முற்றிலும் உண்மை என்பதை இது நிரூபிக்கின்றது. ஜீவனுக்கு விரோத மானதுதான் மரணம். ஏனெனில், வார்த்தைதான் ஜீவன். அதை நாம் சிறிது நேரத்தில் காண்போம். பாருங்கள்? 119. ஆகவே, இந்த மனிதன் 'மரணம்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். இப்பொழுது இந்த குதிரை சவாரி செய்பவனைக் குறித்து, மற்ற காலங்களில் இவ்வாறு அழைக்கவில்லை. ஆனால், இப்பொழுதோ இவன் 'மரணம்' என்று அழைக்கப்படுகிறான். 120. சிங்கத்தின் வெளிப்பாட்டிலே... இப்பொழுது கவனியுங்கள். நான் நிச்சயமுள்ளவனாயிருக்கும்படி நான் இதைக் கூர்ந்து படிக்க விரும்புகிறேன். நான் இதைக் குறிப்பெடுத்து எழுதி, பொருத்தி உங்கள் முன் நிற்கிறேன். முதலாம் காலமாகிய சிங்கத்தின் காலத்தில் அவன் பெயர் என்னவென்பது வெளிப்படவில்லை. அதற்கடுத்த காலமாகிய காளையின் காலத்திலும்- இருளின் காலங்கள்- அது என்னவென்று வெளிப்படவில்லை. மூன்றாம் காலமாகிய மனிதனின் காலத்திலும்-லூதர், வெஸ்லி போன்ற சீர்திருத்தக்காரர் தோன்றின காலம்-இது வெளிப்பட வில்லை. ஆனால் கடைசி காலமாகிய கழுகின் காலத்தில் - அதாவது தீர்க்கதரிசியின் காலத்தில் - ஒரு தீர்க்கதரிசியின் மூலம் இரகசியங்கள் வெளிப்படவிருக்கும் காலத்தில் இது வெளிப்படுகின்றது. இப்பொழுது நாம் இங்கே தான்.... 121. நீங்கள் நன்றாக இதை அறிந்து கொள்ள வேண்டுமென்று கருதி இதை சற்று இன்றிரவு விவரிக்க விரும்புகிறேன். இப்பொழுது, அநேக நேரங்களில், நாம் அறிந்து கொள்வது, இவைகள்... நான் இப்பொழுது அளிக்கும் செய்தி இங்கு கூடியவர்களுக்காக மாத்திரமல்ல. இது பதிவு செய்யப்பட்டுள்ள ஒலி நாடாக்கள் எல்லாவிடங்களிலும் செல்கின்றன. ஆகவே நான் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏனெனில் யாரா வது ஒருவருக்கு இந்த ஒரு ஒலிநாடா மாத்திரம் கிடைத்து, மற்றைய ஒலிநாடாக்கள் கிடைக்காவிடில், அவருக்கு ஒன்றுமே புரியாது. கலப்புற்று வந்துள்ள எல்லா வித்தியாசமான காரியங்களுக்கும் இக் கடைசி காலத்தில் முடிவு அளிப்பதாக, தேவன் இதை வாக்களித் திருந்தார். நாம்... 122. 'எலியாவின் அங்கி' என்று கூறப்பட்டது நம்மிடையே காணப் பட்டது. ஓ, மக்கள் இருந்தனர்.... ஜான் அலெக்ஸாண்டர் டெளவி (John Alexander Dowie) என்பவர் தன்னை எலிசாவென்று அழைத்துக்கொண் டார். அவர் அங்கியினால் சுற்றப்பட்டு புதைக்கப்பட்டார். அவ்விதமாக அநேக செயல்கள் நம்மிடையே காணப்பட்டன. அவை என்ன? இனி வெளியாகவிருக்கும் சத்தியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துப் போடவே இவை அனைத்தும் உண்டாயின. பாருங்கள்? இயேசு இவ் வுலகில் தோன்றும் முன் அநேக கள்ள கிறிஸ்துக்கள் தோன்றினர். பாருங்கள்? எல்லா காலத்திலும் அவ்வாறே சம்பவிக்கின்றது. உண்மை யான ஒன்று சம்பவிக்கும் முன்னர் போலியானவைகளைக் கொண்டு ஜனங்களின் இருதயங்களைக் குழப்பமுறச் செய்ய சாத்தான் விழைகிறான். அவ்வளவே தான். 123. அக்காலத்து யூதர்களிடம் கமாலியேல், ''இந்நாட்களுக்கு முன்னே ஒருவன் எழும்பி நானூறு பேரை வனாந்திரத்துக்கு அழைத்துச் சென் றான். அவன் அழிந்துபோனான். அவனை நம்பியிருந்தவர்கள் சிதறி அவ மாய்ப் போனார்கள்'' என்று கூறினானல்லவா? 124. இயேசுவும், ''என் பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்'' என்று சொன்னார். 125. கமாலியேல் அவர்களிடம் 'இவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுங்கள். இது மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம், தேவனால் உண்டாயிருந்ததேயானால், தேவனோடு போர் செய்கிறவர்களாகக் காணப்படுவீர்கள்' என்றான். அவன் நியாய சாஸ்திரியாயிருந்த தால் ஞானமாய்ப் பேசினான். 126. இப்பொழுது கவனியுங்கள், இதுவரை வெளிப்படாத எல்லா தேவரகசியங்களையும் வெளிப்படுத்துவதற்கென உண்மையான எலிசாவின் ஆவியைக்கொண்ட ஒருவரை எழுப்புவதாக கர்த்தர் மல்கியா 4-ம் அதிகாரத்தில் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அது தவறு என்று ஒரு வர் எனக்கு எழுதியுள்ள குறிப்புகளும் கடிதங்களும் என்னிடமுள்ளன. அதை எழுதினவரிடம் நான் உரையாட விரும்புகிறேன். பாருங்கள்? ஏன்? இதை யாருமே மறுக்கமுடியாது. வேத சாஸ்திரம் நன்கு படித்த எவரும் இது உண்மை என்பதனை அறிவர். அவர்களும் அவன் வரு கையை எதிர்நோக்கியிருக்கின்றனர். 127. கிறிஸ்துவுக்கு முன்பு யோவான்ஸ்நானன் தோன்றியபோது என்ன நிகழ்ந்ததோ அதுவே இப்பொழுது சம்பவிக்கும். யோவான் ஸ்நானனைக் குறித்து மகத்தான காரியங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கப் பட்டிருந்தபடியால், அவர்கள் அவனை அறிந்து கொள்ளத் தவறினர். அவன் வந்து குன்றுகளைத் தாழ்த்தி, பள்ளங்களை உயர்த்தி, கரடுமுரடா னவைகளைச் சமமாக்குவானென்று, ஓ, அவன். அவன் தோன்றுவதற்கு 712 வருடங்களுக்கு முன்பு ஏசாயாவும், 400 வருடங்களுக்கு முன்னர் மல்கியாவும் தீர்க்கரிசனம் உரைத்தனர். பரலோகத்தின் நடைபாதை பூமிக்கு இறக்கப்பட்டு, அவன் தன் கையில் கோலைப் பிடித்துக்கொண்டு அதன் வழியாக தேவனிடத்திலிருந்து இறங்கி வருவானென்று அக் காலத்தவர் எண்ணியிருந்தனர். 128. ஆனால் என்ன நேர்ந்தது? ஐக்கிய சீட்டையோ, நற்சாட்சிப் பத்திரத்தையோ பெற்றிராத ஒருவன், சாதாரண கல்வியறிவும்கூட படைத்திரா மல், வனாந்திரத்தில் வாசம் செய்து வந்தான். அவன் ஒன்பது வயது சென்றபோது அவன் பெற்றோர் காலமான பிறகு- அவன் வனாந்திரத் துக்குச் சென்றதாக சரித்திரக்காரர்கள் கூறுகின்றனர். அவனுக்களிக்கப் பட்டிருந்த ஊழியம் மிகவும் முக்கியமான ஒன்றாய் இருந்ததால், அவன் வேதபள்ளிகள் போதிக்கும் தத்துவங்களினால் குழப்பமடையக் கூடாது, அவன் மேசியாவின் வருகையை அறிவிக்க வேண்டியதாயிருந்தது. 129. வேதபள்ளிகளின் போதனைகளால் நிரம்பிய ஒருவனை தேவன் உபயோகிக்க முடியாது. ஏனெனில் அவன் எப்பொழுதும் அப்போதனை களினால் இழுப்பட்டுச் செல்வான். அது அவன் கல்வியின் வரிசைப் படியே அமைந்திருக்கும். அதனிடம் இழுபட்டுச் செல்வான். அவன் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற நேரிட்டாலும், அவனறிந்த போத கங்களுக்குச் சென்று, அதனுடன் அந்த வெளிப்பாட்டை ஒப்பிட்டு நோக்க முயல்வான், அவைகளின்று அவன் விலகி, தேவனை மாத்திரம் விசுவாசித்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! | 130. அவர்கள் அவனைக் கண்டுகொள்ளத் தவறினர் என்று நாம் காண் கிறோம். அங்கு நின்றிருந்த அப்போஸ்தலரும்கூட அவரை அறிந்து கொள்ளவில்லை. 'எலியா முந்தி வரவேண்டுமென்று வேதவாக்கியங்கள் உரைக்கின்றனவே?' என்று அவர்கள் கேட்டனர். 131. அதற்கு இயேசு, ''எலியா ஏற்கனவே வந்தாயிற்று. நீங்களோ அவனை அறியவில்லை'' என்பதாக பதிலுரைத்தார். 132. உயிர்த்தெழுதலும் அல்லது எடுக்கப்படுதலும் அதே மாதிரி சம்பவிக்கும். அது சம்பவித்ததை அவர்கள் அறியாமல் போவார்கள். நான் கூறுவது ஒருக்கால் உங்களுக்கு வினோதமாகத் தென்படும். கர்த்தருக் குச் சித்தமானால் இன்றிரவு கூட்டத்துக்குப் பிறகு. அது எவ்விதம் சம்பவிக்குமென்பதை சற்று அதிகமாக நீங்கள் அறிந்துகொள்ளலாம். பாருங்கள்? அது இரகசியமாக நிகழ்வதால், பெருபான்மையோர் நிகழ்ந் ததை அறியமாட்டார்கள். உலகத்திலுள்ளளோர் அவர்கள் எப்பொழுதும் போல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பார்கள். அவர் எப்போதும் அதை அதே வழியில் தான் செய்கிறார். 133. நீங்கள் அறிவீர்கள். நான் சந்தேகப்படுவது... இயேசு உலகில் தோன்றியபோது, அக்காலத்து ஜனத்தொகையில் பத்தாயிரத்தில் ஒருவர் கூட அதை அறிந்திருக்கவில்லையென்று நான் சொல்லக்கூடும். எலியா தீர்க்கதரிசனம் உரைத்தபோது, அவன் தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்பதை அநேகர் அறிந்து கொள்ளவில்லை. அவனை ஒரு பைத்தியக்காரனாக, பழைய மதவெறியனாக- அவர்கள் கருதி, அவனை முற்றிலும் வெறுத்தனர். நிச்சயமாக. அவர்கள் அவனை விநோதமானவன் என்று அழைத்தனர். 134. மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் உலகத்தாரின் கண்களில் விசித்தரமுள்ள ஒருவனாகவே (Odd Ball) தென்படுவான். ஏனெனில் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் பழைய நிலைமையிலிருந்து முற்றிலும் மாறிவிட்டீர்கள். நீங்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்தவர்கள். பிளவின் மற்ற எல்லையிலுள்ள ஆவியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் இங்கேயோ எல்லாமே குழப்பமுற்றுள்ளது. நீங்கள் அவர்களி னின்று வித்தியாசமுள்ளவர்களாகக் காணப்படாவிடில் உங்களில் ஏதோ தவறுண்டு. நீங்கள் இன்னும் பூமிக்குரியவர்களாயிருக்கின்றீர்கள். அங்ஙனமாயின், நீங்கள் பரலோக சிந்தையையே உடையவர்களா யிருத்தல் வேண்டும். பரலோகம் தேவனுடைய வார்த்தையினால் ஜீவிக் கின்றது. 135. இப்பொழுது, இந்த மகத்தான சம்பவம் நிகழ்ந்தது என்று பார்த்தோம், இக்காலத்திலும் உண்மையான எலிசாவின் ஆவி திரும்பவும் வரவேண்டுமென்று நாம் விசுவாசிக்கிறோம். அது வருமென்று தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. பாருங்கள் ஆகவே ஏற்றகாலத்திலும் நேரத்திலும் அது தோன்றும் என்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். அது வருவதற்கென்று ஒருக்கால் நாம் இப்பொழுது அஸ்திபாரம் போட் டுக் கொண்டிருக்கலாம். என்னவாயினும் அது ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒன்றாக இருக்கவே முடியாது. 136. என் அருமை நண்பர் ஒருவர் எலியாவின் ஆவியென்பது ஒரு ஜனக் கூட்டமாயிருக்கும் என்கிறார். அதை நான் மறுக்கிறேன். அதற்கு நீங்கள் வேதத்திலிருந்து ஆதாரம் காட்டுங்கள் பார்ப்போம்! என்றும் மாறிடா தேவன் தம் திட்டங்களையும் ஒரு போதும் மாற்றுவது கிடை யாது. அவர் அங்ஙனம் செய்தால் அவர் தேவனல்ல. அது சரி. அப்படி யானால் அவர் நாம் அறிந்துள்ளது போலவும், நம்மைப் போன்று பிழைகளைச் செய்யும் மனிதனாகவும் அவரைக் கருதவேண்டும். 137. ஏதேன் தோட்டம் காலம் முதற்கொண்டு அவர் தமது திட்டங்களை ஒருபோதும் மாற்றி அமைத்தது கிடையாது. மீட்புக்கென்று அவர் ஒரு திட்டத்தை வகுத்தார். அதுதான் இரத்தம் சிந்துதலாகும். நாம் ஒருங்கே சேர்ந்து ஒருவரில் ஒருவர் அன்பு கூருவதற்கென கல்வியறிவைப் பயன்படுத்தினோம்; அடக்கு முறையைக் கையாண்டோம்; மனோதத்துவ முறைகளை உபயோகித்துப் பார்த்தோம். ஸ்தாபன முறைகளையும் கூட நாம் பிரயோகித்தோம். ஆனால் இயேசுவின் இரத்தத்தின் கீழன்றி வேறு எவ்விடத்திலும் நாம் ஐக்கியங்கொள்ளுதல் இயலாது. தேவன் மனிதனைச் சந்திக்கும் ஒரே ஸ்தலம் அதுவாகும். 138. தேவன் எப்பொழுதுமே தனிப்பட்ட நபருடன் ஈடுபடுகிறார். இரு வர் இருந்தால் அவர்களுக்கு இருவித எண்ணங்கள் உண்டாயிருக்கும். ஒரே சமயத்தில் இரண்டு பெரிய தீர்க்கதரிசிகள் ஒரே காரியத்தில் தீர்க்க தரிசனத்தை உரைத்துக் கொண்டு உலகில் இருந்ததேயில்லை என்பதை வேதத்தை ஆராய்ந்து கண்டு கொள்ளுங்கள். இல்லை. ஐயா. அவர் எப் பொழுதும் தன்னை முற்றிலும் ஒப்புவித்த ஒருவனை மாத்திரமே காலங் கள்தோறும் உபயோகித்துக் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய வார்த்தைக்கு முற்றிலுமாக செவிகொடுக்கும் ஒருவனை அவர் தேடிக் கண்டு பிடிக்கிறார். 139. ஆனால், அவருடைய வார்த்தைக்கு வார்த்தை செவி கொடுக்கும் யாரோ ஒருவன் இருப்பான். மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. அவர்கள் ஒருபோதும் அதனின்று அசையமாட்டார்கள். அது உண்மை . கர்த்தர் உரைக்கிறதாவது என்பதற்காக அவர்கள் காத்திருப்பார்கள். அதுவரையிலும் அவர்கள் அசைவதில்லை. அவ னுடைய ஊழியம் அற்புத அடையாளங்களினாலும் நிரூபிக்கப்படும். 140. இப்பொழுது, உலகத்தார் அவனை வெறுப்பார்கள். ஆனால் தெரிந்துகொள்ளப்பட்ட வித்து. முன் குறிக்கப்பட்ட வித்து, இயேசு வின் காலத்தில் அவரை அறிந்துகொண்டது போன்று, அவனை அறிந்து கொள்ளும். வெளிச்சம் அதன் மேல் பட்டவுடன் அதைப்போன்று உயிர்பெறும். (சகோதரன் பிரான்ஹாம் தன் விரல்களை ஒருமுறை சொடுக்குகிறார் -ஆசி) அவர்கள் அவனை எளிதில் அறிந்துகொள்வார்கள், புரிந்து கொள்வார்கள். நீங்கள் அதைக் குறித்து ஒரு வார்த்தையும் மறுத்துப் பேச அவசியமிராது. 141. சமாரிய ஸ்திரீ, "நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வரும்போது இவைகளைச் செய்வார்'' என்றாள். அப்பொழுது இயேசு, 'நானே அவர்' என்றார். 142. மனிதனே, அது அவளுக்குப் போதும். அதை அறிந்து கொள்ள அவள் முழு இரவும் அதற்கடுத்த இரவும் காத்திருக்க வேண்டிய அவசியம் உண்டாயிருக்கவில்லை. அந்த க்ஷணமே அவள் அவரை அறிந்து கொண்டாள். அவள் தெருக்களில் சென்று அந்தச் செய்தியை மற்றவ ர்களுக்கு அறிவித்தாள். 143. இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள், முதலாம் காலம் சிங்கத்தின் காலம். யூதா கோத்திரத்து சிங்கமான கிறிஸ்துவின் வல்லமை, ஜனங்களின் வாழ்க்கையை அக்காலத்தில் ஆட்கொண்டது. முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாக இருந்தது.- மிருகம் (Beast) என்றால் வல்லமை என்று பொருள். அது (வல்லமை) மனித சத்தத்தின் மூலம் பதிலளித்தது. 144. அதற்கடுத்த காலம் காளையின் காலம் அல்லது சிவப்பு குதிரை யின் மேல் சவாரி செய்பவனின் காலம். பாருங்கள்? 145. இப்பொழுது, முதலாம் காலம் வெள்ளைக் குதிரையின் காலம். வெள்ளைக் குதிரை சபையின் வல்லமையைக் குறிக்கிறது என்றும் அது ஜெயித்துக்கொண்டே சென்றது என்றும் ஜனங்கள் கூறக் கேட்டிருக்கிறேன். அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு ஒரு கிரீடம் பின்னர் அளிக் கப்பட்டது என்று நாம் பார்த்தோம். அது சபைதான். ஆனால் அது எங்கு சென்றது? ரோமாபுரிக்கு. அங்குதான் அவன் தன் கிரீடத்தைப் பெறுகி றான். 146. இப்பொழுது, இரண்டாம் காலம் சிவப்பு குதிரையின் மேல் சவாரி செய்பவனின் காலம். அது இருண்ட காலம். 147. இப்பொழுது - இப்பொழுது - அதற்கடுத்த காலம் மனிதனின் காலம் அல்லது கறுப்புக் குதிரையின் மேல் சவாரி செய்பவனின் காலம். அச்சமயத்தில் சீர்திருத்தக்காரர்கள் தோன்றினர். பாருங்கள் பேசிய அந்த சத்தமாகும். இப்பொழுது, கறுப்புக் குதிரையின் மேல் சவாரி செய்பவன் அந்திக்கிறிஸ்து. ஆனால் அந்த காலத்தில் பேசிய அந்த ஒன்று மனிதனில் பிரதிநிதித்துவம் காண்பித்தது. மனிதன் ஞானத்திற்கும், புத்திசாலித்தனத்திற்கும், மதி நுட்பத்திற்கும் எடுத்துக்காட்டாக இருக்கி றான். பாருங்கள்? கறுப்புக் குதிரையின் மேல் சவாரி செய்பவனுக்கு ஒரு பெயர் அப்பொழுது கொடுக்கப்படவில்லை. பாருங்கள்? அவன் சவாரி செய்தான் என்று மாத்திரம் அவர்கள் கூறினர். 148. ஆனால் நான்காம் காலமாகிய கழுகின் காலத்தில்- தேவன் தம் தீர்க்கதரிசிகளை எப்பொழுதும் கழுகுக்கு ஒப்பிடுகிறார். தம்மையும் ஒரு கழுகு என்று அவர் அழைத்துக் கொள்கிறார். கழுகு அதிக உயரம் பறப் பதால், வேறெதுவும் அதைத் தொட முடியாது. உயர பறப்பதற்கு அவ சியமான உடலமைப்பை அது பெற்றுள்ளது. அது உயர செல்லும் போது அது எங்கிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறது. சிலர் உயரமான நிலையையடைந்ததும், அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை காணமுடிவதில்லை; அதனால் எவ்வித உபயோகமுமில்லை. ஆனால் நீங்க ள்... 149. ஒரு காகம் அல்ல, ஒரு பருந்து கழுகுடன் போட்டியிட்டு உயரப் பறக்க எண்ணினால், அது சின்னாபின்னமாகப் போய்விடும், அப்படி பறக்க வேண்டுமானால் கழுகைப்போன்று அழுத்தத்தை தாங்கக்கூடிய உடல்வன்மை அதற்கு இருக்கவேண்டும். 150. நம்மிடம் அதே தவறுதான் காணப்படுகின்றது. நம்மில் சிலருக்கு அவ்வாறே அழுத்தத்தை மேற்கொள்ளும் அளவுக்கு சக்தியில்லை. அதன் விளைவாக நாம் உயரச் செல்லும்போது வெடித்துப் போகிறோம். நீங்கள் பாருங்கள்? அழுத்தத்தை மேற்கொள்ளும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். 151. நீங்கள் உயரச் செல்லும்போது, வரப்போவது என்னவென்பதை அறிந்து அதற்கேற்ப செய்ய நமக்குக் கழுகின் பார்வை அவசியம். இப்பொழுது, கழுகின் காலம் அதை வெளிப்படுத்தியது. கழுகின் காலம் கடைசி நாட்களில் வருமென்று வெளி 10:7லும் மல்கியா...1,4லும் வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது என்று நாம் காண்கிறோம். பாருங்கள் அது கடைசி நாட்களில் இங்கே இருக்கும். அது சரி, அது இங்கிருக்கும். கவனியுங்கள். 152. இப்பொழுது, இந்த மனிதன் இப்பொழுது மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறான் என்று நாம் காண்கிறோம். மங்கின நிறம் -ஓ! என்னே ! பிறகு, கவனியுங்கள் பிறகு... 153. 6,80,00,000 பிராடெஸ்டெண்டுகள்: ரோம சபையை எதிர்த்ததன் விளைவாக 6,80,00,000 பேர் இரத்த சாட்சிகளாக கொல்லப்பட்டதாக ஸ்மக்கர் என்பவர் எழுதிய 'மகிமையுள்ள சீர்திருத்தம்' என்னும் புத்தகத்தில் நாம் வாசித்துள்ளோம் என்று நேற்று இரவு பார்த்தோம். 1500 வருடம்வரை என்று நான் நம்புகிறேன் அல்லது பதினெட்டாவது... இப்பொழுது எனக்கு அது சரியாக ஞாபகமில்லை. அவன் தன்னைத்தானே ஆள்மாறாட்டம் செய்து 'மரணம்' என்னும் பெயரில் உருவகப்படுத்திக் கொண்டதில் வியப்பொன்றுமில்லை. அவன் நிச்சயமாக அவ்வாறே இருக்கிறான். 154. இப்பொழுது, அவன் வேத விரோத, வார்த்தைக்கு விரோதமான தன்னுடைய போதனையினால் ஆவிக்குரியப் பிரகாரமாக எத்தனைப் பேரைக் கொன்றான் என்பதை தேவன் மாத்திரமே அறிவார். 6,80,00,000 பேரை அவன் பட்டயத்ததினால் கொன்றுபோட்டான். சரியாகச் சொல்வோமானால் அநேகமாக அவன் தன் கள்ள போதகத்தினால் கோடிக் கணக்கில் (Billions) ஆவிக்குரிய பிரகாரமாக மாண்டனர். ஆகையால் 'மரணம்' என்று அவன் அழைக்கப்படுவதில் வியப்பொன்றுமில்லை. 155. அந்த மனிதனை நீங்கள் கவனித்தீர்களா? தொடக்கத்திலேயே அவன் மரணமாயிருந்தாலும், களங்கமற்றவனைப்போல் அவன் அப்பொழுது காணப்பட்டான். அதன் பின்பு ஒரு கிரீடத்தை (மூன்று கிரீடங்களை) அவன் பெறுகிறான். அவன் கிரீடம் சூட்டப்பட்டபோது, சபை யையும் அரசாங்கத்தையும் அவன் ஒன்றாக இணைத்து அதன் மேல் ஆதிக்கம் செலுத்துகிறான். அந்திக்கிறிஸ்து என்று அழைக்கப்படும் இவன் மனிதன் உருவில் காணப்படும் சாத்தானாகும். 156. சாத்தான் நமது கர்த்தராகிய இயேசுவுக்கு உலகத்தின் இராஜ்யங் கள் அனைத்தையும் அவைகளின் மகிமையையும் ஒரு நொடிப்பொழுதில் காண்பித்து, அவை அவனுக்குச் சொந்தமானதென்றும், அவனைப் பணிந்து கொண்டால் உலகத்தின் இராஜ்யங்களை அவருக்கு அளிப்பதாகவும் கூறினானென்று மத்தேயு 4-ம் அதிகாரத்தில் படிக்கிறோம். 157. ஆகவே, சாத்தான் சபையையும் அரசாங்கத்தையும் ஒன்றுபடுத்த முடியுமானால், சிவப்பு குதிரையின் மேலிருக்கிறவன் நிச்சயம் அதின் வழியாக சவாரி செய்து செல்ல முடியும். பாருங்கள்? உண்மை! இப்பொழுது, அவனுடைய சபை, அரசாங்கத்தில் அவனுடைய இரகசியம் என்ன என்று இங்கே நாம் காண்கிறோம். 158. சாத்தான் தன்னுடைய ஊழியத்தின் நான்காவது கட்டத்தில் மிருகம் என்று அழைக்கப்படுகிறான். தொடக்கத்தில் அவன் அந்திக் கிறிஸ்துவென்றும், அதன் பின்னர் கள்ளத்தீர்க்கதரிசியென்றும், மிருகம் என்றும் அழைக்கப்படுகிறான். ஆனால் இப்பொழுது அவனுக்கு மிருகம் என்னும் பெயருண்டு என்று நாம் காண்கிறோம். இப்பொழுது, இந்த நான்காவது குதிரையைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 159. இந்த நான்காவது குதிரையில், நீங்கள் கவனித்தால், எல்லாம்... அவன் ஏறிச்சென்ற முதலாம் குதிரை வெள்ளை நிறமுடையதாயிருந்தது. அதற்கடுத்தது சிவப்பு நிறமுள்ளதாயும், மூன்றாம் குதிரை கறுப்பு நிறம் கொண்டதாயும் இருந்தன. நான்காம் குதிரை மங்கின நிறமுள்ளதாயிருந்தது. வெள்ளை, சிவப்பு, கறுப்பு இம்மூன்று வர்ணங்களைக் கலந்தால், மங்கின நிறம் கிடைக்கின்றது. பாருங்கள்? அவன். அவை எல்லாம் இந்த ஒரு குதிரைக்குள் கலந்துள்ளன. பாருங்கள்? எனவே, முதல் மூன்று ஊழியங்களையும் ஒருங்கே கொண்டவனாக அவன் நான்காம் குதிரையின் மேல் சவாரி செய்கிறான். 160. இப்பொழுது இந்த நான்கு குதிரைகளையும் நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நான்கு, அந்த ஆவிக்குரிய கணிதம் என்ன என்பதைக் கவனியுங்கள். தேவனுடைய எண்ணிக்கை மூன்று என்பதாகும். ஆனால் இவன் எண்ணிக்கை நான்காக இருப்பதைக் கவனிக்கவும். அவன் இங்கே நான்கில் இருக்கிறான். முதலில் அந்திக்கிறிஸ்து - வெள்ளை; இரண்டாவது கள்ளத்தீர்க்கதரிசி - சிவப்பு; மூன்றாவது வானத்துக்கும் பூமிக்கும் பாவவிமோசன ஸ்தானத்துக்கும் (Purgatory) பிரதிகுரு (Vicar) கறுப்பு; நான்காவது, மிருகம் - மங்கின நிறமுள்ள குதிரை, சாத்தான் வானத்திலிருந்து உதைத்துத் தள்ளப்படுகிறான். அதை நீங்கள் படிக்க விரும்புகிறீர்களா? அது வெளிப்படுத்தல் 12:13-ல் காணப்படுகிறது. வெளிப்படுத்தல் 13:1-8-ல் அவன் ஒரு மனிதனுக்குள் குடிகொண்டு மிருகம் என்னும் பெயர் கொள்கிறான். 161. முதலில் அவன் நிக்கொலாய் போதகத்தை அளிக்கும் அந்திக் கிறிஸ்துவாக இருக்கிறான். அதன் பின்னர் அதினிலிருந்து, அவன் கள் ளத் தீர்க்கதரிசியாகிறான். 'அந்திக்கிறிஸ்து' என்பது கிறிஸ்துவுக்கு விரோதமாயுள்ளவன் என்று பொருள்படும். தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாயுள்ள எதுவும் தேவனுக்கே விரோதமாயிருக்கிறது. ஏனெனில் வார்த் தைதான் தேவன். ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி (கிறிஸ்துவாக ஆகி), நமக்குள்ளே வாசம் பண்ணினார்...'' தேவனுடைய வார்த்தைக்கு அவன் விரோதமாயிருப்பதால், அவன் அந்திக்கிறிஸ்துவென்று அழைக்கப்படுகிறான். ஆனால் ஒரு ஆவிக்கு கிரீடம் சூட்ட முடியாது. எனவே தொடக்கத்தில் அவன் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவனிடம் வில் மாத்திரம் இருந் தது. ஆனால் அம்புகள் இல்லை. 162. ஆகவே பிறகு அவனுக்குக் கிரீடம் சூட்டும் தருணம் வந்த போது அவன், அவனுடைய அந்திக்கிறிஸ்துவின் போதகத்தைப் போதிக்கும் கள்ளத்தீர்க்கதரிசியாகிறான். புரிகிறதா? பின்னர் அவன் பட்டயத்தைக் கையிலேந்தியவனாய், அரசாங்கத்தையும் சபையையும் ஒன்றுபடுத்துகிறான். இனிமேல் அவன் யாருடைய உத்தரவும் பெற அவசியமில்லை. அவனே அரசாங்கத்தின் தலைவன்; அவனே பரலோகத்தின் தலைவனும் கூட. அவன் மூன்று கிரீடங்களைப் பெற்று, பாவ விமோசன ஸ்தானம் (Purgatory) ஒன்று உண்டென்னும் கருத்தை நுழைத்து, மரித்தவர்கள் அந்த ஸ்தலத்தில் தங்கியிருக்கிறார்கள் என்றும், அதனின்று மரித்தவர் விடுபடவேண்டுமாயின் அவர்களுடைய சுற்றத்தார் அதற்கென்று காசைச் செலுத்தினால் பிரதிகுரு என்னும் ரீதியில் அவன் ஜெபம் செய்து அவர்களை விடுவிக்கும் அதிகாரம் பெற்றுள் ளான் என்றும் கூறினான். அவன் பிரதிகுரு என்று தன்னை அழைத்துக் கொண்டான். நிச்சயமாக, அவன் அவ்விதமாகவே இருக்கிறான். ''அவன் பூமியில் தேவனுடைய ஸ்தானத்தைக் கைப்பற்றிக் கொண்டான்.'' இது மிகவும் தெளிவாக இருக்கிறதல்லவா? 163. வேதத்தில் எப்பொழுதும் அவனுடைய எண்ணிக்கை நான்காக இருக்கிறது; மூன்றல்ல. அது நான்காகும். 164. இப்பொழுது, வெளிப்படுத்தல் 12க்குத் திருப்புவோம். அதைப் படிப்பதற்கு நமக்கு நேரம் இருப்பதால் நாம் சற்று படிக்கலாம். இப் பொழுது வெளிப்படுத்தல் 12-ம் அதிகாரம் 13-ம் வசனத்தைப் படிப்போம். "அந்த நேரத்தில் ஒரு பெரிய பூமியதிர்ச்சி....'' இல்லை, நான் தவறான பகுதியை எடுத்துள்ளேன், 13-வது......... வலுசர்ப்பமானது தான் பூமியில் தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப் பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது. 165. இப்பொழுது, பாருங்கள், அவன் பூமியில் தள்ளப்பட்டு, அந்திக் கிறிஸ்துவின் ஆவியாக ஒரு மனிதனுக்குள் வாசம் செய்கிறான். அந்த மனிதன் ஒன்றிலிருந்து வேறொன்றாக மாறுகிறான்- அந்திக் கிறிஸ்துவிலிருந்து கள்ளத் தீர்க்கதரிசியாக, பின்னர் மிருகம் அவனுக்குள் வருகி றது, 166. சபை நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின்மூலம் கிறிஸ்து குடிகொள்ளுதல் போன்றவைகளின் மூலம் வளர்ந்து கொண்டு வந்தவிதமாகவே சாத்தானின் சபையும் அந்திக் கிறிஸ்துவிலிருந்து கள்ளத் தீர்க்கதரியாக வளர்ந்து வர இருக்கின்ற மகா பெரிய உபத்திரவகாலத்தின், முடிவில் அந்த மிருகமாக எழும்புகிறான். இவன் இங்கு, இந்நாளில் நடப்பதற்கு முன்னடையாளமாக (antitype) பாருங்கள். சரியாகச் சொன்னால் அவன் அதற்கு நிழலாயிருக்கிறான். அவன் சரியாக அவ்வாறே இருக்கிறான். அது அவனே. வானத்திலிருந்து அவன் உதைத்து தள்ளப்படுகிறான். 167. இப்பொழுது வெளிப்படுத்தல்13:1-8 வசனங்களைப் பார்ப்போம். பின்பு நான் கடற்கரை மணலின் மேல் நின்றேன். அப் பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வரக் கண்டேன்; 168. இப்பொழுது 12-ம் அதிகாரத்தில் சாத்தான் வானத்திலிருந்து தள்ளப்படுகிறான். இப்பொழுது கவனியுங்கள். அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதின் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின் மேல் தூஷணமான நாமமும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது; அதின் கால்கள் .... 169. ஓ, நமக்கு மாத்திரம் சமயம் இருந்தால், இந்த இரவு முழுவதும், இவ்வடையாளங்களை விவரித்து, அவை சாத்தானைக் குறிக்கின்றன என்று காண்பிக்கலாம். உங்களில் அநேகர், அதை மற்ற பாடங்களி லிருந்து அறிந்துள்ளீர்கள். ) அதின் கால்கள் கரடியின் கால்களைப் போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன; வலுசர்ப் பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. (சகோ. பிரான்ஹாம் கொடுத்தது (gave) என்பதற்குப் பதிலாக, கொடுக்கிறது (give) என்று படிக்கிறார் - தமிழாக்கியோன்) | 170. ஊம்! சாத்தான் குடிகொள்ளுதல், பாருங்கள்? அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்க கண்டேன்; 171. நாம் தொடர்ந்து படிக்கையில், உங்களுக்குத் தருணம் இருந்தால் இதைத் தொடர்ந்து படியுங்கள். இல்லை. நாம் சிறிது படிப்போமாக. அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச் சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி... 172. கம்யூனிஸத்தைக் கவனிக்க வேண்டாம். இதைக் கவனியுங்கள், கம்யூனிஸம் என்பது சிந்தப்பட்ட இரத்தத்திற்கு என்றைக்காவது பழி வாங்குவதற்கென தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாக அமைந் துள்ளது. நாளை அதைக் குறித்து சிந்திப்போம். அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். 173. வலுசர்ப்பம் யார்? - சாத்தான். அது சரி. "அந்த வலுசர்ப்பம்'' சரி. மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரம் கொடுத்த (மிருகம் யாரிடமிருந்து அதிகாரம் பெறுகின்றதென்பதை கவனியுங்கள்.) அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; (சகோ. பிரான்ஹாம் தூஷிக்கும் வகையில் பெருமையானவைகளைப் பேசும் வாய்! (speaking great things of blasphemy) என்று படிக்கிறார் - தமிழாக்கியோன்) அல்லா மலும் நாற்பத்திரண்டு மாதம் யுத்தம் பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, (அதுதான், பாருங்கள். சரி) அவருடைய நாமத்தையும் (ஒரு பட்டப் பெயரைச் சூடிக் கொண்டு), அவருடைய வாசஸ்தலத்தையும் (அதா வது பரிசுத்த ஆவியானவர் தங்குமிடம்.) 174. அதை ரோமாபுரிக்கு - வாடிகன் பட்டிணத்திற்கு மாற்றினான். நீங்கள் அதைத் தொடர்ந்து படித்துக் கொண்டே போகலாம். பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. 175. அவர்கள் மத்தியஸ்த ஊழியம் செய்கின்றவர்கள் தூஷணம். என்று சொல்லி... மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி (அவன் அதைச் செய்தான்) அவர்களை ஜெயிக்கும்படிக்கு (அவன் அதைச் செய்தான்) அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டதுமல்லாமல், 176. பரிசுத்தவான்களை அவன் தொழு மரத்தில் கட்டி அவர்களை எரித்து, சிங்கங்களுக்கு இரையாகக் கொடுத்து, எல்லாவிதங்களிலும் அவர்களைக் கொன்று போட்டான். ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள் மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 177. அஞ்ஞான ரோமாபுரி போப்பாண்டவரின் ரோமாபுரியாகும்வரை இவ்விதம் உண்டாயிருக்கவில்லை. அதன் பின்பு கத்தோலிக்க ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவி அகில உலக கத்தோலிக்க சபை நிறுவப் பட்ட து. உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். 178. "என்னுடைய எண்ணெயையும், திராட்ச ரசத்தையும் சேதப்படுத் தாதே.'' பாருங்கள்! உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன். சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப் போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமை யும் விசுவாசமும் இதிலே விளங்கும். 179. இப்பொழுது அவன் பட்டயத்தைக் கையிலேந்தியவனாய், கொல்லப் புறப்பட்டான் என்று சென்ற இரவு நாம் பார்த்தோம். 180. ஆனால் அவன் பட்டயத்தினாலே மடிந்து போவான்-தேவனுடைய வார்த்தை என்னும் பட்டயம். இருபுறமும் கருக்குள்ள அந்த பட்டயம் அவனைக் கொன்றுபோடும் என்று நாம் அறிந்து கொண்டோம். ஏழு இடி முழக்கங்கள் அந்த சிறு குழுவுக்கு தங்கள் சத்தங்களை முழங்கும்வரைக் காத்திருங்கள். அப்பொழுது அவர்கள் தேவனுடைய வார்த்தையை வல்லமையாய் பிரயோகிக்க முடியும். அந்த வார்த்தை துண்டு துண்டாக வெட்டும். வானத்தை அடைக்கவும், அவர்கள் இதையோ அல்லது அதையோ நிறுத்தவும், அவர்கள் விரும்பினதைச் செய்யவும் அவர்களுக்கு அதிகாரமுண்டாகும். மகிமை! தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தை அவனைக் கொன்றுபோடும்-இருபுறமும் கருக்கான எந்த பட்டயத்திலும் அது கருக்கானதாயிருக்கிறது. விரும்பினால் அவர்கள் லட்சக்கணக்கான டன்கள் எடையுள்ள வண்டுகளை வர வழைக்க முடியும். ஆமென்! அவர்கள் என்ன சொன்னாலும் அது நிறை வேறும். ஏனெனில் அது தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தையாயிருக்கிறது. ஆம். ஆமென். தேவன் என்றும் வார்த்தையாய் இருக்கிறார். ஆனால் அவர் அது (வார்த்தை -தமிழாக்கியோன்) கிரியை செய்யதக்கதாக எப்பொழுதும் அவர் மனிதனை உபயோக்கின்றார். 181. வேண்டுமானால் எகிப்தில் அவரே வண்டுகளை வரவழைத்திருக்க முடியும். ஆனால் அவர் மோசேயிடம், ''மோசே, அது உன் பணியாகும். என்ன செய்யவேண்டுமென்பதை நான் உனக்குச் சொல்வேன். அதை நீ செய்வாயாக'' என்றார். அவ்வாறே அவன் அதைச் செய்து நிறைவேற் றினான். பாருங்கள்? வண்டுகளை வரவழைக்க அவர் சூரியனை தெரிந்து கொண்டிருக்கலாம். அல்லது சந்திரனையோ அல்லது காற்றையோ உபயோகித்திருக்கலாம். ஆனால் அவர் - அவர் ''மோசே'' என்றார். அது, அது... ஆனால் அவர் அதற்கென்று தம்முடைய ஒரு மனிதனைத் தெரிந்துகொண்டார். சரி. 182. இந்த 'சாத்தான் வானத்திலிருந்து தள்ளப்பட்ட பின்பு அவன் ஒரு மனிதனுக்குள் குடிகொள்கிறான். அவன் இப்பொழுது. மிருகமாக இருக்கிறான்.- அந்திக்கிறிஸ்து, கள்ளத்தீர்க்கதரிசி, இப்பொழுது மிருகம். மரணம் என்னும் பெயர் அவனுக்குச் சூட்டப்படுகின்றது; பாதாளம் அவனைப் பின் தொடருகின்றது.-சாத்தான் அவன் சிங்காசனத்தில் முற்றிலுமாக வீற்றிருத்தல். ஓ, என்னே! அவன் இவ்வுலகில் சாத்தானின் பிரதிநிதியாக இருந்து வந்து, மத்தேயு 4-ம் அதிகாரத்தில் கர்த்தராகிய இயேசுவுக்கு அவன் அளிப்பதாகச் சொன்ன அந்த உலகத்தின் ராஜ்யங்களின் மேல் ராஜ்யபாரம் செய்கிறான். சாத்தான் இப்பொழுது முழு ராஜாவாகிறான். 183. 'அது சற்று பின்பு நடைபெறுகிறது. இப்பொழுது அவன் கள்ளத் தீர்க்கதரிசியாக மட்டுமே இருக்கிறான். யூதர்களுடன் அவன் செய்த உடன்படிக்கையை முறித்த பிறகு, அவன் மிருகமாக ஆகிறான். அது எப்படி நாம் அறிந்து.... சரி இப்பொழுது கவனியுங்கள். அந்த சமயத்தில் அவன் குடிகொள்ளும் மனிதனுக்கு மிருகத்தின் இருதயம் அளிக்கப்படுகின்றது. சபை எடுக்கப்பட்ட பின்னரே சாத்தான் தள்ளப்படுகிறான் என்பதை கவனிக்கவும். பாருங்கள்? பாருங்கள். ஆகவே அப்பொழுதுதான் அவன் மிருகம் என்று அழைக்கப்படுவான். அப்பொழுது அவனுடைய குற்றசாட்டுதல்கள் யாவையும் முடித்துவிட்டான். பாருங்கள்? இப்பொழுது இருக்குவரை..... 184. கவனியுங்கள். நமது மத்தியஸ்தர் பரிந்து பேசிக்கொண்டிருக் கும்வரை சாத்தானால் நம் பேரில் குற்றஞ்சாட்ட முடியும். ஏனெனில் அவன் எதிர் தரப்பிலிருக்கும் வழக்கறிஞன். அவன் கிறிஸ்துவின் விரோதி. கிறிஸ்து... அவன் கிறிஸ்துவின் எதிர்தரப்பிலிருந்து கொண்டு, சற்று பொறுங்கள், "ஆதாம் பாவத்தில் விழுந்தான். ஆதாம் இவையெல் லாம் செய்தான். நான் அவனை மேற்கொண்டேன். அவன் மனைவி ஏவாள் ஒரு பொய்யை நம்பும்படி செய்தேன். அவள் அதன் விளைவால் உம்மால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டாள்'' என்றெல்லாம் கூறி அவன் வாதிப்பான். 185. ஆனால் நமது மத்தியஸ்தர் (ஆமென்!) - மீட்பின் இனத்தான் (ஆமென்!) - அங்கு தாம் சிந்தின இரத்தத்துடன் நின்று கொண்டிருக்கிறார். அந்த இரத்தம் கொடூரமான பாவியின் இருதயத்தையும் மாற்ற வல்லது. மத்தியஸ்தர் இப்பொழுதும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். ஆம், ஐயா! சாத்தான், 'அவர்கள் குற்றஞ் செய்தவர்கள்' என்பான். இயேசு 'இல்லை' என்று வாதிப்பார் 186. 'கறையைப் போக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட க்ளோராக்ஸ் என்னும் வெண்மையாக்கும் திரவம் எழுதும் மையின் நிறத்தை அல்லது வேறெந்த கறையையும் அகற்றிவிடும். அது மறைந்து போவதால், அது எங்கிருந்தது என்பதை யாரும் அறியவும் முடியாது. அது மறுபடியும் வாயுவாக மாறி, காஸ்மிக் ஒளியாகின்றது. அதன்பின் மேலும் பிரிக்க முடியாத அணு - மூலக்கூறுகள் (molecules) மற்றுமாகி, எங்கிருந்து வந்ததோ அந்த மூலத்தன்மையாகின்றது. அது ஒரு சிருஷ்டிப்பாகும். ஒரு சிருஷ்டிப்பு என்றால், சிருஷ்டிகரிடத்திலிருந்துதான் வந்தாக வேண்டும். கண்டுபிடிக்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்ட இராசயனம் யாவும் மறுபடியும் அது மூலப் பொருட்களாக சிதைக்கப்பட்டு மறைந்துவிடு கிறது. அது ஒன்றுமில்லாததாகி விடுகின்றது. தண்ணீரும்கூட பொடி வடிவிலுள்ள க்ளோராக்ஸ் என்பதுடன் சேர்ந்துவிடுகிறது. 187. ஆமென்! தேவனுக்கு மகிமை! கறை மறைந்து அது சுத்தமாகி விடுகிறது. இயேசுகிறிஸ்துவின் இரத்தமும் அதையே செய்கிறது. உண்மையான தேவனுடைய பிள்ளை தன் பாவத்தை அறிக்கையிட்டு, அவருடைய கிருபையினாலும், நன்மையினாலும் நீதிமானாக்கப்படுகிறான். அப்பொழுது தேவன், அவனுடைய பாவம் என்னவென்பதும் கூட எனக்கு நினைவில்லை. அவன் முற்றிலுமாய் என் குமாரன்' என்று சொல்லுவார். 188. "இந்த மலையைப் பார்த்து: இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்லி உன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அது அப்புறம் போம்'' என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.'' நீ எது நடைபெற வேண்டுமென்று கூறினாயோ, நீ அதை உடையவனாயிருப்பாய். ஏனெனில் நீங்கள் மீட்கப்பட்ட புத்திரர். ஆமென்! அது உண்மையென்று என் அனுபவத்திலிருந்து நானறிவேன். 189. 'ஏனெனில் ஆறு வெவ்வேறு தருணங்களில் அது ஒவ்வொன்றும் எந்த இடத்தில் இருக்கும் என்று அறியாத தருணத்தில் அணில்கள் தோன்றும்படி தேவன் செய்திருக்கிறார். மோசேயின் காலத்தில் வண்டுகளையும் தவளைகளையும் எதை வேண்டுமானாலும், சிருஷ்டித்த கர்த்தருக்கு அணில்களையும் சிருஷ்டிக்க முடியும். அவர், தேவன் சிருஷ்டிகர் உண்மை ! அழிந்து போகும் மனிதன்... 190. ஒரு மனிதனின் பாவம் அறிக்கை செய்யப்பட்டு அது இயேசு வின் இரத்தமென்னும் வெண்மையாக்கும் திரவத்தில் விழும்போது, பாவமனைத்தும் அகன்றுவிடுகிறது. அவன் பாவமில்லாதவனாக-குற்ற மற்றவனாகக் கருதப்படுவான். "தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்.'' ஏனெனில் அவன் பாவஞ் செய்யமுடியாது. இயேசுவின் இரத்தம் என்னும் வெண்மையாக்கும் திரவம் அவனுக்கும் தேவனுக்கும் இடையே நிற்கின்றது. அது பாவத்தை உடைத்தெறிந்து அதன் ஆதிகாரணமான சாத்தானிடம் அனுப்பும்போது, பாவம் எங்ஙனம் தேவனுடைய சன்னதியை அடையமுடியும்? ஆமென்! 191. வ்யூ! நான் பக்தியுணர்ச்சி அடைகிறேன். இவை இப்பொழுது வெளிப்பட துவங்குவதால், எனக்குள் உற்சாகம் எழுகின்றது என்றே நான் கூறுகிறேன். 192. கவனியுங்கள். சாத்தான் முற்றிலுமாக தன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான். ஆம், ஐயா. உலகத்தின் இராஜ்யங்களை ஆண்டவராகிய இயேசுவுக்கு அளிக்க முற்பட்டான். இப்பொழுது மிருகத்தின் இருதயம் கொண்டவனாய் அவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான். பிசாசு குடிகொண்டிருக்கும் மிருகமாகிய அந்த மனிதன் உண்மையான தேவனுடைய வார்த்தையுடன் தொடர்பு கொண்டுள்ள ஒருவனைப் போன்று பாசாங்கு செய்கிறான். ஓ! 193. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அவனுக்கு முன்னடை யாளமாயிருந்த யூதாஸும் அதையே செய்தான். அவன் என்ன செய்தான்? அவன் ஆதிமுதற்கொண்டு பிசாசாக இருந்தபோதிலும், அவன் விசுவாசி போன்று காணப்பட்டான். ''அவன் கேட்டின் மகனாகப் பிறந்தான்.'' இயேசு வார்த்தையாயிருந்தபடியால், அவன் யாரென் பதை ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். அதனால் அவன் அவர்மேல் ஒன்றும் சுமத்த முடியவில்லை. ஆமென். சரி. ஆகவே யூதாஸ் பொக்கிஷதாரியாயிருந்து பண ஆசையினால் விழுந்துபோனான் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள். 194. இன்றைய சபையும் அவ்வாறே பண ஆசையின் காரணமாகவே விழுந்து போயிருக்கிறது. கத்தோலிக்க சபையானது மரித்துப் போனவரின் ஆத்து மாக்களுக்காகவும் மற்றவற்றிற்காகவும் ஜெபம் ஏறெடுப்பதற்கென சபையாரிடம் காசு வசூலிக்கின்றதைக் குறித்து நாம் கடந்த இரவு சிந்தித்தோம். கத்தோலிக்க சபையின் குமாரத்திகளான பிராடெஸ்டெண்டுகளும் இன்று பணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். எல்லாமே பணத்தையொட்டி அமைந்துள்ளது. யூதாஸ் பணத்தின் காரணமாக விழுந்தான். அவன் விழுந்ததும் பிராடெஸ்டெண்டுகளும் அங்கு தான் விழுங்கின்றனர். 195. கவனியுங்கள். மங்கிய குதிரையின் மேல் ஏறிக்கொண்டு இவன் தன் கடைசி சவாரியைச் செய்கிறான். அவன் தன்னுடைய கடைசி சவாரியில் இருக்கிறான் - இப்பொழுது, இது நமது நாட்களில் நிறைவேறாது. அது பின்பு சம்பவிக்கும். இது நிகழும்போது சபையானது எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், பாருங்கள்? இப்பொழுது அந்த முத்திரையின் இரகசியம் நமக்கு முன்னறிவிக்கப்படுகின்றது. கிறிஸ்துவானவர் பூமியில் தோன்றும்போது... இந்த மனிதன் தோன்றி முழுவதும், முழுவதுமாக பிசாசாகிறான். இவன் அந்திக் கிறிஸ்துவாக முதலில் தோன்றி, பின்னர் கள்ளத் தீர்க்கதரிசியாக மாறி, முடிவில் மிருகமாகபிசாசாகவே ஆகிறான். எல்லா வண்ணங்களும் சேருவதனால் உண்டாகும் மங்கின நிறம் கொண்ட குதிரையின் மேல் அவன் சவாரி செய்து, மரணம் என்று அழைக்கப்படுகிறான். 196. ஆனால் நமது கர்த்தர் இங்கே பூமியில் வெண்மை நிறமுள்ள குதிரையின்மேல் தோன்றுவார். அவர் முற்றிலும், தேவனுடைய வார்த்தை ஒரு மனிதனுக்குள் குடிகொண்டிருக்கும் இம்மானுவேலாக இருப்பார். பாருங்கள்? அவர்களுக்குள் அவ்வளவு வித்தியாசம் உண்டு. அதுதான் அவர்களுடைய அந்த வித்தியாசம் ஆகும். 197. கவனியுங்கள். அந்திக்கிறிஸ்துவோ எல்லா நிறங்களும் சேருவதனால் உண்டாகும் மங்கின நிறமுள்ள குதிரையின்மேல் காணப்படுகின்றான். குதிரையென்பது ஒரு மிருகம். மிருகம் வல்லமைக்கு எடுத்துக் காட்டாயிருக்கிறது. ஏன்? அவன் எல்லா வல்லமையும் ஒருங்கே கொண்டவனாயிருக்கிறான் -அரசியல் வல்லமை, மதசம்பந்தமான வல்லமை, பிசாசின் வல்லமை, எல்லா வல்லமையும் ஒருங்கே கொண்டதன் அறிகுறியாக அவன் மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறான். 198. ஆனால் இயேசு சவாரி செய்துகொண்டு வருவது ஒரே நிறமுள்ள குதிரையாகும் - வார்த்தை . ஆமென்! 199. ஆனால் அந்திக்கிறிஸ்து சவாரி செய்வது, மூன்று நிறங்கள் ஒருங்கே கொண்ட ஒரு குதிரை. வெள்ளைக் குதிரை, சிவப்புக் குதிரை, கறுப்பு குதிரை இவை சித்தரிக்கும் வல்லமைகளை அவன் ஒருங்கே கொண்டிருக்கின்றான் - ஒன்றில் மூன்று கிரீடங்கள். பாருங்கள்? நிச்சயமாக. 200. ஓ, இந்த கிரீடத்தை நான் நேரில் மிக அருகில் கண்டேன். அது ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்தது. அதனால் அதனை நான் என் கையில் எடுக்கமுடியவில்லை. ஆகவே, அது உண்மையென்பது எனக்குத் தெரியும். ஊம். மூன்று கிரீடங்கள், அவன் பரலோகத்துக்கும், பாவ விமோசன ஸ்தலத்துக்கும், பூமிக்கும் பிரதிகுருவாக இருக்கிறான் என்பதற்கு அறிகுறியாயிருக்கின்றன. 201. மூன்று வல்லமைகளும் ஒன்றாக இணைந்து மங்கின நிறத்தில் கலந்துள்ளன! அவன் மூன்று வல்லமைகளும் - அரசியல் வல்லமை,மத சம்பந்தமான வல்லமை, பிசாசின் வல்லமை இவைகளை ஒருங்கே கொண்டிருப்பதால், அவை மரணத்தை விளைவிக்கின்றன. அரசியல், அரசியலில் அவன் ராஜாவாக இருக்கிறான். சாத்தான் மிகவும் சாமர்த் தியமுள்ளவன். வ்யூ! நிச்சயமாக. அவனைத் தோற்கடிக்க முயலவேண்டாம். கர்த்தர் பேரில் மாத்திரம் நம்பிக்கை வைத்திருங்கள். அவ்வளவுதான். 202. நான் உங்களுக்கு முன்பு பலமுறை கூறியதுபோன்று, சாமர்த்தியம், கல்வியறிவு அனைத்தும் தவறான தரப்பிலிருந்து வருகின்றது. இது உண்மையென்று வேதத்தின் வாயிலாக நாமறியலாம். காயீனின் சந்ததி என்னவாயினர் என்று வேதத்தில் பாருங்கள்; பின்பு சேத்தின் சந்ததியார் என்னவாயிருந்தனர் என்றும் பாருங்கள். நான் அறியா மையை (Ignorance) ஆதரிக்கிறேன் என்று நீங்கள் எண்ண வேண் டாம். இல்லவே இல்லை. இல்லை, ஐயா. நீங்கள் வேதத்தில் காணப்படும் எந்த நபரையாவது எடுத்துக்கொள்ளுங்கள்... 203. ஆகவே பவுல் என்னும் கல்வியறிவு படைத்த ஒருவனைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அவன் கிறிஸ்துவை அறிவதற்கென, அவன் பெற்றிருந்த கல்வியறிவு அனைத்தையும் மறக்க வேண்டியதாயிருந்தது. அவன், "நான் உங்களிடம் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனத்துடன் வராமல், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையுடன் வந்திருக்கிறேன்'' என்றான். அது உண்மையாகும்- பரிசுத்த ஆவியின் வல்லமை. 204. மற்றவர்களையும் கவனித்துப் பாருங்கள். தேவன் உபயோகித் தவர்களில் சிலர் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத அளவுக்கு படிப்பறியாதவர்களாயிருந்தனர். காலங்களைத் துழாவிப் பார்த்து, தெரிந்துகொள்ளப்பட்ட தீர்க்கதரிசிகள் எப்படிப்பட்டவரா யிருந்தனர் என்று அறிந்துகொள்ளுங்கள். நான் சொல்வது உங்களுக்குப் புரிகின்றதா? 205. சாமர்த்தியமும், கல்வியறிவின் மூலம் கிடைக்கும் ஞானமும், ஒருவன் தேவனை விட்டு அகலும்படி செய்கின்றன. பாருங்கள்? 206. அவன் மூன்று வல்லமைகளைக் கொண்டிருக்கின்றான் அல்லது அவன் மூன்றின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறான்-பூமி, பரலோகம், பாவ விமோசன ஸ்தலம். 207. அவனே ஒரு திரித்துவமாயிருக்கிறான். அவன் திரித்துவத்தின் மேல் சவாரி செய்கிறான். அவன் வல்லமை திரித்துவமாயிருக்கிறது. அவனுடைய கிரீடம் ஒரு திரித்துவம். அவனுடைய குதிரை ஒரு திரித்துவம், ஆம், அவனே ஒரு திரித்துவம், அவன் வல்லமை ஒரு திரித்துவம். அவன் கிரீடம் ஒரு திரித்துவம், அவன் சவாரி செய்யும் குதிரை ஒரு திரித்துவம் - அவனுடைய அலுவல்கள் (office) நான்கு என்னும் எண்ணிக்கை என்பதை இங்கு நாம் பார்க்கலாம். பாருங்கள்? மறுபடியும் நான்கு . சரி. 208. அவனுடைய ஊழியம் மூன்று கட்டங்களில் அமைந்துள்ளது அந்திக் கிறிஸ்து, கள்ளத் தீர்க்கதரிசி, மிருகம், ஆனால் அவன் ஒரு நபர் ஆகும். பாருங்கள்? அவை மூன்றும் நிழல்களாக உள்ளன. அவைகள் ஒரு மனிதனே. 209. தேவனும் தண்ணீர், இரத்தம், ஆவி என்னும் மூன்றில் தம்மை வெளிப்படுத்துகிறார். இவை மூன்றும் ஒரு கிறிஸ்தவனை தேவனுடைய வார்த்தையால் தேவபுத்திரனாக ஆக்குகிறது. பாருங்கள்? இந்த மூன்று வல்லமைகளும் அவனைப் பிசாசாக ஆக்குகின்றன. பாருங்கள்? தண்ணீர், இரத்தம், ஆவி இவை மூன்றும் தேவனால் உண்டாயிருக்கின்றன. அவை ஒருவனைத் தேவபுத்திரனாகும்படி செய்கிறது. ஆனால் அரசியல், மதம், அசுத்த ஆவியின் வல்லமை இம்மூன்றும் ஒருங்கிணைந்து அவனை அந்தப் பிசாசாகும்படிச் செய்கின்றது. 210. கிறிஸ்துவின் முதல் வருகை இரத்தம் சிந்தி மரிப்பதற்கென மனி தனாகத் தோன்றினார். கிறிஸ்து மூன்று முறை வருகிறார். அவர் மூன்று என்னும் எண்ணிக்கையில் பரிபூரணப்படுகிறார். பாருங்கள்? ஆனால் சாத்தானின் எண்ணிக்கை நான்காகும். அவன் வருவதைக் கவனியுங்கள் - அது நான்கு. கிறிஸ்துவை கவனியுங்கள். முதலாவதாக, கிறிஸ்து இரத்தம் சிந்தி மரிப்பதற்கென மனிதனாகத் தோன்றினார். அது சரியா? அது அவருடைய முதலாம் வருகை. எடுத்துக் கொள்ளுதலின்போது அவர் இரண்டாம் முறை வருகிறார். அப்பொழுது நாம் மறுரூபமாகி அவரை ஆகாயத்தில் சந்திப்போம். அவர் மூன்றாவது முறை வருகையில், அவர் தேவ அவதாரமாக இருக்கிறார். (He is the incarnate God) ஆமென்! (சகோதரன் பிரான்ஹாம் தன் கரங்களை ஒருமுறை கொட்டுகிறார் -ஆசி) தேவன், இம்மானுவேல் பூமியை ஆளுவதற்கென வருகிறார். அது உண்மை . அவர் மூன்று முறை மட்டுமே வருகிறார். 211. கவனியுங்கள், சாத்தான் நான்காம் கட்டத்தில் மரணம் என்று அழைக்கப்படுகிறான். தேவனிடமிருந்து நித்திய பிரிவினையை உண்டாக்குவதே மரணமாகும். அதுவே 'மரணம்' என்பதின் அர்த்தம். தேவனிடத்திலிருந்து நித்தியமாக பிரிக்கப்பட்டிருப்பது. 212. இப்பொழுது இவன் யாரென்பதை நாம் வேதத்திலிருந்து பார்த் தோம். அவன் மலைகளின் மேல் இருக்கிறானென்றும், இன்னும் அவனைக் குறித்த வேறு அநேக விவரங்களையும் நாம் ஆராய்ந்தோம். இப் பொழுது கழுகானது அவனை "மரணமென்று அழைக்கிறது. அவர் அவனை அவ்விதமே அழைக்கிறார். 'மரணம்' என்பது நித்திய பிரிவினையைக் குறிக்கின்றது என்று ஞாபகங்கொள்ளுங்கள். பாருங்கள். 213. பரிசுத்தவான்கள் மரிப்பதில்லை என்று நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் நித்திரையடைந்திருக்கின்றனர். அவர்கள் மரிப்பதில்லை. ''என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு”. அது மிகவும் உண்மையாகும். 'அவன் நியாயத்தீர்ப்புகுட்படாமல் மரணத்தினின்று நீங்கி ஜீவனுக்குள் பிரவேசிக்கிறான். "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்'' என்றார் இயேசு. “என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப் பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" லாசரு மரித்துப் போனானா? “அவன் நித்திரையடைந்திருக்கிறான்''. 214. ''பயப்படவேண்டாம். இந்தச் சிறுபெண் மரிக்கவில்லை. நித்திரை யாயிருக்கிறாள். அதற்காக அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். நான் கூறுவது சரிதானா? ஓ, என்னே! பாருங்கள். பரிசுத்தவான்கள் மரிப்பதில்லை. 215. தேவனிடமிருந்து பிரிக்கப்படுதலே மரணம் எனப்படும் - நித்திய பிரிவினை. இவன் 'மரணம்' என்னும் பெயரைக் கொண்டிருக்கிறான். எனவே, அவனிலிருந்து விலகியிருங்கள். அவன் யார்? - ஒரு ஸ்தாபன முறைமை. அதுதான் ஸ்தாபனமாக்கப்பட்ட முதலாம் சபை. நிசாயா மகா நாட்டில் அவன் கான்ஸ்டன்டைன் சக்கரவர்த்தியின் ஆலோசனை கேட்டு... 216. ஏவாள் தன் கணவனை அறியும் முன்பு எவ்வாறு தேவனுடைய வார்த்தையில் அவிசுவாசங்கொண்டு ஏதேனில் விழுந்து போனாள் என்று கடந்த இரவு நாம் பார்த்தோம். அவ்வாறே பெந்தெகொஸ்தே நாளன்று உருவான ஆவிக்குரிய மணவாட்டியும், கிறிஸ்து அவளை அடையும் முன்பு ரோமாபுரியில் விழுந்து போனாள். அவள் என்ன செய்தாள்? வார்த்தைக்குப் பதிலாக ஸ்தாபன கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு தன் கற்பைப் பறிகொடுத்தாள். ஆமென்! ஓ, என்னே! 217. நான் - நான் - நான்... அதை நினைக்கும்போதே எனக்கு மறுபடி யும் ஊக்க உணர்ச்சி தோன்றுகிறது. ஆம், ஐயா. பைத்தியக்காரனைப் போல் நடிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை. ஆனால் சற்று அது எனக்கு என்ன செய்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. நான் அந்த அறையில் நான்கு நாட்களாக அமர்ந்திருக்கிறேன். சற்று... நான் மனித உணர்வடைய சில காரியங்களை கூற வேண்டியதா யிருக்கிறது. நான் என்ன கருதுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். ஆம், சரி. இவைகளைக் கூறும்போது எனக்கு அநேக தரிசனங்கள் கிடைக்கின்றன. அது உண்மை . பாருங்கள்? நான் என் சுய நிலைக்கு வருவதற்கெனவும் மறுபடியும் மாற்றி அமைத்துக் கொள்ளவும் (shake) சில காரியங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. 218. நான் ஜனங்களின் சிந்தனைகளைப் பகுத்தறிந்து கூறும்போது, எப்பொழுதுதாவது என்னை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அப்பொழுது நான் ஜனங்களைச் சிரிக்க வைக்கவேண்டு மென்று சிலவற்றைக் கூறுவேன். அவர்களை அழவைக்கும் சில காரியங்களையும் நான் கூறுவது வழக்கம். அவர்களைக் கோபமூட்டுவதற்கென்று சிலவற்றைச் சொல்வேன். அந்த வெளிச்சத்தை நான் கண்ட மாத்திரத்தில் அந்த மனிதன் அதை எவ்விதம் ஏற்றுக்கொள்ளுகிறான் என்பதைக்காண நான் ஏதாவது ஒன்றைக் கூறுவேன். அப்பொழுது நான் அது எவ்வகையான வெளிச்சம் என்றும், என்ன சம்பவிக்கின்றது என்றும் நான் காண்பேன். அது யார் மேல் தங்குகின்றதென்றும், அது அழைக்கின்றதா அல்லது இல்லையா என்பதையும் அறிந்து கொள்ளுவேன். இல்லையெனில்.... அது உண்மையான விசுவாசியின் மேல் தங்கும்போது, சரி. அப்பொழுது நான், 'இன்னின்னாராகிய நீர்' என்று அது (அந்த வெளிச்சம்) தங்கி யிருக்கும் மனிதரின் பெயரைக் கூறுவேன். 219. அதன் பின்னர் ஆவியானவர் என்னை அபிஷேகம் செய்யும்போது, எல்லா இடங்களிலும், அந்த அறையைச் சுற்றிச் சுற்றி வெளிச்சம் விட்டுவிட்டு பிரகாசிப்பதை நான் காண்பேன். ஆகவேதான் நான் ஒன்றைக் கூறிக்கொண்டேயிருந்துவிட்டு, மறுபடியும் அதையே தொடக்கத்திலிருந்து கூறத்தொடங்குவேன். பாருங்கள். 220. கடந்த ஞாயிறு முதற்கொண்டு, நான் அறையில் உட்கார்ந்து, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தினால் நிறையப்பட்டு இவ்வெளிப்பாட்டுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். எனவே நான் கூறுவது முற்றிலும் உண்மை என்பது எனக்குத் தெரியும். நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்களா? அவரை விசுவாசிக்கிறீர்கள் என்று நானறிவேன். இந்த வாரத்தின் கடைசியில் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்கள். ஊம். பாருங்கள்? பாருங்கள்? சரி. பாருங்கள்? 221. "மரணம்'' என்பதற்கு, “தேவனிடத்திலிருந்து நித்திய காலமாக ஏற்படும் பிரிவினை'' என்று பொருள்படும். இப்பொழுது பரிசுத்தவான்கள் மரிப்பதில்லை என்பது நினைவிருக்கட்டும். 222. அவனுடைய மணவாட்டிக்கு ஒரு மங்கின நிறமுள்ள குதிரை கொடுக்கப்பட்டது. நான் கருதுவது, குதிரை சவாரி செய்பவனுக்கு ஒரு மங்கின நிறமுள்ள குதிரை அவன் சவாரி செய்வதற்கென அளிக்கப்பட்டது. அவன் சவாரி செய்யும்படியாய் அவனுக்கு இந்த மங்கின நிறமுள்ள குதிரை கொடுக்கப்பட்டது. அது என்ன என்று நாம் இப் பொழுது அறிவோம். அது எந்த சபை என்றும் நாம் அறிவோம். அவன் மரணமென்னும் மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறான். 223. அவள் ஒரு ''வேசி'' மாத்திரமல்ல. அவள் "வேசிகளின் தாய்'' என்பதை நாம் சென்ற இரவு பார்த்தோம் 224. அவளை வேசியாக்கினது எது என்று நாம் கண்டுபிடித்தோம். அவ்விதமான ஸ்திரீயானவளே வேசி என்று அழைக்கப்படுகிறாள். நான் சற்று. ஆண்களும் பெண்களும் ஒருங்கே கூடியிருக்கும்போது, 'வேசி' (whore) என்று கூறுவது சரியல்ல. ஆயினும் வேதம் அவளை அவ்வாறு அழைக்கிறது. நீங்கள் பாருங்கள்? ஒருத்தி அவள் செய்த விவாக பொருத்தனைக்கு உண்மையாக வாழாவிடில் அவள் வேசி எனப் படுவாள். இவள் தன்னை 'பரலோகத்தின் ராணி'' என்று கூறுகின்றாள் என்பதையும் நீங்கள் கவனியுங்கள். ஆனால் உண்மையில் தேவனுடைய மணவாட்டியே பரலோகத்தின் ராணி. கிறிஸ்து தேவனாயிருக்கிறார். இந்தப் பட்டப் பெயரைச் சூடிக்கொண்டிருப்பவள் வேசித்தனம் செய்து, பூமியின் ராஜாக்கள் அவளுடன் வேசித்தனம் செய்வதற்குக் காரணமாயிருக்கிறாள். ஐசுவரியவான்களும், பிரபலம் வாய்ந்தவர்களும், ஏன் முழு உலகமே, அவள் பின்னால் செல்கின்றது. பாருங்கள்? 225. அவள் சில குமாரத்திகளை உண்டு பண்ணினாள். அவர்களும் வேசிகள். வேசி என்பவள் ஒரு விலை மகள். அவள் விபச்சாரம், வேசித்தனம் போன்ற செயல்களில் ஈடுபடுபவள். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஸ்தாபனங்களை அமைத்துக்கொண்டு பெந்தெகொஸ்தேயினர் உள்பட மனிதனால் ஏற்படுத்தப்பட்ட முறைமைகளைப் போதித்தனர். 226. இப்பொழுது பெந்தெகொஸ்தேயினரே, உங்கள் மனசாட்சியை போக்கிக்கொள்ளாதீர்! நான் நேர்முகமாக இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். சண்டையிட்டுக் கொள்வதற்கு இது நேரமில்லை. ஏற் கனவே காலதாமதமாகி விட்டது. நான் கூறுவதைக் கேளுங்கள். 227. நாம் லவோதிக்கேயா சபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லா சபையின் காலங்களைக் காட்டிலும் இது மிகவும் நிந்திக்கப்படத்தக்க சபையாக அமைந்துள்ளது. இது வெதுவெதுப்பான ஒரு சபை. அன்றியும் கிறிஸ்து வெளியே காணப்பட்டு, உள்ளே நுழைய முயலும் சபையின் காலமும் இதுவே. இப்பொழுது சென்று கொண்டி ருக்கும் பெந்தெகொஸ்தே செய்தி அவரை அவ்வாறு செய்துள்ளது. ''நாங்கள் ஐசுவரிவான்கள்' என்று நீங்கள் கூறிக்கொள்கிறீர்கள். மனுஷரே நீங்கள் ஆரம்பத்தில் தரித்திரராய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உண்மையாகவே ஐசுவரியத்தைச் சேர்த்துக் கொண்டீர்கள். பாருங்கள். ''உங்களுக்கு ஒரு குறைவுமில்லையென்று நீங்கள் சொல் கின்றீர்கள். ஓ! நீங்கள் எவ்விதம் இருந்தீர்கள்? 228. ஆனால் கிறிஸ்து உங்களைப் பார்த்து, "நீ நிர்வாணியும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்பாக்கியமுள்ளவனுமாயும் இருக்கிறாய்'' என்கிறார். 229. இப்பொழுது ஒருவன் தெருவில் நிர்வாணியாய்க் கிடந்தால், அவன் நிர்வாணத்தை மறைக்க முயலுவான்! ஆனால் அவன் நிர்வாணி என்பதை உணராமலிருந்தால், அவன் ஒரு பயங்கர நிலைமையில் இருக்கிறான். தேவன் அப்படிப்பட்டவனிடம் இரக்கம் பாராட்டுவாராக! சரி. கவனியுங்கள்! ஓ, என்னே! 230. இப்பொழுது, இந்த மனிதனாகிய அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டியாகிய கள்ள சபை மனந்திரும்ப வேண்டுமென்று தியத்தீரா சபையின் காலத்தில் அவளுக்குத் தவணை கொடுக்கப்பட்டது. ஆனால் அவளோ மனந்திரும்பவில்லை. உங்களுக்கு அது ஞாபகம் இருக்கிறதா? உங்களால்... 231. நல்லது, நாம் சற்று வெளிப்படுத்தினவிசேஷம் இரண்டாம் அதி காரத்தில் தியத்தீரா சபையைப் பற்றி கூறப்பட்டுள்ள பாகத்தை வாசிப்போம். ஒரு சில நிமிடங்கள் இதில் செலவிடுவதனால் பாதகமில்லை. நாம் ஆராதனையை முடிக்க வேண்டிய நேரமாகிவிட்டது. நாம் இப்பொழுது சற்று துரிதமாக இதை கவனிப்போம். இனியும் நாம் தியானிக்க வேண்டிய பொருளைக் குறித்து பிரசங்கிக்கத் தொடங்கவேயில்லை. தியத்தீரா - வெளிப்படுத்தல் 2:18-23. தியத்தீரா சபையின் தூதனுக்கு (அவன்தான் அந்த செய்தியாளன்) நீ எழுத வேண்டியது என்னவெனில்: அக்கினி ஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவ குமாரன் சொல்லுகிறதாவது: உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும் உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்ன வெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள். 232. அதுவேதான். நீங்கள் அவளை வேதத்தின் மூலம் அறிவீர்கள். அவள் ஆகாபின் மனைவியாவாள். ஆனால் இந்த ஸ்திரீ - சபை - யேசபேல், கள்ளத்தீர்க்கதரிசியாகிய போப்பின் மனைவி; சரி உண்மையான தீர்க்கதரிசியும், தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசி என்று கருதப் படுகிற -தமிழாக்கியோன்) அவனுடைய மனைவியாகிய யேசபேலும் (சபை - தமிழாக்கியோன்). இப்பொழுது, அந்த கள்ளத் தீர்க்கதரிசி உண் மையான தீர்க்கதரிசியாகக் கருதப்படுகிறான். ஆகாப் யூத குலத்தில் பிறந்த ஒருவன். ஒரு உண்மையான யூதனாக அவன் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவன் ஒரு அயோக்கியன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் அவன் தன் மனைவியின் விருப்பத்திற்கிணங்கி எல்லாவற்றையும் செய்தான். யேசபேல் அவன் பணத்தை அபகரித்து, அவள் விருப்பப்படி அவனை இங்குமங்கும் வழி நடத்தினாள். (யேசபேல் தன்னை தீர்க்கதரிசியென்று சொல்லிக் கொள்கிறாள் என்பதைக் கவனித்தீர்களா?) என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து (யேசபேலின் போதகம் நாடு முழுவதும் பரம்பினது) அவர்களை வஞ்சிக்கும்படி (இங்கே சகோ. பிரான்ஹாம் Seduce என்ற ஆங்கில வார்த்தைக்குப் பதிலாக Subdue என்று கூறுகிறார். Subdue என்பதற்கு தோற்கடி அல்லது ஜெயங்கொள் என்று அர்த்தமாகும். ஆகவே இதை... அவர்களை ஜெயங்கொள்ளும்படி... என்று வாசிக்க வேண்டும் - தமிழாக்கியோன்) நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத்தேன்: (பாருங்கள்?) தன் வேசி மார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. 233. அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்: இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி (அதாவது நரகத்தில் தள்ளி) அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளை விட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி (அதாவது உபத்திரவ காலத்திற்குள் அவர்கள் செல்வார்கள்; சபையல்ல). 234. இப்பொழுது இங்கே கவனியுங்கள்: அவளுடைய பிள்ளைகளையும் (வேசிகளை) மரணத்தினால் கொல்லுவேன்.... (ஆவிக்குரிய மரணம்) 235. அதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? (சபையார் "ஆமென்'' என்கின்றனர் - ஆசி) வேதம் அவ்வாறே கூறுகிறது. "அவர்களை மரணத்தினால் கொல்லுவேன்.'' அவர்கள் கொல்லப்பட்டால், அவர்கள் நித்திய காலமாக தேவனிடமிருந்து பிரிக்கப்படுவார்கள். சரி, தியத்தீரா சபை மனந்திரும்ப வேண்டுமென்று கிறிஸ்து அவளுக்கு தவணை கொடுத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 236. தீயத்தீரா சபையின் காலம் இருளின் காலமாகும். அக்காலத்தில் கறுப்புக் குதிரையின் மேலிருந்தவன் சவாரி செய்து ஆராதனைக்கும் நொவினாக்களுக்கும் காசு வசூலித்தான். அவனுடைய கறுப்புக் குதிரையைக் கவனியுங்கள். அவன் தீயத்தீராவின் (என்ன?) காலத்தில் மனந்திரும்ப மறுத்த பிறகு, கறுப்புக் குதிரையிலிருந்து மாறி மங்கின நிற முள்ள குதிரையின் மேலேறி, மரணம் என்னும் பெயர் கொண்டு, தன் ஊழியத்தின் கடைசி கட்டத்தை அடைகிறான். 237. இப்பொழுது, தனிப்பட்ட நபர் ஒவ்வொருவருக்கும் சிறிது அதிர்ச்சி கொடுக்க விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் தேவனுடைய அழைப்பை நீ மறுத்தால், ஒரு நாளில் அதை நீ கடைசி முறையாகச் செய்ய நேரிடும். தியத்தீரா சபைக்கு மனந்திரும்பும்படியாய் தவணை கொடுக்கப்பட்டு அது முடிந்துவிட்டது. தேவனுடைய பொறுமை எப்பொழுதும் மனிதனுடன் போராடுவதில்லை. பாருங்கள்? 238. ஆகவே தேவனுடைய அழைப்பை அவள் ஏற்றுக்கொள்ள மறுத்த பிறகு அவள் நிலை மாறி, "மரணம்'' - பிரிவினை என்னும் பெயரைக் கொண்டாள். தேவன் அவளுடைய பிள்ளைகளாகிய பிராஸ்டெண்டு களையும் நித்திய பிரிவினையால் கொல்லுவதாக அவளிடம் சொன்னார். தியத்தீரா சபையின் காலம்- இருளின் காலம். கறுப்புக் குதிரையின் மேலிருக்கிறவன். இப்பொழுது அவன் ஊழியத்தின் கடைசி கட்டத்தை அடைந்து மரணத்தை அளிக்கிறான். 239. சபையின் காலங்கள் முத்திரைகளுடன் எவ்வளவு பூரணமாய்ப் பொருந்துகிறதென்று பாருங்கள். அதனால் இதன் விளக்கம் சரியென்று நாம் அறிந்துகொள்ள முடிகிறது. பரிசுத்த ஆவியானவர் தவறு செய்வதேயில்லை. நாம் சபையின் காலங்களைக் குறித்து பேசிக்கொண்டிருக் கும்போது, அது சரியென்று அவர் உறுதிப்படுத்தினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். 240. தேவனுடைய அன்பையும், நீடிய பொறுமையையும் பாருங்கள். அவர் தியத்தீரா சபையின் மேல் நியாயத்தீர்ப்பு செலுத்து முன்பு, அவள் மனந்திரும்ப வேண்டுமென்று அவளுக்குத் தவணை கொடுத்தார். கர்த்தருடைய நாமத்தில் இதை சொல்லுகிறேன்: மனந்திரும்ப வேண்டுமென்று அவர் பிராடெஸ்டெண்ட் சபைகளுக்கும் தவணை அளித்துள்ளார் ஆனாலும் அவள் ஒருக்காலும் மனந்திரும்பமாட்டாள். இச்செய்திகள் எல்லாவிடங்களிலும் அசைவை உண்டு பண்ணின. ஆயினும், அவள் மனந்திரும்பமாட்டாள். நீங்கள் எவ்வளவாக இச்செய்தியை விளக்கிக் காண்பித்தாலும் அவள் தன் சொந்த கோட்பாடுகளிலும் பிரமாணங்களிலும் நிலைத்திருப்பாள். 241. அன்றொரு நாள் சிக்காகோவில் அநேக போதகர்கள் முன்னிலையில் நான் கூறினதுபோன்று..... அவர்கள் "சர்ப்பத்தின் வித்து' போதகத்தைக் குறித்தும், மற்றவற்றைக் குறித்தும் என்னிடம் தர்க்கித்து என்னை மடக்கப் பார்த்தனர். அப்பொழுது நான், 'உங்களில் யாராவது ஒருவர் வேதாகமத்தை எடுத்துக்கொண்டு என் பக்கத்தில் வந்து நில்லுங்கள்' என்றேன், அப்பொழுது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. 242. அதைக் கண்ட டாமி ஹிக்ஸ் (Tommy Hicks) என்னிடம், "சகோ. பிரான்ஹாமே, அதைப் போன்ற ஒன்றை நான் அதுவரை கேட்டதேயில்லை. அது பதிவு செய்யப்பட்டுள்ள முந்நூறு ஒலிநாடாக்கள் தேவை. என்னுடைய எல்லா ஊழியக்காரரருக்கும் நான் அதை அனுப்ப விரும்புகிறேன்'' என்றார். 243. சுமார் ஐம்பது அல்லது எழுபத்தைந்து பேர், ''நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியுமாக ஞானஸ்நானம் பெறுவதற்கு வருகிறோம்'' என்றனர். அவர்கள் வந்தார்களா? அவர்களில் ஒருவராவது வரவில்லை. ஏன்? மனந்திரும்ப அவர் அவர்களுக்கு தவணை கொடுத்தார். உங்கள் பிள்ளைகளை அவர் மரணத்தில் - ஆவிக்குரிய மரணத்தில் ஆழ்த்துவார். 244. கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு அல்லது சனியிரவு வரப்போகும் வாதைகளைக் குறித்து பேசலாம். அப்பொழுது என்ன நடக்கு மென்று நாம் பார்க்கலாம். 245. அவர் எகிப்துக்கு அளித்தது போல மனந்திரும்பத் தவணையளித்தார். எகிப்தில் நேர்ந்த கடைசி வாதை என்ன? - மரணம். 246. பெந்தெகொஸ்தே சபையைத் தாக்கிய கடைசி வாதையும் அதுவே, ஆவிக்குரிய மரணம், அவள் மரித்துவிட்டாள். கர்த்தரின் நாமத்தில் இதை சொல்லுகிறேன். ஆவிக்குரிய விதத்தில் அவள் மரித்துவிட்டாள். அவள் மனந்திரும்ப அவர் தவணையளித்தார். அவளோ அதைப் புறக்கணித்து விட்டாள். இப்பொழுது அவள் மரித்த நிலையில் இருக்கிறாள். அவள் மறுபடியும் எழுந்திருக்கவே மாட்டாள். 247. அந்த ஜனங்கள் எபிஸ்கோப்பலிய (Epicopalians) போதகர்களை வரவழைத்து, 'பரிசுத்த பிதாவே' 'இன்னார் இன்னார்' என்று அவர்களை அழைக்கின்றனர். அவர்கள் தங்களைக் குறித்து வெட்கமடைய வேண்டும். ஒரு மனிதன் எவ்வளவாக குருடாக முடியும். உறங்கிக் கொண்டிருந்த புத்தியில்லாத கன்னிகை எண்ணெய் வாங்க வந்தபோது, அவளுக்கு எண்ணெய் கிடைக்கவில்லை என்பதாய் இயேசு கூற வில்லையா? 248. ஜனங்கள், ''நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டேன். நான் அன்னிய பாஷையில் பேசினேன்'' என்று சொல்லுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் நம்முடைய சபைபோன்ற ஒரு சபைக்கு வர விரும்புவதில்லை. அவ்விதமான ஸ்தலத்துக்குச் செல்ல எனக்குப் விருப்பமில்லை' என்று அவர்கள் சொல்கின்றனர். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றதாகக் கூறிக்கொள்கிறீர்கள். 249. ஆனால் கெளரவமான முறைகள்தான் உங்களுக்கு அவசியமாயிருக்கிறது. நீங்கள் பாபிலோனில் தங்கியிருந்து அதே சமயத்தில் பரலோகத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள். நீங்கள் இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங் கள் உலகத்தில் நிலைத்திருந்து, அதே சமயத்தில் தேவனைச் சேவிக்க முடியாது. தேவனுக்கும் உலக பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாதென்று இயேசு கூறினார். 250. ஆகையால் நீங்கள் உண்மையாக இரட்சிக்கப்பட்டிருந்தால் பரிசுத்த ஆவியானவர் தம்மை வெளிப்படுத்தி, தேவனுடைய வார்த்தையை அவர் அங்கீகரிக்கும்-கூட்டங்களில் பங்குகொள்ள விரும்புவீ ர்கள். 251. "ஜனங்கள் இத்தகைய கூட்டங்களில் அதிக சத்தமிடுகின்றனர். அது எனக்கு நடுக்கத்தை உண்டாக்குகிறது'' என்று ஒருவர் சொன்னார். அப்படியானால் நீங்கள் பரலோகம் செல்வதாயிருந்தால் அங்கேயும் நடுக்கமுறுவீர்கள். இங்கு சத்தமிடுகிறவர்கள் எல்லாரும் பரலோகத்தை அடைந்தால், பரலோகம் எப்படி தொனிக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஓ, என்னே ! தேவன் எவ்விதமாக.. 252. தேவன் நோவாவின் காலத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந் தது போல இப்பொழுதும் இருக்கிறார். நோவாவின் காலத்தவர் மனந் திரும்ப வேண்டுமென்று நூற்றிருபது வருட காலமாய் அவர் நீடிய பொறுமையுள்ளவராயிருந்தார். அவர்களோ மனந்திரும்பவில்லை. 253. எகிப்தின் நாட்களில் அவர் அநேக வாதைகளை அனுப்பினார். ஆயினும் அவர்கள் மனந்திரும்பவில்லை. அவர் யோவான் ஸ்நானனை அனுப்பினார்; அவர்கள் மனந்திரும்ப மறுத்தனர். 254. தேவனுடைய வார்த்தையைக் கேட்கும் கூட்டத்தாரை இரட்சிக்க எண்ணி அவர் இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 255. இந்த கடைசி நாட்களில், ஜனங்களை மூல விசுவாசத்திற்கு, தேவனுடைய வார்த்தைக்கு - திருப்புவதற்கென ஒரு செய்தியை அனுப்புவதாக அவர் வாக்களித்துள்ளார். ஆனால் அவர்களோ அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் கொள்கைகளையும் பிரமாணங்களையும் கைக்கொண்டு இறுமாப்புள்ளவராய் இருக்கின்றனர். ஓ, அவர்கள் நினைக்கின்றனர்...ஆகவே தேவதூதனே இறங்கி வந்து அவர்களிடம் சத்தியத்தை உரைத்தாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தேவன் அவ்விதம் செய்யமாட்டார். 256. அவர் படிப்பறிவு சிறிதேனும் இல்லாத ABCக்களையும் - மற்றவற்றையும் சிறிதளவும் அறியாத ஒருவனை அதற்கென்று தெரிந்தெடுக்கிறார். ஒன்றுமற்ற ஒருவனை அவர் உபயோகித்து அவன் மூலம் கிரியை செய்கிறார். தங்களை பெரிதாக எண்ணிக்கொள்ளும் ஒருவரை தேவன் உபயோகிக்கமுடியாது. அவர் எப்பொழுதுமே அதையே செய்திருக்கிறார். தேவனுடைய பார்வையில் நீ முக்கியமானவனாக இருக்க எண்ணினால், நீ முதலில் ஒன்று மற்றவனாக ஆகவேண்டும். ஓ, என்னே ! 257. இப்பொழுது கவனியுங்கள், "அவள் மனந்திரும்ப அவர் தவணை கொடுத்தார். அவளோ மனந்திரும்பவில்லை.'' 258. அவர் மறுபடியும் அதைச் செய்தார்; அவளோ மனம் திரும்பவில்லை. அவள் அதைப் புறக்கணித்த காரணத்தால், சாத்தான் அவளுக்குள் முழுமையாக வாசம் செய்ய ஏதுவாகிறது. அது உண்மை . அவள் வார்த்தையைப் புறக்கணித்தாள், எனவே சாத்தான் அவளுக்குள் குடி கொள்கிறான். இவ்வாறே பிராடெஸ்டெண்ட் சபையும் வேசியாக மாறியுள்ளது. அவள் அடையாளங்களால் உறுதிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தை நிராகரித்ததனால், பிசாசு அவளுக்குள் வாசம் செய்ய அது வழி வகுத்தது. அதோ அந்த தொலைவில் (right yonder) அவர்கள் அனைவரும் ஒன்றாக இணையும்பொழுது, அவன் (he) மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குவான். அவர் என்ன கூறி னாரோ, அது சரியாக தொடர்ந்து சென்றுக் கொண்டிருக்கின்றது. அது முற்றிலும் உண்மையாகும். ஆமென்! 259. எனக்குக் கல்வியறிவு இருந்தால் இதை நன்றாக விளக்கித்தந்திருப்பேன். ஆனால் எனக்குக் கல்வியறிவு கிடையாது, பரிசுத்த ஆவியானவர் இதை உங்களுக்கு நன்கு வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். அதை விரும்பும் யாவருக்கும் அவர் நிச்சயம் வெளிப் படுத்துவார். அது உண்மை . அவர் அதைச் செய்வார் (வெளிப் படுத்துவார் - தமிழாக்கியோன்) ஆம். கவனியுங்கள். 260. அவள் என்ன செய்தாள் என்பதைக் கவனியுங்கள். அவள் மனந்திரும்ப வேண்டுமென்னும் தேவனின் செய்தியைப் புறக்கணித்தாள். அவள் அந்திக்கிறிஸ்துவாக தொடக்கத்தில் இருந்தாலும் பின்னர் கள்ளத் தீர்க்கதரிசியாக மாறி, சாத்தான் அவளுக்குள் குடிகொண்டு, அவள் கள்ளபோதகத்தை போதித்து வந்தாள். இவையெல்லாவற்றிலும், அவள் மனந்திரும்ப தேவன் அவளுக்குத் தவணை கொடுத்தார். அவளை அவரிடம் இழுத்துக்கொள்ள அவர் முயன்றார். 261, அவருடைய நீடிய பொறுமையையும் அதிசயமான அன்பையும் பாருங்கள். அந்த அன்பிற்கு இணையேதுமில்லை. அவருடைய முகத்தில் துப்பினவர்களைக் கூட அவர் மன்னித்தார். அதுதான் தேவனின் இயல்பு. பாருங்கள். 262. தேவனுடைய செய்தியைப் புறக்கணியாதீர்! கவனியுங்கள், அவள் மனந்திரும்பி, எந்நிலையிலிருந்து அவள் விழுந்தாளோ அந் நிலைக்குச் செல்லவேண்டுமென்று அவளுக்குக் கூறப்பட்டது. 263. அவள் எதிலிருந்து விழுந்தாள்? - வார்த்தையிலிருந்து. சரி. ஏவாள் எதிலிருந்து விழுந்து போனாள்? (சபையார் 'வார்த்தையிலிருந்து' என்று பதிலளிக்கின்றனர்-ஆசி) வார்த்தை . ஸ்தாபனம் எதிலிருந்து விழுந்தது? (சபையார் 'வார்த்தையிலிருந்து' என்று பதிலளிக்கின்றனர்). அதுவே தான் ஆகும். பாருங்கள்? தேவனுடைய வார்த்தைக்கு ஒவ்வொரு முறையும் திரும்புவது தவிர வேறு வழியில்லை. பாருங்கள்? அவர்களோ தேவனுடைய வார்த்தையினின்று அவர்களை அகலச் செய்யும் முறைமைகளில் சேர்ந்திருக்கின்றனர். வார்த்தைக்கு அவர்களைக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அது வார்த்தையினின்று அவர்களை அகன்று போகும்படி செய்கிறது. கவனியுங்கள். 264. கவனியுங்கள். மனந்திரும்ப, மறுபடியும் திரும்பிச் செல்ல அவளுக்குத் தவணையளிக்கப்பட்டது. மனந்திரும்பு (Repent) என்றால், ''திரும்பிப்போ, முன்னிலைக்குத் திரும்பு, நேர் எதிர்” என்று அர்த்தமாகும். மனந்திரும்பு - ''திரும்பிச் செல்.'' அவள் எங்கிருந்தாளோ அங்கே திரும்பிச் செல்லும்படியாய் அவளுக்குத் தவணையளிக்கப்பட்டது. 265. இப்பொழுது அவள் பெந்தெகொஸ்தே நாளன்று ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த மூலபெந்தெகொஸ்தே சபை என்பது நினைவிருக்கட்டும். எத்தனை வேத மாணாக்கர் இதை அறிவர்? நிச்சயமாக அவள் மூல பெந்தெகொஸ்தே சபைதான். அவள் அங்கிருந்து எங்கே சென்றாள் என்று பாருங்கள்? அந்நிலையிலிருந்து அவள் விழுந்தாள். தேவனுடைய வார்த்தையினின்று அவள் விழுந்து போய் ஸ்தாபன கொள்கைகளை ஏற்றுக் கொண்டாள். பரிசுத்த ஆவியானவரை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக அவள் "டாக்டர், LL, Ph. Q.U. போன்ற வேதப் பட்டங்கள் அநேகம் பெற்ற 'பரிசுத்த மனிதனை' விரும்பினாள். பின்னர் போப்பாண்டவர் ஒருவரை அவள் நியமித்துக்கொண்டாள். பாருங்கள்? நிச்சயமாக. காசு கொடுத்தால் யாராவது ஒருவர் அவளுக்காக ஜெபம் ஏறெடுக்க வேண்டும் என்பதையே அவள் விரும்பினாள். யாரோ ஒருவர்... பணம் கொடுத்துவிட்டால் போதும், அதுவே அவளுக் குப் போதுமானதாக இருந்தது. பாருங்கள்? 266. இப்பொழுது, இன்றைக்கும் அவ்வாறே சம்பவிக்கின்றது. ஆலயத்தில் உட்காருவதற்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட இடம் (Pew) ஒன்று கிடைத்துவிட்டு, காணிக்கை தட்டில் நிறைய காசு போட்டால் அது போதுமானது என்று அவர்கள் எண்ணியிருக்கின்றனர். அவர்கள் அந்த சபையின் அங்கத்தினராகிவிடுகின்றனர். சபை வேறொன்றும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லையென்று அவர்கள் கருதுகின்றனர். இவர்கள்தாம் வேசியின் குமாரத்திகள். 267. இப்பொழுது, அவள் எங்கிருந்து விழுந்து போனாள்? அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் இவர்களின் மூல வார்த்தையிலிருந்து, அங்கிருந்து அவள் விழுந்து போனாள். பிராடெஸ்டெண்டுகளும் அங்கிருந்துதான் விழுந்தனர். 268. மனந்திரும்புங்கள்! தாமதமாவதற்கு முன் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புங்கள்! ஏற்கனவே காலதாமதமாகிவிட்டது. வரப்போகும் என்றாவது ஒரு நாளில் ஆட்டுக்குட்டியானவர் அவருடைய சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு விடுவார். அப்பொழுது கால தாமதமாகிவிடும். ஆகவே, வேசியின் குமாரத்திகள், வேசியுடன் கூட நியாயந்தீர்க்கப்படுவதற்கு முன்னதாக, ''திரும்பி வரவேண்டுமென்றும்'' இப்பொழுது அழைக்கப்படுகின்றனர். 269. இப்பொழுது, நான் உங்களிடம் அடிக்கடி பேசிக்கொண்டு வரும் அந்த தீர்க்கதரிசி எழும்பும்போது, கடைசி செய்தியை அவர்கள் பெறுவார்கள். அந்த தீர்க்கதரிசியைக் குறித்து அறிவதற்கென நான் அநேக புத்தங்களைப் படித்துக்கொண்டு வருகிறேன். உண்மையுள்ள, ஞானமுள்ள, ஆவிக்குரிய சிந்தையுள்ள எந்த ஒரு மனிதனும் அந்த தீர்க்கதரிசி வந்து செய்தியை அளிக்க வேண்டுமென்பதை அறிந்திருக்கிறான். அவர்கள் அதை அறிவார்கள். பாருங்கள். அது வரும் என்று அவர்கள் அறிவார்கள். அவர்கள். ஆனால் அவர்களிடமுள்ள தவறு என்னவெனில்: ''எங்களுக்கு அந்த செய்தி அவசியம். அது நிச்சயம் வரும்'' என்றெல்லாம் அவர்கள் சொல்லுகின்றனர். ஆனால் அது உண்மையில் வரும்போது மிகவும் எளிமையுள்ளதாகக் காணப்படுவதால், சென்ற காலங்களில் அவர்கள் அதைக் கண்டு கொள்ளத் தவறினது போன்று, இப்பொழுதும் அவர்கள் அதைக் காணத் தவறக்கூடும். அது உண்மை . ஓ, ''அது வரவேண்டியது அவசியம்'' என்று மக்கள் தங்கள் பத்திரி கைகளில் எழுதலாம். ஆனால் அது அவர்கள் முன்னிலையில் நிகழும்போது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் கடந்து சென்று விடுகின்றர். பாருங்கள். எல்லா காலங்களிலும் அவர்கள் அவ்வாறே செய்து கொண்டு வந்துள்ளனர். 270. இப்பொழுது கவனியுங்கள். அவள் மனந்திரும்பி மூலவார்த்தைக்குச் செல்லவேண்டும். அவள் குமாரத்திகளும் மனந்திரும்பி அப்போஸ்தலருடைய போதகமாகிய மூலவார்த்தைக்குத் திரும்பவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால் அவர்களோ ஸ்தாபன கோட்பாடுகளில் அமிழ்ந்து போயிருப்பதால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது மாத்திரமல்ல, அதைக் கண்டு பரிகசிப்பார்கள். எனவே அவள் குமாரத்திகளும் அவளுடன் கட்டில் கிடையாக்கப்பட்டு கொல்லப்படு வார்கள். 271. முடிவில் அவர்கள் என்ன செய்கின்றனர்? அவர்கள் வெளிப் படுத்தல் 13:14-ல் சொல்லப்பட்ட பிரகாரம், மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கி-வேறொரு வல்லமை-ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டியைத் துன்புறுத்த முனைவர். ரோமசபை உண்மையான மணவாட்டியைப் பரிகசிப்பது போன்றே மற்றைய ஸ்தாபனங்களும் அவளைப் பரிகசிக்கின்றன. ஆம், ஐயா. வெளிப்படுத்தல் 13:14-ல் கூறப்பட்டது போல் அவள் ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டியிடம் நடந்து கொள்கிறாள். 272. இப்பொழுது கவனியுங்கள். ஆனால் தேவன் அவள் பிள்ளைகளை ஸ்தாபனங்களை- ஆவிக்குரிய மரணத்தினால் கொன்று போடுவார் என்னும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் காண்கிறோம். அது வெளிப் படுத்தல் 2:22ல் சொல்லப்பட்டிருக்கிறது. அதை மறந்து போகவேண் டாம். "கொல்வது" என்பது மரணத்திற்குள்ளாக்குவதைக் குறிக்கின்றது. 'மரணம்' என்னும் பதம், 'தேவனுடைய சமூகத்திலிருந்து நித்திய காலமாய் பிரிந்திருத்தல்' என்று பொருள்படும். அதைச் சற்று யோசித்துப் பாருங்கள். நண்பர்களே, அதைச் சற்று யோசித்துப் பாருங்கள். மனித னால் உண்டாக்கப்பட்ட கொள்கைகளை நீங்கள் நம்பவேண்டாம். தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கும் எல்லாவற்றிலிருந்தும் விலகி யிருங்கள். 273. இப்பொழுது, கவனியுங்கள். இங்கே, வேதத்திலுள்ளதைக் கவனியுங்கள். அவனுடைய பெயர் பாதாளம் என்று அது கூறு கின்றது... நான் கருதுகிறேன் அவனுக்கு மரணம் என்று பெயர். பாதாளம் அவன் பின்சென்றது. 274. இப்பொழுது, இயற்கையில் பாதாளம் எப்பொழுதும் மரணத்தைப் பின்தொடர்கிறது. ஒரு மனிதன் மரித்த பின்பு அவன் பாதாளத்தில்- அதாவது கல்லறையில் வைக்கப்படுகிறான். ஆனால் ஒருவன் ஆவிக்குரிய மரணம் எய்தினால் அவனுக்கு அக்கினிக் கடல் காத்திருக்கிறது. பாருங்கள். அது தேவனிடமிருந்து நித்திய பிரிவினையை உண்டாக்கி அவர்களை எரித்துப் போடுகிறது. பாருங்கள்? 275. “அது வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும்'' என்று மல் கியா 4-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆயிரம் வருட அரசாட்சிக்கென்று உலகம் அவ்விதமே சுத்திகரிக்கப்படவேண்டும். பாருங்கள்? 276. இப்பொழுது குதிரையின் மேலிருக்கிறவன் ஒரு ஆண் என்பதைக் கவனித்தீர்களா? 'அவன்'' "அவனுடைய' கரத்தில் வைத்திருந்தான்; மனிதன். அவன் கள்ளத்தீர்க்கதரிசி. ஆனால் அவனுடைய சபை பெண்ணாக வர்ணிக்கப்பட்டுள்ளது - 'அவள்'' யேசபேல். ஆகாப்-யேசபேல் எவ்வளவு அழகாகப் பொருந்துவதைப் பாருங்கள். பாருங்கள்? பாருங்கள்? 277. குமாரத்திகள் என்று அழைக்கப்படுவார்கள் "பெண்கள்.'' அவர்கள் பிராடெஸ்டெண்டுகள். அவர்கள் போப்பாண்டவரைப் போன்ற ஒரு மனிதனைத் தலைவனாகக்கொண்டிருக்கவில்லை எனினும், அவர்கள் பின்பற்றும் கொள்கைகளில், ஸ்தாபன முறைகளில், அவர்கள் வேசிகளாகவே இருக்கின்றனர். அது சற்று... அது அவ்விதமாகத்தான் கூறு கின்றது. 278. கவனியுங்கள்? இவையெல்லாம் எந்த சம்பவத்தில் முடிவடையப் போகின்றது? நமக்கு இன்னும் பன்னிரெண்டு, பதினான்கு நிமிடங்கள் உள்ளன என்று நான் ஊகிக்கிறேன். இவையெல்லாம் எந்த சந்தர்ப்பத்தில் முடியவடையப் போகின்றது? அது என்ன? ஆரம்பத்தில் என்ன சம்பவித்ததோ, அதுவே முடிவில் சம்பவிக்கும். அது பரலோகத்தில் யுத்தமாகத் தொடங்கினது. அவ்விதமே அது கடைசி கால யுத்தத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது... 279. பரலோகத்தில் முதலாவதாக ஒரு போர் தொடங்கினது, லூஸிபர் (Lucifer) அப்பொழுது பூமிக்குத் தள்ளப்பட்டான். அவன் ஏதேனை அப் பொழுது அசுசிப்படுத்தினான். அன்று முதல் அவன் எல்லாவற்றையுமே மாசுபடுத்திக் கொண்டு வருகிறான். அப்பொழுது பரலோகத்தில் யுத்தம் உண்டானது. கடைசி காலத்தில் அர்மகெதோன் (Armegeddon) யுத்தம் பூமியில் மூண்டு அது முடிவடையும். உங்களுக்கு அது தெரியுமா? முதலாவதாக பரிசுத்த பரலோகத்தில் யுத்தம் மூண்டது. மிகாவேலும் அவனைச் சார்ந்த தூதர்களும் லூசிபரையும், அவன் தூதர்களையும் முறியடித்து அவர்களைக் கீழே தள்ளினார்கள். அவன் ஏதேனில் விழுந்த அன்று முதல், உலகத்தில் போர் செய்துகொண்டேயிருக்கிறான். 280. ஆனால் தேவன் அவருடைய பிள்ளைகளுக்குத் தம்முடைய வார்த்தையை அரணாகக் கொடுத்திருக்கிறார். ஏவாள் அந்த அரணினின்று கழுத்தை வெளியே நீட்டி சாத்தானிடம், 'நீ சொல்லுவது சரியென்று விசுவாசிக்கிறேன்'' என்று சொன்ன அன்று முதற்கொண்டு அந்த போர் தொடங்கினது. எவர்கள் தாழ்மைப்படுவார்களோ, அவர்களை மீட்கும் படியாக அவர் இறங்கி வந்தார். 281. நான் உங்களுக்கு முன்னமே கூறியுள்ள வண்ணம், தேவன் கட்டிடம் கட்டும் ஒரு பெரிய காண்ட்ராக்டர். கட்டுவதற்கு அவசியமான எல்லா பொருட்களையும் அவர் பூமியில் சேகரித்த பின்பு, அவர் கட்டிடம் கட்டுகிறார். இப்பூமியில் ஒரு விதை உண்டாவதற்கு முன்னர் சூரியவெளிச்சம் பூமியில் படுமுன்னர், உங்கள் சரீரங்கள் பூமியில் படுத்து கிடந்திருந்தன- ஏனெனில் நீங்கள் பூமியின் தூளிலிருந்து உண்டானவர்கள். பாருங்கள்? நாம் அவ்விதமே இருக்கிறோம். தேவன் தாம் உங்களை உண்டாக்கின காண்ட்ராக்டர். 282. இப்பொழுது தேவன் கால்ஷியம், பொட்டாஸியம், அண்டசராசர வெளிச்சம் (Cosmic light) இவைகளை ஒருங்கே சேர்த்து 'ப்யூ' என்று ஊதி ஆதாமின் சரீரத்தை உண்டாக்கியது போன்று ஒவ்வொரு சரீரத்தையும் ப்யூ என்று ஊதி உண்டாக்கி 'இதோ என் மற்றொரு குமாரன்', மீண்டும் ப்யூ என்று ஊதி உண்டாக்கி, 'இதோ வேறொருவன்' என்று சொல்ல வேண்டுமென்று எத்தனித்திருந்தார். 283. ஆனால் ஏவாள் என்ன செய்தாள்? அவள் அவ்வழியைக் கெடுத்து விட்டு, இன சேர்க்கையின் மூலம் மானிடவர்க்கத்தைப் பிறப்பித்தாள். அப்பொழுது மரணம் அதை ஆட்கொண்டது. 284. இப்பொழுது தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் முன்குறித்த அநேக வித்துக்கள் காலங்கள்தோறும் உண்டாயிருந்தன. அவர் கடைசி காலத்தில், ''ஏவாளே, வேறொரு குழந்தையைப் பிரசவிப்பாயாக" என்று சொல்லமாட்டார். அவர் என்னைக் கூப்பிடுவார் (வ்யூ). நான் பதிலளிப்பேன். அவ்வளவுதான். அதுதான். அது தான் கருத்து. கடைசி நபர் உட்பிரவேசித்த பிறகு, எல்லாம் முடிவடையும். 285. இப்பொழுது, யுத்தம் பரலோகத்தில் ஆரம்பித்தது. அது பூமியில் அர்மகெதோன் யுத்தத்தில் முடிவடையும். 286. அது இப்பொழுது வெளிப்படுவதைக் கவனியுங்கள். நாம் அதை ஒருவேளை வெளிப்படுத்தலாம். நாம் இப்பொழுது அதைச் செய்ய கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. அது வெளிப்படுவதை கவனி யுங்கள். 287. குதிரையில் சவாரி செய்த மர்மமானவன் அவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனியுங்கள். தேவனுடைய வார்த்தையை "எதிர்த்து,'' மனந்திரும்பி மூல இரத்தமான வார்த்தைக்குச் (original Blood Word) செல்ல மறுத்தான். அந்த வார்த்தைதான் மாம்சமும் இரத்தமுமானது. பாருங்கள்? அவன் அதற்குத் திரும்பிச் செல்ல மறுத்தான். அவன்தான் அந்திக்கிறிஸ்து. உண்மையான வார்த்தை மணவாட்டி, எதிர்த்... அவன் உண்மையான வார்த்தை மணவாட்டிக்கு எதிர்ப்பாயிருக்கிறான். ஆனால் தன் சொந்த மணவாட்டியைத் தெரிந்து கொள்கிறான். இந்த உண்மையான மணவாட்டியையும்கூட எதிர்க்கிறான். அவன் கோட்பாடுகள், கொள்கைகள் என்றழைக்கப்படும் மார்க்க உருவத்தில் தன் மணவாட்டியைத் தெரிந்துகொண்டு, அவளைத் தன்னிடத்தில் கொண்டுவருகிறான். பாருங்கள்? அல்லாமலும் இப்பொழுது, அவன் பரிசுத்த மணவாட்டியைக் காணும்போது, அவளை விரோதிக்கிறான். அவன் கிறிஸ்துவுக்கு எதிராக அந்திக்கிறிஸ்து போதகங்களை அளித்து அந்திக் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிற தன் மணவாட்டியை உண்டாக்கிக் கொள்கிறான். அவன் எவ்வளவு சாமர்த்தியமுள்ளவன், பாருங்கள்? இப்பொழுது அன்பினால் ஒருமைப்பட்டு இரத்தத்தின்கீழ் ஆராதனை செய்வதற்குப் பதிலாக அவன் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கினான். தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்வதற்கு மாறாக அவன் பிராமணங்களையும் கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டான். 288. பிராடெஸ்டெண்டுகள் "அப்போஸ்தலருடைய' விசுவாசப்பிரமாணத்தை உச்சரிக்கின்றனர். அதிலுள்ள ஒரு வார்த்தையாகிலும் வேதத்திலுண்டா என்று நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க விரும்புகிறேன். அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணம் என்பது வேதத்திலேயே இல்லை. 289. நான் சில நாட்களுக்கு முன்பு எங்கோ ஒரு கூட்டத்தில் கூறியது போன்று, அப்போஸ்தலர்களுக்கு ஒரு விசுவாசப் பிரமாணம் உண்டாயிருந்தால், அது அப்போஸ்தலர் 2:38 ஆகத்தான் இருந்திருக்க வேண்டும். நான் அறிந்துள்ளதெல்லாம், அவன் (அப்போஸ்தலன் -தமிழாக்கி யோன்) இதை மட்டுமே (அப்.2:38) பெற்றிருந்தான் என்பதாகும். அதைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர். கிறிஸ்தவர்களைப் போன்று காணப்பட்டவரிடம் பவுல் "நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப்பெற்றீர்களா?'' என்று கேட்டான். அவர்கள் பிரதியுத்தரமாக, 'பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவேயில்லை' என்றனர். அவன், 'அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?' என்றான். 290. இப்பொழுது, இயேசுவின் நாமத்திலோ அல்லது சரியாகக் கூறிவோமானால் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவது சரிதான். ஆனால் அது மாத்திரம் போதாது. இல்லை, ஐயா. நீங்கள் ஐம்பது முறை ஞானஸ்நானம் பெற்றாலும், பரிசுத்த ஆவியானவர் இருதயத்தை மாற்றாவிட்டால், அதனால் எவ்வித உபயோகமுமில்லை. இவையிரண்டையும் நாம் ஒருங்கே பெற வேண்டும். கவனியுங்கள். அது-கிறிஸ்து. 291. அந்திக்கிறிஸ்து உண்மையான மணவாட்டியின் போதகத்தை ஏற்க மறுக்கிறான். எனவே அவன் தன் சொந்த மணவாட்டியைத் தெரிந்து கொண்டு அவனுடைய சொந்த கோட்பாடுகளை அவளுக்குப் புகட்டி அவளை ஒரு ஸ்தாபனமாக்குகிறான். வேத வாக்கியங்கள் கூறியவாறு இவள் குமாரத்திகளை - வேறு ஸ்தாபனங்களை - ஈனுகிறாள். குமாரத் திகள் அவர்கள் தாயைப்போல் மாம்சப்பிரகாரமாக, உலகப் பிரகாரமாக ஸ்தாபனங்களாக ஆகி, ஆவிக்குரிய மணவாட்டியை - வார்த்தையைஎதிர்க்கின்றனர். 292. சபையைச் சேர்ந்தவரல்ல என்று அவர்கள் ஒருபோதும் கூறுவதில்லை. நீங்கள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த யாராவது ஒருவருடன் பேசிப் பாருங்கள். ''நிச்சயமாக நான் ஒரு சபையைச் சேர்ந்தவன்'' என்று அவர் கூறுவார். ''நீங்கள் கிறிஸ்தவரா?'' என்று அவரிடம் கேட்டால், அவர், ''நான் இன்னின்ன சபையைச் சேர்ந்தவன்'' என்று பதிலுரைப்பார். அவர்களுக்கும் சபைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. அவர்கள் கூறு கின்றார்கள்... நீங்கள் சபை என்று அழைக்கப்படும் ஒன்றைச் சேர்ந் திருக்கலாம். ஆனால் அது சபையல்ல. அவையாவும் சபைகளல்ல. அவை ஜனங்கள் ஒன்றுகூடும் விடுதிகளாம் - இனத்தோடு இனம் சேரும். 293. ஒரே ஒரு சபைதான் உண்டு. அதுதான் காணக்கூடாத கிறிஸ்துவின் சரீரம். நீங்கள் அதில் சேருவதில்லை. நீங்கள் அதில் பிறக்கிறீர் கள். 294. நான் அடிக்கடி கூறுவது போன்று, ஐம்பத்து மூன்று வருட காலமாக நான் பிரான்ஹாம் குடும்பத்தில் இருக்கிறேன். அதில் நான் சேரவில்லை. நான் அதில் பிறந்தேன். பாருங்கள்? 295. இப்பொழுது கவனியுங்கள். இந்த அழகான உதாரணத்தைப் பாருங்கள். ஒரு வேத வாக்கியத்தை நான் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அதைப் படிக்க இப்பொழுது சமயமில்லை. ஏசாவையும் யாக்கோ பையும் எடுத்துக்கொள்வோம். 296. இப்பொழுது ஏசா பக்தியுள்ளவன், அவன் அவிசுவாசி என்று தன்னைக் கூறிக்கொள்ளவில்லை. யாக்கோபு வணங்கின அதே தேவ உனைத்தான் அவனும் வணங்கினான். அவனுடைய தகப்பனாரும் அந்த தேவனையே வணங்கினார். ஆனால் அவன் நாணமுள்ளவன். அவன் எதற்கும் உபயோகமில்லாதவன். ஆனால் நல்லொழுக்கத்தைப் பொறுத்தவரை, அவன் யாக்கோபைக் காட்டிலும் நல்லொழுக்கமுள்ளவனாயிருந்தான். ஆயினும், “அதற்கும் சேஷ்ட புத்திர பாகத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?'' என்று அவன் நினைத்து, சேஷ்ட புத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்றுப் போட்டான். பாருங்கள்? 297. ஆனால் யாக்கோபோ ஏசாவைப்போல் பெரிய காரியங்களைச் செய்யவில்லை. ஏசாவுக்கிருந்த பிறப்புரிமை அவனுக்கு இல்லை. ஆனால் அவன் எங்ஙனமாயினும் சேஷ்ட புத்திர பாகத்தைப் பெற்றுக்கொள்ள விழைந்தான். அதற்காக எம்முறையைக் கையாண்டாலும் பரவாயில்லை என்று அவன் எண்ணினான். தேவன் அதற்காக அவனுக்கு மதிப்பு கொடுத்தார். 298. மாம்சப் பிரகாரமான, உலகப் பிரகாரமான சிந்தையுள்ளவர்கள் இன்று ஏசாவைப் போலிருக்கின்றனர். ''நாங்கள் இந்த சபையைச் சேர்ந்தவர்கள் அந்த சபையைச் சேர்ந்தவர்கள்'' என்று அவர்கள் சொல்லுகின்றனர். ஆனால் அதற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. 299. கவனியுங்கள். குதிரை சவாரி செய்பவன் மங்கின குதிரையின் மேலேறி அரசியல் வல்லமை கொண்டவனாய் அவர்களையெல்லாம் ஒன்று சேர்க்கிறான். ஏனெனில் அவன் அரசியல் வல்லமையை கொண் டவனாயிருக்கிறான். 300. அவனுக்கு அரசியல் வல்லமை கிடையாது என்று நீங்கள் சொன்னால், இந்த அமெரிக்க ஜனாதிபதி எவ்விதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அந்த தவறு எங்ஙனம் உண்டானது? ஊம் - ஊம்... நாம்; மத சுதந்திரத்திற்காக இங்கு வந்தோம். ஜனநாயக (Democrat) கட்சியைச் சேர்ந்தவர்களே! உங்கள் பிறப்புரிமையை அரசியலுக்காக விற்றுப்போட் டவர்களே! எனக்கு எவ்விதமான... ஜனநாயகக்கட்சி சரிதான்; ஆனால் அவைகள் இரண்டும் நேர்மையிழந்துவிட்டன (rotten). நான் கிறிஸ்தவத்தைக் குறித்துப் பேசுகிறேன். இத்தகைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க உங்கள் பிறப்புரிமையை நீங்கள் விற்றுப்போட்டீர்கள். உங்களுக்கு வெட்கமில்லையா? 301. இந்த தேசம் இஸ்ரவேல் நாட்டின் மாதிரியையொட்டி அமைந் துள்ளது என்பதை நீங்கள் உணருவதில்லையா? இஸ்ரவேல் ஜனங்கள் என்ன செய்தனர்? அவர்கள் அன்னிய நாட்டில் புகுந்து அங்குள்ளவரைக் கொன்றுபோட்டு அந்நாட்டைக் கைப்பற்றினர். நாமும் அதையே செய்தோம். உண்மையான அமெரிக்கர்களான நம்முடைய நண்பர்களான சிவப்பு இந்தியர்களை நாம் கொன்று போட்டோம். 302. அவர்கள் என்ன செய்தனர்? இஸ்ரவேலருக்கு சில சிறந்த மனிதர் இருந்தனர். நாம் முதலாவது அறிந்து கொள்வது என்னவெனில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தாவீது, சாலொமோன் போன்ற சில பெரிய மனிதர்கள் இருந்தனர். ஆனால் முடிவில் அவிசுவாசியாகிய யேசபேல் என்பவளை விவாகம் செய்துகொண்ட ஆகாப் என்னும் ஒரு துரோகி அவர்களுக்கு ராஜாவாயிருந்தான். 303. நல்லது, நாமும் அதையே செய்தோம். வாஷிங்டன், லிங்கன் போன்ற பிரசித்தி பெற்ற ஜனாதிபதிகள் நமக்கிருந்தனர். ஆனால் இப்பொழுதுள்ள ஜனாதிபதியைப் பாருங்கள். அவர் ஒரு யேசபேலை விவாகம் செய்துக் கொண்டிருக்கிறார். அவர் அதில் தன்னை அமிழ்த்துக் கொண்டு, வெறும் பேச்சாளரானார். அவர் ஒருக்கால் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவர் மனைவிதான் விவகாரம் அனைத்தையும் நடத்துகிறாள். முழு குடும்பமே விவகாரத்தில் ஈடுபடுகின்றது என்பதை இப்பொழுதே நீங்கள் காணலாம். 304. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பரிசுத்த ஆவியானவர் என்னிடம் என்ன கூறினார்? பழைய காலத்தவராகிய உங்களுக்கு அது தெரியும். முடிவு காலத்திற்கு முன்பு நேரிடப் போகும் ஏழு சம்பவங்களைக் குறித்து அவர் என்னிடம் சொன்னார். இப்பொழுது நடைபெறு கின்றது கடைசிக்கு முந்தின சம்பவம். யுத்தங்களைப் பற்றியும் மற்ற வைகளைப் பற்றியும் அவர் கூறின யாவும் அதே போன்று முற்றிலும் நிகழ்ந்தன. பாருங்கள்? இப்பொழுது அமெரிக்க தேசம் ஒரு ஸ்திரீயினால் அரசாளப்படுவதற்கென்று அவள் கைகளில் சிக்கியுள்ளது. யேசபேல்! பாருங்கள்? 305. ஆனால் யேசபேலின் நாட்களில் ஒரு தீர்க்கதரிசி அவர்களுடைய சுபாவத்தை வெளிப்படுத்தினான் என்பது நினைவிருக்கட்டும். பாருங்கள்? 306. அவன் மங்கின நிறமுள்ள குதிரையின் மேலேறி ஜனங்களைக் கூட்டி சேர்க்கிறான். சபை பிரமாணங்கள், மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகள் இவை ஒன்றாக கலந்திருக்கின்றன. நான் கூறுவது சரியா? (சபையார் "ஆமென்'' என்கின்றனர் -ஆசி) வண்ணங்கள் ஒன் றாகக் கலந்திருக்கின்றன. மரணத்தின் வர்ணமும், மங்கிய நிறமுள்ள குதிரையின் உலகப் பிரகாரமான போக்கும். இப்பொழுது, அது உண்மையாகும். மரணத்தின் வர்ணமும், மங்கின நிறமுள்ள குதிரையின் உலகப் பிரகாரமான போக்கும், ஓ, என்னே! அவர்களிடம் தேவனுடைய வார்த்தையின் பரிசுத்த இரத்தம் காணப்படவேயில்லை. 307. கவனியுங்கள். "அவர்களைப் பூமியின் நான்கு முனைகளிலிருந்தும் அர்மகெதோன் யுத்தத்திற்குக் கூட்டி சேர்க்கின்றனர்'' என்று வேதம் கூறுகின்றது. அதை நான் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அதை படிக்கப் போவதில்லை. அந்த வேதவாக்கியத்தை நினைவுப்படுத்தி உங்களிடம் கூறுகின்றேன். “தேவனாகிய கர்த்தருடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு அவர்களைக் கூட்டி சேர்க்கின்றனர்.'' கவனியுங்கள்! எல்லா வண்ணங்களும் கலந்த உலகப் பிரகாரமான, மங்கிய நிறம் கொண்ட வெளிறிய தோற்றங்கொண்ட குதிரை. சற்று சிந்தித்து பாருங்கள், அது ஒரு தீங்கான காரியம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் அவர்களைப் ''பூமியின் நான்கு முனைகளிலிருந்தும் கூட்டி சேர்ப்பதை” கவனியுங்கள். பலப்பரீட்சைக்காக அவர்கள் கூடுகின்றனர். அந்த யுத்தம் (பலப்பரீட்சை) "அர்மகெதோனில்'' நடக்கும் என்று வேதம் எடுத்துரைக்கிறது. பாருங்கள்? 308. அவன் அப்பொழுது மங்கின நிறமுள்ள குதிரையின் மேலேறி, மரணம்... அது ஐயத்துக்கிடமில்லாதது என்னும் பெயர் கொண்டு அங்கு சவாரி செய்வான். "மரணம்'' - அந்திக்கிறிஸ்து. கவனியுங்கள். முதலாம் ஸ்தாபனத்தில் அவன் ஆவியாக இருந்தான். ஆனால் இது சம்பவிக்கும்போது அவன் ஆவியாக இருக்க முடியாது. வார்த்தைக்கு விரோதமாய் வேசித்தனம் செய்த அவனுடைய யேசபேலும் அவளுடைய குமாரத்திகளாகிய பிராடெஸ்டெண்டுகளும் இப்பொழுது ஒன்று சேர்க்கப் படுகின்றனர். 309. அன்று பாப்டிஸ்ட் ஸ்தாபனத்தார் சொன்னதை நீங்கள் கேட்டீர்களா? ஊம். "ஓ! நாங்கள் கத்தோலிக்க மார்க்கத்தாருடன் சேரமாட் டோம். அவர்களுடன் ஒருவாறு நட்பு கொள்வோம். நாங்கள் அவர்கள் சபையைச் சேரவேண்டிய அவசியமில்லை'' என்கின்றனர், அதைப் பாருங்கள். அதைப் பாருங்கள்? தேவனுடைய வார்த்தை அதையே கூறுகிறது பாருங்கள்? பாருங்கள்? அவள்தான் அந்த பழைய வேசி பாருங்கள்... 310. இப்பொழுது அவர்கள் ஒன்று கூடி, எல்லா வண்ணங்களும் கலந்த குதிரையின் மீது அர்மகெதோன் பலப்பரீட்சைக்குப் புறப்படு கின்றனர். வெள்ளைக் குதிரை, சிவப்பான குதிரை, கறுப்புக் குதிரை. இந்த மூன்றும் வித்தியாசமானவை - ஆனால் அசுத்த ஆவியின் வல்லமை யால் கட்டப்பட்டுள்ள, அரசியல், மத வல்லமைகளான அந்திக்கிறிஸ்து வாக இருக்கின்றது. அவன் இம் மூன்றும் ஒருங்கே பெற்று அவன் மங்கின நிறம் கொண்ட வெளிறிய தோற்றங்கொண்ட குதிரையின் மேல் சவாரி செய்கிறான். சரி. இப்பொழுது கவனியுங்கள். அவன் எதின்மேல் சவாரி செய்கிறான் என்பதைக் கவனியுங்கள். அவன் கறுப்பு, சிகப்பு, வெள்ளை வர்ணங்கள் மூன்றும் கலந்த மங்கின நிறமுள்ள சாம்பல் நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்து, வானத்தின் கீழுள்ள எல்லா தேசங்களிலுமிருந்து தன் பிரஜைகளை அந்த யுத்தத்திற்கென்று கூட்டிச் சேர்க்கிறான். தானியேல் சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கி, இரும்பு ரோமாபுரியின் எல்லா ராஜ்யங்களிலும் பரவுவதை அறிவிக்கவில்லையா? இதோ அவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து வருகின்றனர். இன்னும் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து இதைக் கவனமாய்க் கேளுங்கள். நாம் ஆராதனையை முடித்துவிடலாம். 311. அவன் மூன்று நிறங்கள் கலந்த மங்கின நிறமுள்ள, வெளிறின தோற்றங்கொண்ட குதிரையின் மேல் சவாரி செய்து, அவன் பிரஜைகளை பூமியின் நாலாமுனையிலிருந்தும் கூட்டிச் சேர்க்கிறான். இந்தக் குதி ரையின் மேல் சவாரி செய்பவனும் அதே மனிதன்தான். 312.இப்பொழுது,அவன்(சாத்தான்-தமிழாக்கியோன்) மாத்திரம்தான் தயாராயிருக்கவில்லை, அவனைச் சந்திக்கத்தக்கதாக கிறிஸ்து தயாரா கிறது மட்டுமல்ல, தயாராக இருக்கிறார் என்று வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தில் நாம் பார்க்கலாம். அது பயங்கரமான யுத்தமாக இருக்கும். வெளிப்படுத்தல் 19ல், கிறிஸ்து அவருடையவர்களை பூமியின் நான்கு முனைகளிலிருந்து கூட்டிச் சேர்க்கப்போவதில்லை. ஏனெனில் அவர்களில் ஒரு சிலர் மாத்திரம் பூமியில் மீந்திருப்பார்கள். அவர் என்ன செய்வார்? அவர்களைப் பரலோகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார். நாளை பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களைக் குறித்து சிந் திக்கும்போது நான் கூறுவது சரியென்பது விளங்கும். அவர் பனி நிற வெண்மை கொண்ட குதிரையின் மேலேறி அவர்களைப் பரலோகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார். 313. அவருக்கு ஒரு பெயருண்டு. அது மரணம்' என்பதல்ல, ஜீவனைக் குறிக்கும் 'தேவனுடைய வார்த்தை ' என்பதாம், ஆமென். "தேவனுடைய வார்த்தை ” என்னும் அவர் நாமத்தை அவர் தொடையின் மீது எழுதி வைத்துள்ளார். அது ஒன்று தான் ஜீவனைக் கொடுக்க முடியும். ஏனெனில் தேவன் மாத்திரமே நித்திய ஜீவனின் (Zoe) உற்பத்தி ஸ்தான மாயிருக்கிறார் (Source), நான் கூறுவது சரியா? (சபையார் "ஆமென்” என்கின்றனர் -ஆசி) 314. அவர் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து, ''ஜீவன்'' என் னும் பெயரைக் கொண்டு, பரலோகத்துக்குரிய தமது பிரஜைகளாகிய பரிசுத்தவான்களைக் கூட்டிச் சேர்க்கிறார். ஆனால் இந்த மனிதன் மூன்று வித்தியாசமான வல்லமைகளைக் கொண்டவனாய் மரணம் என்னும் பெயர் கொண்டு. பூமிக்குரிய தன் பிரஜைகளைக் கூட்டிச் சேர்க்கிறான். அவன் மீது ''மரணம்'' என்னும் பெயர் எழுதப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்துவின் மீது ''ஜீவன்'' என்னும் பெயர் எழுதியிருக்கிறது. 315. கிறிஸ்துவுடன்கூட இருப்பவர்கள் வெள்ளைக் குதிரைகளின் மேல் வீற்றிருக்கின்றனர். அவர்கள் "உலகத் தோற்றத்துக்கு முன் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்'' என்று அழைக்கப்படுகின்றனர், ஆமென்! அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கின்றனர். ஆமென்! வ்யூ! அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் "உலகத் தோற்றத்துக்கு முன்னால் தெரிந்து கொள்ளப்பட்ட வர்களாய்,'' தெரிந்து கொள்ளுதலின் மூலம் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவர்களாயிருந்து, புதிய திராட்சரசத்தினாலும் எண்ணெயினாலும் ஊக்குவிக்கப்பட்டவர்களாய், வெள்ளைக் குதிரைகளின் மீது சவாரி செய்து கிறிஸ்துவைச் சந்திக்கப் புறப்படுகின்றனர். இடி முழக்கங்கள் வெகு விரைவில் இவைகளை முழங்கி வெளிப்படுத்தும் என் பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். பாருங்கள்? 316. கவனியுங்கள். அவர் எவ்விதம் செய்கிறார்? அவரே வார்த்தை , அவருடைய நாமம் ''தேவனுடைய வார்த்தை '' என்பதாகும். அப்படியானால், வார்த்தைதான் ஜீவன். ஆனால் அந்திக்கிறிஸ்து என்பவன் கிறிஸ்துவுக்கு விரோதமானவன்-அதாவது தேவனுடைய வார்த்தைக்கு விரோதமானவன். ஸ்தாபனங்களும் அதன் கொள்கைகளும் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் அமைந்திருப்பதால், அது அந்திக்கிறிஸ்துவினால் உண்டாயிருக்க வேண்டும். 317. அதை எங்ஙனம் நீங்கள் காணக் கூடாமல் இருக்கமுடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. உங்களுக்குப் புரிகின்றதா? இதை எங்ஙனம் நீங்கள் காணத்தவறமுடியும்? 318. அந்திக்கிறிஸ்து தேவனுடைய வார்த்தைக்கு விரோதமானவன்அதாவது அதை எடுத்துப் போடுகிறவன். அது சரியல்லவா? அவன் பல நிறங்கள் கலந்த குதிரையின் மீது சவாரி செய்கிறான் என்பது தேவனுடைய வார்த்தையின் மூலம் நமக்குப் புலனாகிறது. 319. ஏழு சபையின் காலங்களை நாம் வியாக்கியானம் செய்தபோதும் அதையே நாம் கண்டோம், இப்பொழுது இயேசு முத்திரைகளை உடைத்து, ஏழு சபையின் காலங்களில் நடந்தவை என்னவென்பதைக் காண்பிக்கிறார். 320. அந்திக்கிறிஸ்து, Anti-வார்த்தைக்கு எதிரானது. ஸ்தாபனங்களும் அவைகளின் பிரமாணங்களும் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் அமைந்துள்ளதால், நாம் அவைகளுக்கு விரோதமாய் இருக் கிறோம். பாருங்கள்? 321. இங்கு ஜீவனும் மரணமும் கடைசி போராட்டத்தில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம்-உண்மையான ஜீவனாகிய வெள்ளைக் குதிரையும், ஸ்தாபன பிரமாணங்களாகிய மங்கின நிறமுள்ள குதிரையும் பலப்பரீட்சைக்கு வருகின்றன. 322. இப்பொழுது உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். ஒரு வேளை நீங்கள் இதை நம்பமாட்டீர்கள். ஒரே ஒரு மூலநிறம் தான் உண்டு. அதுதான் வெள்ளை நிறம். நான் இதை ஊர்ஜிதப்படுத்துவதற்கென புத்தகங்களை ஆராய்ந்தேன். எத்தனை பேருக்கு இது தெரியும்? ஒரே ஒரு மூல நிறம்தான் உண்டு. மற்ற நிறங்கள் யாவும் வர்ணங்கள் கலந்ததனால் உண்டானவை. 323. எனவே, கிறிஸ்து ஆதி முதற்கொண்டு போலியில்லாத வெள்ளை நிறமான (solid -white) கலப்படமில்லாத வார்த்தையின்மீது சவாரி செய்கிறார். ஆமென். ஆமென். இரசாயனம் வெள்ளை நிறத்தைப் பிரிக்காமல் இருந்தால், எல்லா நிறங்களும் வெள்ளை நிறமாகவே அமைந் திருக்கும். ஆமென்! மகிமை! இன்று சபைகளில் ஸ்தாபனங்களின் கொள்கைகளும் பிரமாணங்களும் கலந்திராவிடில், ஒவ்வொரு சபையும் அப்போஸ்தலருடைய போதகமாகிய தேவனுடைய வார்த்தையில் நிலை நின்றிருக்க, தேவனும் அதை அடையாளங்களினால் உறுதிபடுத்தி யிருப்பார். அதைப் பாருங்கள்! ஓ! சகோ. ஈவான்ஸ் (Bro. Evans). இதைக் கூறும்போது எனக்குப் பரவச உணர்ச்சி உண்டாகின்றது. ஆம், ஐயா! ஆம், ஐயா! 324. ஒரே ஒரு மூல நிறம்தான். அதுதான் வெள்ளை. அது ஸ்தாபனங்களோடும் அதன் பிரமாணங்களோடும் ஒருபோதும் கலந்ததில்லை. இல்லை , ஐயா! 325. கிறிஸ்துவின் பரிசுத்தவான்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்தி ருக்கின்றனர். அவர்கள் ஸ்தாபனங்களோடும் அவைகளின் பிரமாணங்களோடும் கலக்கவில்லை. ஆனால் ஸ்தாபனங்கள் எல்லா நிறங்களும் கலந்த ஒருவகை நிறத்தைக் கொண்டதாயிருக்கின்றன. ஆனால் கிறிஸ்துவோ மூல நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறார். அந்த மூல நிறமே அவருடைய மக்களின் மேலும் உள்ளது. அவர்கள் அவருடைய இரத்தத்தில் தோய்க்கப்பட்டு, அவர்கள் அணிந்துள்ள ஆடைகள் வெண்மையாக்கப்பட்டு பாவமனைத்தையும் அதன் மூல காரணமாயிருந்த சாத்தானிடம் சென்றுவிட்டது. பாருங்கள்? நான் கூறுவது உண் மையாகும். ஆனால் ஸ்தாபனங்களின் பிரமாணங்களுடன் கலந்தவர்கள் மங்கின நிறமுள்ளவர்களாகி மரணத்தையடைகின்றனர். 326. வெள்ளை நிறத்துடன் மற்ற நிறங்களைச் சேர்ப்பது தவறாகும். அத னால் மூல நிறம் மாறி விடுகிறது. அது உண்மையல்லவா? மூல நிறம் வெள்ளை என்றால், அதனுடன் மற்ற நிறங்களைச் சேர்க்கும்போது, அதன் உண்மையான நோக்கத்தை நாம் மாற்றி விடுகிறோம். ஆமென். அது சரியா? 327. அவ்வாறே அவர் வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருந்து, அவரே தேவனுடைய வார்த்தையாயிருப்பாரெனில், அதனுடன் ஸ்தாபன பிரமாணங்களைக் கலந்து ஒரு வார்த்தையைக் கூட்டினாலும் அல்லது ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டாலும், நாம் எல்லாவற்றையும் தாறுமாறாக்குகிறோம். ஓ! கர்த்தாவே, நான் தேவனுடைய வார்த்தையில் நிலைக்கச் செய்யும். 328. சத்தியமும் தவறும்! ஓ, என்னே ! அது எவ்வளவு நல்லதாகத் தோன்றிடினும்... சத்தயமும் தவறும் ஒன்றோடொன்று கலவாது. அது 'கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார்' என்று சொல்லப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருக்க வேண்டும். இல்லையேல் அது தவறான ஒன்றாக இருக்கவேண்டும். அது 'பரிசுத்த பிதா' கூறினாலும் அல்லது பரி. பேர்னபீஸ் அல்லது கான்டர்பரியின் பிரதம அத்யட்சகர் கூறினாலும் எனக்குக் கவலையில்லை. தேவனுடைய வார்த்தைக்கு மாறாக அது அமைந் திருந்தால் அது வார்த்தையைத் தாறுமாறாக்கும். அது ஒருபோதும் கலவாது. 'இவர் இத்தனை மகத்துவமான செயல்களைப் புரிந்துள்ளாரே!' என்று நீங்கள் கூறலாம், அவர் எதைச்செய்தாலும் எனக்குக் கவலையில்லை. அவர் எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும் அக்கரையில்லை. நம்மிடமிருப்பது நாம் தேவனிடமிருந்து நேரடியாகப் பெற்றுள்ள இந்த சத்தியமாகும். இந்த சத்தியத்திற்கு புறம்பேயிருந்தால், எந்த சபை, ஸ்தாபனத்திடமும் சத்தியம் என்பதே இல்லை என்று அர்த்தமாம். 329. சத்தியத்தைக் கடைபிடிக்கும் ஏதாவது ஒரு சபையை எனக்குக் காண்பியுங்கள். வேதாகமத்தில் ஒரு பாகத்தை திருப்பி, ஒன்றைக் கூற விரும்புகிறேன். பாருங்கள்? ஏதாவது ஒரு சபையைக் கூறுங்கள். நீங்கள், "பெந்தெகொஸ்தேயினரைக் குறித்து என்ன?'' என்று நினைக் கிறீர்கள். ஓ, என்னே! உங்கள் நினைவுகளை இப்பொழுது நான் பகுத்த றிந்தேன். அந்தக் காரணத்தினால்தான் நான் அதை உங்களிடம் கூறினேன். அது உங்கள் மனதைப் புண்படுத்தியுள்ளது. அப்படியானால் நான் கூற வந்ததைச் சொல்லாமல் விட்டுவிடுகிறேன். ஏனெனில் உங்களைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. நீங்கள் மனதில் என்ன நினைத் திருக்கிறீர்கள் என்பதை நானறிவேன் என்று காண்பிக்கவே இதைக் கூறினேன். பாருங்கள்? 330. கலப்படமானது மரணத்திற்கு திருப்பப்படுகின்றது. மூல காரியத்துடன் எதைக் கூட்டினாலும் அது மரண நிறம் கொள்கின்றது. 331. கிறிஸ்து கடுகு விதையைக் குறித்து சொன்னது நினைவிருக்கும். அது எல்லா விதைகளைப் பார்க்கிலும் சிறிதாயிருந்தாலும் அது வேறொன்றுடன் கலவாது. அது அப்பட்டமான ஒன்று. உங்களுக்குக் கடுகு விதைளவு விசுவாசம் இருந்தால், அதில் நிலைகொள்ளுங்கள். 332. கவனியுங்கள். ஜீவன் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய் பவரைப் பின்பற்றினது, அவர்தான் தேவனுடைய வார்த்தை, ஜீவன். அவர் தம்முடன் கூட இருக்கும் உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களால் நிலைநிறுத்தப்படுகிறார். இந்த யுத்தம் யார் சார்பில் செல்லும்? 333. "என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்'' என்று இயேசு கூறினார். அவர், "நீ என்னை விசுவாசித்தால், மரித்தாலும் பிழைப்பாய்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்'' என்றார். மேலும் அவர், "என்னை விசுவாசிக் கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்றார். அது அவர் வாக்களித்த வேதவாக்கியமாகும். 334. சாத்தான் பூமியின் நான்கு முனைகளிலுமுள்ள பிராடெஸ்டெண்டுகளையும் கத்தோலிக்கர்களையும் ஒன்று கூட்டி, அர்மகெதோன் யுத்தத்திற்கென்று படைதிரட்டி வருகிறான். சரி! 335. ஆகவே, இயேசுவும் தேவனுடைய வார்த்தையால் நிலை நிறுத்தப்பட்ட உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களுடன் பரலோகத்திலிருந்து இறங்கி வருகிறார். 336. நான் முன்பு கூறியதுபோல், தேவன் உங்களுடன் பேசி உங்களை அனுப்புவாரெனில், அவருடைய வார்த்தையை அவர் ஆதரிக்கக் கடமைப்பட்டுள்ளார். பாருங்கள்? நீங்கள் பரலோகத்தின் ராஜ்யப் பிரதி நிதி (Ambassador)யாக இருப்பீர்களானால், பரலோகம் முழுவதுமே உங்களை ஆதரிக்கும். பரலோகம் தேவனுடைய வார்த்தையைக் கொண் டிருக்கிறது. ஊ-ஊம். 337. இப்பொழுது கவனியுங்கள். அவர் உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களுடன் வந்து, தேவனுடைய வார்த்தை உண்மையென நிரூபிக்கிறார். 338. ஆகவே, ஆழம் காணமுடியாத பாதாளம் (bottomless pits)அவனுக்கென்று ஆயத்தமாயிருப்பதை சாத்தான் அறிவான். பாருங்கள்? ஓ, என்னே! மரணம் மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் ஸ்தாபனங்களின் கொள்கைகள்-சவாரி செய்து, அவனைப் பின்பற்றினவர்களைத் தேவனிடமிருந்து நித்திய காலமாய் பிரித்தது. ஆம், நித்திய பிரிவினைக் குத்தான் அவன் அவர்களை வழி நடத்தினான். ஆனால் கிறிஸ்து சவாரி செய்து தம் சபையை உயிர்த்தெழுதலின் மகிமைக்குள் நடத்தினார். 339. நாம் முடிப்பதற்கு முன்பு 8-ம் வசனத்தின் கடைசி பாகத்தைப் பார்ப்போம்: "...அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது”. 340. "அவைகள்' என்பது யார்? பாருங்கள்? சரி, அந்திக்கிறிஸ்து ''மரணம்'' என்று அழைக்கப்படுகிறான். ''பாதாளம் அவன் பின்சென்றது.'' அவனுடைய நான்கு விதமான திட்டத்தைக் கவனியுங்கள். 341.அந்திக்கிறிஸ்து,வெள்ளைக்குதிரை;ஆவியினால்கொல்லுகிறான்.அந்திக்கிறிஸ்துவாயிருப்பதால் ஆவிக்குரிய மரணம். 342. இரண்டாவதாக-சிவப்பு குதிரை: சபையும் அரசாங்கமும் ஒன்றாக இணைந்தபோது, அரசியல் வல்லமை கொண்டு பட்டயத்தினால் கொல்லுகிறான். 343. கறுப்புக் குதிரை: ஆத்துமாக்கள்... அவன் போதகங்களை அணிந்து அவைகளை விலைக்கு விற்கிறான். அவள் விபச்சாரம் செய்கிறாள். அவன் ஆகாரத்தை தராசில் நிறுத்தி அதனை விற்கிறான். 344. நான்காவதாக- மங்கினநிறமுள்ள குதிரை: தேவனிடமிருந்து நித்தியமாகப் பிரிக்கிறான். (நான்கு என்னும் எண்ணிக்கையைப் பாருங் கள்) ஓ! தேவனுக்கு துதியுண்டாவதாக. 345. இப்பொழுது, கடைசியாக, முடிக்கும் நேரத்தில்... நீங்கள் பெற் றிருக்கிறீர்களா... நான் நேரம் கடந்துவிட்டேன். இன்னும் 10 நிமிடங்கள் தருவீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). அநேகம் பேர் நான் இங்கு பேசுவதைக்குறித்து என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். 346. எலியாவைப்பற்றி அதிக மூட வைராக்கியம் நம்மிடையே உண்டாயிருந்தது. ஆனால் அவை யாவும் மடிந்துவிட்டன. நான் இதைக் காணும் விதமாய் நீங்களும் காண தேவன் என் மூலம் துணை புரிவாராக! காண்பீர்களா? நாம் முயற்சிப்போம், பாருங்கள். 347. இப்பொழுது, முடிப்பதற்கு முன்பாக இதைக்கூற விரும்புகிறேன். சபை காலத்தின் கடைசி செய்தியாளன் தீர்க்கதரிசியாகிய எலியாவைப் போன்று அபிஷேகம் செய்யப்பட்டவன் என்று விசுவாசிக்காதவர்கள் 348. கவனியுங்கள். கடைசி சபை காலம் மரணமடைந்த பிறகு... என்ன நடந்தது என்று நீங்கள் பாருங்கள். அவர்களின் பிணங்களைக் காட்டு மிருகங்கள் தின்றுபோடும். நீங்கள் அதை அறிந்துள்ளீர்கள். அது உண்மை . அவ்விதம் நேரிடும் என்பதற்கு யேசபேல் உதாரணமா யிருக்கிறாள். 349. இப்பொழுது வெளிப்படுத்தல் 2:18-20 வசனங்களைத் திருப்புங் கள். ஓ! ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு அதைப் படித்தோம் இல்லையா? ஆம்! நாம் சற்று முன்பு அதைக் கண்டோம் என்று நான் நம்புகிறேன். ஆம், நல்லொழுக்கம் சிதைந்து போன காலம் அது என்று நான் இங்கு எழுதி வைத்துள்ளேன். யேசபேல் நவீன கள்ளச் சபைக்கு உதாரணமா யிருக்கிறாள்-மணவாட்டிக்கல்ல. அது அவ்விதமே இருந்தது. யேசபேல் எவ்விதம் உள்ளே (இஸ்ரவேலில்-தமிழாக்கியோன்) வந்தாள் என்பதைப் பாருங்கள்? பழைய ஏற்பாட்டின் யேசபேல் இக்காலத்து சபைக்கு முன் னடையாளமாயிருக்கிறாள். வெளி.2:18-20. "தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள்...'' 350. பாருங்கள்? சரியா? (சபையார் "ஆமென்” என்கின்றனர்-ஆசி) அது யேசபேலுடன் பூரணமாக ஒப்பிடப்பட்டுள்ளது. இப்பொழுது, முதலாவதாக... 351. கடைசி காலத்தில் தீர்க்கதரிசியின் செய்தி சபைக்கு உண்டாகி, அவர்களை மூல வார்த்தைக்கு திரும்பும்படி அழைக்குமென்பதற்கு ஆதார மாக வேதத்திலிருந்து அநேக வாக்கியங்களை எடுத்துக் காண்பிக்க முடியும். இப்பொழுது, கவனியுங்கள். அது சரியா? சபையார் "ஆமென்'' என்கின்றனர்) மல்கியா 4-ம் அதிகாரம், வெளிப்படுத்தல் 10:7 அவ்வாறு கூறுவதைக் கவனியுங்கள். பாருங்கள்? இயேசுவும் கூட, ''லோத்தின் நாட்களில் நடந்ததுபோல'' என்று கூறியுள்ளார். இவ் விதம் அநேக வாக்கியங்களை எடுத்துரைக்கலாம். 352. யேசபேல் தற்காலத்து நவீன சபைக்கு முன்னடையாளமாயிருக்கிறாள். இப்பொழுது கத்தோலிக்கர்களும், பிராடெஸ்டெண்டுகளும் ஒன்று சேர்ந்துவிட்டனர். அதை யாரும் தடுக்கமுடியாது, இரண்டும் ஸ்தாபனங்கள். ஒன்று தாய், மற்றொன்று குமாரத்தி, அவ்வளவுதான். அவைகள் ஒருவரோடொருவர் சந்தடி செய்து தர்க்கம் பண்ணினாலும் அவர்களிருவரும் வேசிகளே. இப்பொழுதும் நானாக அதைக் கூற வில்லை. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று வேதத்திலுள்ளதைத் தான் நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். 353. இப்பொழுது கவனியுங்கள். யேசபேல் தேவனுடைய கட்டளையின்படி கொல்லப்படுகிறாள். தேவன் யெகூவை அங்கு அனுப்பி, யேசபேல் ஜன்னலின் வழியாய் எறியப்பட்டு கொல்லப்படும்படி செய்கிறார். நாய்கள் அவள் மாம்சத்தைத் தின்றன. நான் கூறுவது சரியா? (சபையார் "ஆமென்'' என்கின்றனர் -ஆசி) முதலாவது எலியா தீர்க்கதரிசனம் உரைத்தபடி, அவளுடைய கணவனான தலையாகிய ஆகாப் ராஜாவின் இரத்தத்தை நாய்கள் நக்கின. நான் எதை வலியுறுத்திக் கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொண்டீர்கள் அல்லவா? 354. என்ன? முதலாம் எலியா ஏன் சபைகளினால் புறக்கணிக்கப்பட்டான்? அந்த சபைகளுக்கு யேசபேலும் ஆகாபும் தலைவர்களாக இருந்தனர்-சபையும் அரசாங்கமும் ஒன்றுபடுதல். எலிசா ஆகாபின் பாவங்களை எடுத்துரைத்து சபை முழுவதும் உண்மையான வார்த்தைக்குத் திரும்பும்படி கட்டளையிட்டான். 355. இக்காலத்து சபைக்கு இரண்டாம் எலியா வரும்போது சரியாக அதையே செய்வான்- 'மூல விசுவாசத்திற்கு திருப்புவான்'', அதனின்று நீங்கள் எவ்வாறு தப்பமுடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. அது உண்மை. உண்மையான வார்த்தைக்குத் திரும்புங்கள். அது உண்மை. 356. வார்த்தை அவர்களைக் கொன்றபிறகு, விசுவாசிக்காதவர்களின் பிணங்களைக் காண வேண்டுமானால் வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தைத் திருப்புங்கள். இப்பொழுது, தேவனுடைய வார்த்தை அவர்களைக் கொன்று போடும். அது உங்களுக்குத் தெரியும். சரி. கிறிஸ்து வரும் போது என்ன நேரிடுகிறதென்பதைக் கவனியுங்கள். வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரம் 17-ம் வசனம் தொடங்கி: பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக் கண்டேன். 357. இப்பொழுது, அது உண்மை . நாம் அதற்கு மேலே படிக்கும் போது; (17-வசனத்திற்கு மேலுள்ள வசனங்கள் - பதினைந்தாம் வசனம்தமிழாக்கியோன்) இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார். "ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா'' என்று அழைக்கப்பட்டார். பதின்மூன்றாம் வசனத்தில் ''அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை'' என்றுள்ளது. பாருங்கள்? இப்பொழுது, இங்கே அவர், "ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா” என்று அழைக்கப்படுகிறார். நான் ஒரு தூதனைக் கண்டேன். 358. இப்பொழுது கவனியுங்கள். அவர் புறப்பட்டுச் செல்கிறார். புறஜாதிகளை வெட்டும்படி அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகின்றது... 359. "அவருடைய வாயிலிருந்து', தேவனுடைய வாயிலிருந்து மோசேயின் வாய்க்கு வந்ததுபோல. ....இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின் மேலும், அவருடைய தொடையின் மேலும் எழுதப் பட்டிருந்தது. 360. இப்பொழுது கவனியுங்கள். அவர் சங்கரித்துக் கொண்டே வருகிறார். யாரை அவர் சங்கரிக்கிறார்? யேசபேலையும் கள்ளத்தீர்க்கதரிசியாகிய ஆகாபையும்.பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து... மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடி வாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான். 361. அவர்களை அவர் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இரையாகக் கொடுக்கிறார். வெளிப்படுத்தலின் புத்தகம் வேறொரு அதிகாரத்தில் "பட்டயத்தினாலும் மரணத்தினாலும் பூமியின் மிருகங்களாலும் கொல் லப்படுவார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. பாருங்கள்? யேசபேல் சபை-அவளுடைய சரீரத்தைப் பறவைகளும் பூமியின் மிருகங்களும் பட்சிக்கும், ஆகாப் யேசபேல் இவர்களின் சரீரங்களைப் பட்சித்தது போன்று, யேசபேல் சபையின் அங்கத்தினர்களின் சரீரங்களையும் அவை பட்சிக்கும். நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கு விளங்குகின்றதா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்) சரி. 362. எலியா... ஓ! ஆகாப், யேசபேல் இவர்களின் நாட்களில் எலியா தீர்க்கதரிசியாயிருந்தான், யேசபேலின் சபைக்கும் அதையே செய்வதாக கர்த்தர் உரைக்கிறதாவது என்று வேதத்தில் அவர் வாக்களித்துள்ளார். ஆவியின் வடிவில் எலியாவின் ஊழியம். 363. கவனியுங்கள். எலியா, அவன் காலத்தில் சரிவர அடையாளங்களின் மூலம் பூரணமாக நிரூபிக்கப்பட்டாலும், அக்காலத்தவரை தேவனுடைய வார்த்தைக்குத் திருப்ப அவனால் முடியவில்லை. அது சரியா? எலியா தன்னால் இயன்றவரை முயன்றான். அவன் அவர்களுக்கு அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பித்தான். அவர்களோ அவனைப் பார்த்து நகைத்தனர். தற்கால எலியாவின் ஊழியத்திலும் அதையே அவர்கள் செய்வார்கள். அவர்களைத் தேவனுடைய வார்த்தைக்குத் திருப்ப அவனால் இயலவில்லை. கோடிக்கணக்கானவர்களில்... 364. சபையே! இதைக் கூர்ந்து கேளுங்கள். இதைக் குறித்து சிறிது குழப்பமடைந்துள்ளவர்களே, சற்று கூர்ந்து கவனியுங்கள் 365. எலியாவின் காலத்திலிருந்த கோடிக்கணக்கான மக்களில் - யேசபேலும் ஆகாபும் இன்றைய நம் அரசாட்சிக்கு முன்னடையாளமிருந்த அந்த காலத்தில் எலியாவின் போதகத்தின் மூலம் முழு உலகிலேயே அக்காலத்தில் 700 பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். அது சரியா? ஆம், அது சரி. 366. பாருங்கள், அதை எலியா அவர்களில் ஒருவரையும் அவ்விதமாக அறியாமலிருந்தான். நீங்கள் பாருங்கள். ஒரு நாள் தேவன் திறந்தார். தேவன் முத்திரைகளில் ஒன்றை உடைத்து, ஸ்தாபனங்களின் பிரமாணங்களுக்கு முன்னால் முழங்காற்படியிடாத 700 பேரை அவருக்காக வைத்திருக்கிறார் என்று காண்பித்தார். அவர் புஸ்தகத்திலுள்ள இரகசியத்தை அவனுக்குக் காண்பிக்கும்வரை அவன் மாத்திரமே இரட்சிக்கப் பட்டுள்ளதாக அவன் கருதியிருந்தான். தேவன் எலியாவுக்கு அவருடைய புஸ்தகத்தைத் திறந்து, 'சற்று பொறு மகனே; ஒளிந்து கொண்டிருக்கும் 700 பேரை எனக்காக வைத்திருக்கிறேன். அவர்களுடைய பெயர்கள் உலகத்தோற்றத்துக்கு முன்னால் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் எனக்குச் சொந்தமானவர்கள்'' என்றார். வ்யூ. தேவன் முத்திரைகளைத் திறந்தார். 367. ஆகவேதான் யோவான் அதிக சத்தமிட்டான் என்று அன்று இரவு பார்த்தோம். அவனுடைய பெயரை அவன் அப்புஸ்தகத்தில் கண்டிருக்க வேண்டும். பாருங்கள்? ஒரு நாள் தேவன் திறந்தார் ..... 368. எலிசா முழு இருதயத்துடன் பிரசங்கம் செய்தான். எல்லாவற்றையும் தன்னால் இயன்றவரை அவன் செய்தான். என்றாலும் அவர்கள் அவனை நிந்தித்து, ''நீ தான் இவையெல்லாவற்றிற்கும் காரணம். நீ ஆவிகளுடன் தொடர்பு கொள்பவன் (Spiritualist). இந்த தொந்தரவை நீதான் உண்டாக்குகிறாய். இதற்கெல்லாம் குற்றவாளி நீயே'' என்றனர். இப்படி அநேகக் காரியங்களைக் கூறி அவன் மேல் பழி சுமத்தினர். யேசபேலும் அவனுடைய தலையைத் துண்டித்து விடுவதாகப் பயமுறுத்தினாள். அது சரி. எல்லோருமே அவனுக்கு விரோதமாயிருந்தனர். 369. அப்பொழுது அவன், 'கர்த்தாவே, நீர் சொன்ன யாவையும் நான் செய்து முடித்தேன், உம்முடைய வார்த்தையில் நான் அப்படியே நிலை நின்றேன். நான் பயம் எதுவுமின்றி ராஜாவின் முன்னிலையில் சென்று நீர் கூறச்சொன்ன எல்லாவற்றையும், 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்று தைரியமாகக் கூறினேன். நீர் எனக்குக் கூறின யாவும், நான் அவர்களுக் குக் கூறினேன். அவைகளில் ஒன்றாகிலும் சம்பவிக்காமற் போகவில்லை. ஆனால் இப்பொழுது அவர்களிடையே நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன். அவர்கள் என்னைக் கொல்ல முயல்கின்றனர்” என்றான். 370. தேவன் அவனை நோக்கி, "நான் முத்திரைகளில் ஒன்றைத் திறந்து உனக்கு காண்பிக்க விரும்புகிறேன். ஸ்தாபனங்களின் கொள்கை களுக்கு முழங்காற்படியிடாத- ஸ்தாபனங்களுடன் சேராத-700 பேரை எனக்காக வைத்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? 700 பேர் எடுக்கப்படுதலுக்கு ஆயத்தமாயுள்ளனர்'' என்றார். ஓ! ஓ! அவர் தமது தீர்க்கதரிசியிடம் அவனுக்கு மாத்திரமே அவர் தம் வார்த்தையை வெளிப்படுத்தி, வேத வாக்கியங்களின் மூலம் உண்மையைக் காணச்செய்கிறார். "இந்த சந்ததியில் தெரிந்து கொள்ளப்பட்ட 700 பேர்களின் பட்டியலை வைத்திருக்கிறேன்:' 700 பேர்கள் இருக்கின்றனர். (இக்காலத் தையொட்டிக் கூறவேண்டுமானால்) அவர்கள் மதசம்பந்தமான ஸ்தாபனங்களுக்கும் அவைகளின் கொள்கைகளுக்கும் முழங்காற்படியிடாமல் இருக்கின்றனர்'' என்றார். 371. நான் கூறுவதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? அது வார்த்தையின்படி அமைந்திருப்பதால் அவ்விதமாகவே இருக்கவேண்டும். அந்த மனிதன் வரும்போது, நான் இப்பீடத்தின் மேல் இப்பொழுது நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக அவன் தீர்க்கதரிசியாயிருப்பான். பாருங்கள்? அவன் தேவனுடைய அந்த வார்த்தையில் முற்றிலும் நிலைத்திருப்பான். அவன் எந்த ஒரு ஸ்தாபனத்தின் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டான். அது உண்மை. அவன் எலிசாவைப் போன்றும் யோவானைப் போன்றும் காட்டில் சஞ்சரிக்கி றவனாக இருப்பான். அவன் நன்னடத்தை கெட்ட ஸ்திரீகளை வெறுத்து அவர்களைத் தாக்குவான். வ்யூ! எலியாவும் யோவானும் அதையே செயதனர். பாருங்கள்? பாருங்கள்? அவன் தேவனுடைய வார்த்தையில் முற்றிலும் நிலைநின்று, ஸ்தாபனங்களை எதிர்ப்பான். ஸ்தாபனங்கள்? ''ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்'', பாருங்கள்? உண்மையாகவே அவர் அதை நிறைவேற்றினார். 372. இப்பொழுது நண்பர்களே, அதைப் பாருங்கள். நான்காம் முத் திரை இங்கே திறக்கப்பட்டுவிட்டது. எனக்குத் தெரிந்தவரை, நான்கு குதிரைகளின் மேலிருப்பவர்களைக் குறித்து நான் உங்களுக்குத் தெரி யப்படுத்தினேன். இவை மாத்திரமே பூமியில் சம்பவித்தன. 373. அடுத்த முத்திரை-பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள்-பரலோகத்தில் சம்பவிப்பதை நாம் காணலாம். 374. இப்பொழுது, இங்கே நான் முடிக்கு முன்பாக, எழுதி வைத்துள்ள சில வார்த்தைகளைக் கூறிட நான் விரும்புகிறேன். நாம் இந்த நான்கு முத்திரைகளை, முதல் நான்கு முத்திரைகளை ஒவ்வொன்றாகக் கண்டோம். 375. இப்பொழுது காட்சியானது பூமியிலிருந்து மாறி பரலோகத்துக்குச் செல்வதை நாம் நாளை இரவு காணலாம். அவர் பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களை நோக்கிப் பார்க்கிறார். அதற்கு அடுத்த இரவு நியாயத்தீர்ப்பு விழுவதை நாம் காணலாம். 376. நான்காவது இரவு அல்லது கடைசி இரவாகிய ஞாயிறு இரவன்று-இவைகளின் அர்த்தமென்னவென்பதை நான் இதுவரை அறியேன். உங்களைப் போலவே நானும் அவைகளைப் படித்திருக்கிறேன்.-ஆனால் 'பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதல் உண்டாயிருந்தது. அங்கு ஏதோ ஒன்று சம்பவித்தது. அவர் அதை வெளிப் படுத்தித் தருவாரென்று எதிர்பார்க்கிறேன். அவர் நிச்சயமாக அதை வெளிப்படுத்தித் தருவார் என்னும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். 377. நாம் வேதாகமத்திலுள்ள அநேக பாகங்களைத் திருப்ப வேண் டிய அவசியம் ஏற்பட்டது. கிறிஸ்து வந்து அந்திக் கிறிஸ்துவைச் சங்கரிப்பார் என்பதைக் காண்பிக்க வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தை நாம் பார்க்க வேண்டியதாயிருந்தது. ஆகவே தான் இம் முத்திரையைக் குறித்த இரண்டு வசனங்களை மாத்திரம் நான் சிந்தித்து, அதன் பின்பு இவைகளையெல்லாம் நிரூபிக்க நான் வேதாகமத்திலுள்ள வித்தியாசமான பாகங்களைப் படிக்க அவசியம் உண்டானது. கிறிஸ்து வரும் போது அவர் அந்திக் கிறிஸ்துவைக் கொன்று அவனுடைய முடிவை காண்பிக்க நான் வெளிப்படுத்திய விசேஷம் 19-ம் அதிகாரத்தை உங்க ளுக்குக் காண்பித்தேன். 378. இக்கடைசி நாட்களுக்கென்று நியமிக்கப்படும் ஏழாம் தூதன் மல்கியா 4-ம் அதிகாரத்தில் கூறியுள்ளபடி, எலியா தீர்க்கதரிசியைப் போல் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு, தேவனுடைய மூலவார்த்தையை இச்சந்ததிக்கு வெளிப்படுத்துவான் என்பதை நிரூபிக்க நாம் வெளிப் படுத்தல் 10-ம் அதிகாரத்தைப் படிக்க வேண்டியதாயிருந்தது. எலியா தீர்க்கதரிசி யேசபேலுக்குச் செய்தவாறு இம்மனிதன் ஆவிக்குரிய யேசபேலாகிய ஸ்தாபனங்களுக்குச் செய்வான். அது சரியென்பதை நிரூ பிக்க நான் வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரம் 1 முதல் 7 வசனங்களுக்கு செல்ல வேண்டியதாயிற்று. அல்லாமலும், மல்கியா, ஆமோஸ் தீர்க்க தரிசிகளின் புத்தகங்களையும் நாம் படிக்கவேண்டியதாயிருந்தது. 379. எலியா என்பவன் தீர்க்கதரிசனம் உரைத்து யேசபேலை அந்த குறிப்பிட்ட சந்ததியில் குற்றப்படுத்தின ஒரு தீர்க்கதரிசி. 380. ஆகவே, எலியா மரிக்கவேயில்லை. நிச்சயமாக அவன் மரிக்கவே யில்லை. எண்ணூறு வருடங்கள் கழித்து மறுரூப மலையில் இயேசு கிறிஸ்துவின் பக்கத்தில் அவன் காணப்பட்டான். அவன் மரிக்கவேயில்லை . 381. இப்பொழுது இக்கடைசி நாட்களில் தேவனுடைய வாக்கின்படி அவன் ஆவி ஒரு மனிதனை அபிஷேகிக்கும் இயற்கையான யேசபேலுக்கு என்ன நேரிட்டதோ, அதுவே கடைசி காலத்தில் ஆவிக்குரிய யேசபேலுக்கும் நேரிடும் என்று வாக்களிக்கப்படுகின்றது. 382. எனவே, அதை நிரூபித்து உங்கள் சந்தேகங்களை அகற்ற, நான் வேதாகமத்தை அங்குமிங்கும் திருப்ப வேண்டியதாயிருந்தது. உங்களுக்குச் சந்தேகம் ஏதாகிலும் இருந்தால் ஒரு கடிதம் அல்லது ஒரு குறிப்பை எழுதி எனக்குத் தெரியப்படுத்துங்கள்... 383. கடைசி நாட்களில் அவர்களுடைய மாம்சத்தை மிருகங்கள் அன்று பட்சித்ததுபோல் இன்றும் பட்சிக்கும் என்பதும் கூட எவ்வளவு அழகாக பொருந்துகின்றது! 384. எனக்குத் தெரிந்தவரை, தேவன் முன்னறிவித்தபடி நான்கு குதிரைகளின் மேலேறியிருப்பவர்களைக் குறித்து எனக்கு அளிக்கப்பட்ட வெளிப்பாடு மிகவும் உண்மையாகும். 385. இயேசுவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! (சபையார் களிகூறுகின்றனர் -ஆசி) நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 386. இப்பொழுது ஞாபகங்கொள்ளுங்கள், ஒன்றுமில்லாத... (அது தான்; முன் செல்லுங்கள்; அது நல்லது) ஸ்தாபனங்களிலுள்ள அங்கத் தினர்களின் பேரில் எவ்வித விரோதமுமின்றி... ஏனெனில் தேவனுடைய பிள்ளைகள் கத்தோலிக்க ஸ்தாபனங்களிலும். மெதோடிஸ்ட் ஸ்தா பனங்களிலும், பாப்டிஸ்ட் ஸ்தாபனங்களிலும் உண்டு, வெளிச்சத்தைக் கண்ட மாத்திரத்தில் இத்தகைய ஸ்தாபனங்களிலிருந்து வெளி வந்தவர் இன்றிரவு எத்தனை பேர் உள்ளனர்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். (சபையார் "ஆமென்'' என்கின்றனர் - ஆசி). உங்களைப் போன்ற தேவனுடைய பிள்ளைகள் அத்தகைய ஸ்தாபனங்களில் இருக் கின்றனர். ஆனால், ஸ்தாபனங்களின் முறைமை தான் அவர்களை மரணத்தில் ஆழ்த்துகின்றது. அவர்கள் சத்தியத்தைக் கேட்கக் கூடாத வாறு அந்திக் கிறிஸ்துவின் ஆவி அவர்களை அந்த ஸ்தலங்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறது. 387. அன்றொரு இரவு நான் முத்திரிக்கப்படுதலைக் குறித்து பேசின போது-ஒரு மனிதன் யூபிலி வருஷத்தின் அழைப்பைக் கேட்டபிறகும் விடுதலையாக மறுத்தல், அவன் கதவுநிலைக்குக் கொண்டு செல்லப் பட்டு, அவன் காது கம்பியினால் குத்தப்பட வேண்டும். காது என்பது நாம் கேட்பதற்கென்று கொடுக்கப்பட்டதாகும். விசுவாசம் கேள்வியினால் கேட்பதனால் (hearing) வரும். அவன் சத்தியத்தைக் கேட்ட பிறகும், அவனுக்களிக்கப்பட்ட விடுதலையை அவன் ஏற்றுக்கொள்ள மறுத்தால், ஸ்தாபனத்தின் எஜமானனை அவன் வாழ்நாள் முழுவதும் சேவிக்க நேரிடும். ஆமென். 388. ஓ! ஓ, என்னே ! அவர் அதிசயமானவரல்லவா? (சபையார் "ஆமென்'' என்கின்றனர் -ஆசி). நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இப்பொழுது நமது கரங்களை உயர்த்தி, அவரை நாம் தொழுது கொள்ளுவோம். நான் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் (மகிமை) சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்திலே. 389. (நான் நேசிக்கிறேன் என்ற பாடலை சகோதரன் பிரான்ஹாம் மெளனமாக பாடுகிறார் -ஆசி) இப்பொழுது நம் தலைகளை வணங்குவோம். இப்பல்லவியை மெளனமாகப் பாடும்போது (hum) அவரை ஆராதிப்போம். (சகோதரன் பிரான்ஹாம் நான் நேசிக்கிறேன் என்று தொடர்ந்து மெளனமாக (hum) பாடுகிறார்.) 390. கர்த்தாவே, நாங்கள் உமக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். உமக்காகவும் உமது ஜனங்களுக்காகவும் நான் மகிழ்ச்சியுறுகிறேன். ஓ, கர்த்தாவே எங்களுடைய இரட்சிப்பைக் கல்வாரியில் நீர் சம்பாதித்தீர். அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். 391. கர்த்தாவே, உமது ஆவியினால் எங்களை சோதித்தறியும். எங்களில் பொல்லாங்கு, அல்லது தேவனுடைய வார்த்தையின் பேரில் அவிசுவாசம் ஏதாவது காணப்பட்டால், அல்லது உம்முடைய ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் ஆமோதித்து 'ஆமென்' என்று சொல்லக்கூடாதவர் யாராவது இங்கிருந்தால், வெள்ளைக்குதிரையின் மேல் வீற்றிருக்கும் பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது இறங்கி வந்து, தமக்குச் சொந்தமானவர்களை அந்திக்கிறிஸ்துவின் ஆவியிலிருந்து விடுதலையாக்கி கொள்வாராக. 392. கர்த்தாவே, அவர்களை வெளியே கொண்டுவாரும், அவர்கள் இப்பொழுதே மனந்திரும்பி உம்மிடம் விரைவில் வந்து, எண்ணெயினாலும் திராட்சரசத்தினாலும் நிறைந்து, காயீனின் மரணம் என்னும் ஸ்தாபன அங்கியைக் களைந்துபோட்டு, மணவாளன் அளிக்கும் நித்திய ஜீவன் என்னும் வெண்ணிற அங்கியை அணிந்து கொள்ள அருள் புரியும். அப்பொழுது அவர்கள் என்றாவது ஒரு நாள் தேவனுடைய வார்த்தையால் உறுதிபடுத்தப்பட்ட உயிர்த்தெழுதலில் பங்கு கொண்டு கலியாண விருந்தில் பிரவேசிப்பார்கள். கர்த்தாவே, அதை அருளும். மக்கள் உம்முடைய சமூகத்தில் காத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அவர்களுடைய இருதயங்களை ஆராய்ந்து பாரும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். (நான் நேசிக்கிறேன் என்று சகோதரன் பிரான்ஹாம் மெளனமாக பாட ஆரம்பிக்கிறார் - ஆசி) 393. இப்பொழுது என் சகோதரனே, என் சகோதரியே, என் நண்பர்களே! இப்பொழுது உங்கள் இருதயங்களை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் மத்தியில் நான் வெகுகாலம் இருக்கின்றேன். ஏறக்குறைய முப்பத்து மூன்று வருடங்களாக நான் இருந்து வந்திருக்கிறேன். நான் கர்த்தரின் நாமத்தில் கூறின ஏதொன்றாகிலும் நிறைவேறாமல் இருந்திருக்கின்றதா? (சபையார் “இல்லை'' என்கின்றனர் -ஆசி) தருணமுள்ள பொழுதே கிறிஸ்துவைத் தேடுங்கள். அவ்விதம் செய்யமுடியாத தருணம் வெகு விரைவில் வரக்கூடும். பாருங்கள்? அவர் எந்த நேரத்திலும் தாம் வகித்துள்ள மத்தியஸ்த ஸ்தானத்தை விட்டுப் புறப்படக்கூடும், அப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் கதறினாலும், அன்னிய பாஷையில் பேசினாலும், அங்குமிங்கும் ஓடினாலும் எதை வேண்டுமா னாலும் செய்தாலும், உலகத்திலுள்ள ஒவ்வொரு சபையிலும் சேர்ந்தாலும் ஒரு பிரயோஜனமுமிராது. ஏனெனில் உங்கள் பாவங்களைப் போக்க வெண்மையாக்கும் திரவம் அப்பொழுது இராது. அப்படியானால் உன் நிலை அப்பொழுது என்னவாயிருக்கும்? 394. நல்லது, அவர் இன்னமும் தேவனுடைய சிங்காசனத்தில் வீற்றிருந்து பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று என் முழு இருதயத்துடன் நம்புகிறேன். ஆனால் விரைவில் அவர் சிங்காசனத்தை விட்டு எழுந்து, அவர் மீட்டுக் கொண்டவர்களைச் சொந்தமாக்கிக் கொள்ளப் புறப்பட்டு வருவார். இப்பொழுது அவர் மீட்பின் இனத்தானின் ஊழி யத்தில் ஈடுபட்டிருக்கிறார்; ரூத் அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். 395. போவாஸ் இனத்தானின் உத்தியோகத்தை நிறைவேற்றின பின்பு அவனுடைய உரிமைகளைப் பெற்றுக் கொண்டான் என்று வேதம் கூறு கிறது. அவ்வாறே இயேசுவும் மீட்பின் இனத்தானின் ஊழியத்தைச் செய்து முடித்த பின்னர், புறப்பட்டு வந்து புஸ்தகத்தை எடுக்கிறார். அவர் சிங்காசனத்தை விட்டு எழுந்துவிட்டபடியால், பரிந்து பேசும் ஊழியம் அப்பொழுது முடிவடைந்திருக்கும். கிருபாசனத்தில் அப்பொ ழுது இரத்தம் இராது. ஆகவே அது நியாயாசனமாக மாறிவிடும். 396. என்றாவது ஒரு நாள் 'எடுக்கப்படுதல் இனிமேல் நிகழும் என்று நான் நினைத்திருந்தேன்' என்று நீங்கள் கூற, 'அது ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது' என்று ஒரு சத்தம் உங்களிடம் பதிலுரைக்கும் நிலைக்கு வந்து விடாதீர்கள். தேவன் உங்களுக்கு உதவி புரிவாராக! நாம் தலை வணங்குவோம். 397. சகோ. நெவில்! ஆராதனையை முடிப்பதற்கு, அல்லது என்ன செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்வதற்கு, முன்னால் வாரும். நாளை இரவு நாம் மறுபடியும் சந்திக்கும்வரை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 26